சமீபத்திய செய்தி

பிரதமரின் மே தினச் செய்தி

 

அனைத்து குடிமக்களின் முன்னேற்றத்திற்காகவும் இரவு, பகல் பாராது பாடுபடும் அன்பான உழைக்கும் மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டு வருடங்களுக்கும் மேலாக உலகளாவிய தொற்றுநோய் நிலைமைக்கு மத்தியில் பல்வேறு பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்ட நீங்கள், தற்போது நாட்டில் உருவாகியிருக்கும் இப்பொருளாதார நெருக்கடியினாலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பது இரகசியமல்ல.

எதிர்பாராத விதமாக முகம் கொடுக்க நேரிட்டுள்ள இப்பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியிலும், மிகுந்த அர்ப்பணிப்புடனும், நிதானத்துடனும் செயல்பட்டு நீங்கள் நாட்டுக்கு சிறந்த முன்மாதிரியாக திகழ்கின்றீர்கள்.

தொழிலாளர் போராட்டத்துக்காக உங்களுடன் கைக்கோர்த்திருந்த நான், பொறுப்பு கூற வேண்டிய சகல சந்தர்ப்பத்திலும் உங்களது உரிமைகளுக்காக நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகளையும் பொறுப்புகளையும் ஒருபோதும் புறக்கணித்ததில்லை.

எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள இப்பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நாம் அனைவரும் ஒன்றாக கைக்கோர்த்து, முதலில் இச்சவாலை வெற்றி கொள்ள வேண்டும்.

பொருளாதார நெருக்கடியை நிர்வகிப்பதற்கு இதுவரை முன்னெடுக்க வேண்டிய சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்திருப்பதுடன், தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அதற்கான ஆதரவை பெற்று வருகிறது.

இந்த அனைத்து முயற்சிகளினதும் இறுதி நோக்கம் ஒரு சிறந்த நாட்டை நிர்மாணிப்பதாகும். அதற்காக உழைக்கும் மக்களின் மகத்தான அர்ப்பணிப்பை சர்வதேச தொழிலாளர் தினமான இன்றைய தினத்தில் மிகுந்த மரியாதையுடன் நினைவு கூருகிறேன்.

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உலக வங்கி 600 மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முதற் கட்டமாக 400 மில்லியன் டொலர்கள் விரைவில் வழங்கப்படும் என உலக வங்கியின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி திருமதி சியோ கெண்டா (Chiyo Kanda) தெரிவித்துள்ளார்.

உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று (26) பிற்பகல், கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே திருமதி சியோ கெண்டா இதனைத் தெரிவித்தார்.

மருந்து மற்றும் சுகாதார தேவைகள், சமூக பாதுகாப்பு, விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் எரிவாயு தேவைகளை பூர்த்தி செய்ய இந்நிதி பயன்படுத்தப்படும். தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்குவதாகவும் உலக வங்கி பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

உலக வங்கியின் இந்நாட்டு ஆலோசகர் ஹூசாம் அபுதாகா (Husam Abudagga), மனித அபிவிருத்தித் தலைவர் ரெனே சோலானோ (Rene Solano), நிதி அமைச்சர் அலி சப்ரி, வர்த்தக மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், நிதி அமைச்சின் செயலாளர் கே.எம்.எம். சிறிவர்தன, தொழில் அமைச்சின் செயலாளர் எம்.பி.டி.யு.கே மாபா பத்திரன, திறைசேரியின் பிரதிச் செயலாளர் ஆர்.எம்.பி. ரத்நாயக்க மற்றும் தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர்.எச்.டபிள்யூ.ஏ.குமாரசிறி ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

வெகுசன ஊடக அமைச்சராக நேற்று (18) பதவியேற்றுக் கொண்ட கலாநிதி நாலக கொடஹேவா இன்று (19) மாலை தனது அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சின் பணியாளர்கள் புதிய அமைச்சரை வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

17 அமைச்சர்கள் கொண்ட புதிய அமைச்சரவை ஜனாதிபதி முன்னிலையில் இன்று (18) முற்பகல் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளது.

இதில் டக்ளஸ் தேவானந்தா, அவர் ஏற்கனவே வகித்த மீன்பிடி அமைச்சராக மீண்டும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இதேவேளை, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் சுற்றாடல் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அண்மையில் அமைச்சரவை உறுப்பினர்கள் தங்களது பதவிகளை இராஜினாமா செய்த நிலையில், மீண்டும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருந்த அலி சப்ரி, ஜீ.எல். பீரிஸ், தினேஷ் குணவர்தன, ஜோன்ஸ்டன் பெனாண்டோ ஆகியோரில், ஜோன்ஸ்டன் பெனாண்டோ வகித்த அமைச்சு பதவி கனக ஹேரத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் வெளி விவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோர் சர்வதேச நாணய நிதியத்திற்கு பேச்சுவார்த்தைக்காக சென்றுள்ள நிலையில், அவர்களது அமைச்சுகளில் மாற்றங்கள் இல்லை என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, தற்போது பிரதமர் உள்ளிட்ட 20 பேர் அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

01. திரு. தினேஷ் குணவர்தன            - பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள்  மற்றும் உள்ளூராட்சி               

02. திரு. டக்ளஸ் தேவானந்தா                             - கடற்றொழில் அமைச்சு

03. திரு. ரமேஷ் பத்திரன                                       - கல்வி, பெருந்தோட்டக் கைத்தொழில்

04. திரு. பிரசன்ன ரணதுங்க                                 - பொதுமக்கள் பாதுகாப்பு, சுற்றுலா

05. திரு.திலும் அமுனுகம                                       - போக்குவரத்து, கைத்தொழில்

06. திரு கனக ஹேரத்                                              -  நெடுஞ்சாலைகள்

07. திரு.விதுர விக்கிரமநாயக்க                           - தொழில் அமைச்சு

08. திரு.ஜானக வக்கும்புர                                       - விவசாயம், நீர்ப்பாசனம்

09. திரு.ஷெஹான் சேமசிங்க                               - வர்த்தகம், சமுர்த்தி அபிவிருத்தி

10. திரு. மொஹான் பிரியதர்ஷன டி சில்வா    - நீர் வழங்கல்

11. திரு. விமலவீர திஸாநாயக்க                           - வனவிலங்கு மற்றும் வன வளப் பாதுகாப்பு

12. திரு. காஞ்சன விஜேசேகர                                 - வலுசக்தி, மின்சக்தி

13. திரு. தேனுக விதானகமகே                               - இளைஞர் மற்றும் விளையாட்டு

14. திரு. நாலக கொடஹேவா                                - வெகுசன ஊடக அமைச்சு

15. திரு. சன்ன ஜெயசுமன                                     - சுகாதாரம்

16. திரு. நசீர் அஹமட்                                             - சுற்றுச்சூழல்

17. திரு. பிரமித பண்டார தென்னகோன்           - துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை

தற்போது நிலவுகின்ற பொருளாதார மற்றும் உலகளாவிய நெருக்கடியான நிலையில், வரலாற்றில் மிகப் பெரிய சவாலை இலங்கையர்களாகிய நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஒற்றுமையுடனும், சரியான புரிந்துணர்வுடனும் நாம் அதனை வெற்றிகொள்ள வேண்டும். சவால்களுக்கு முகங்கொடுப்பதில் நீங்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் ஏராளம். எமது அரசாங்கத்தின் மூலம் தற்போதைய நெருக்கடியான நிலையில் இருந்து மக்களின் இயல்பு வாழ்வை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

எவ்வாறாயினும் சிங்கள, தமிழ் புத்தாண்டுப் பிறப்பை புதிய எதிர்பார்ப்புகளுடன் வரவேற்பது பழங்காலத்திலிருந்தே இடம்பெறும் நமது பாரம்பரியம் ஆகும். இந்த ஆண்டும் அந்த எதிர்பார்ப்புகளுடனும், புதிய நம்பிக்கைகளுடனும் புத்தாண்டுப் பிறப்பைக் கொண்டாடுகிறோம்.

புத்தாண்டின் உண்மையான உரிமை நமது குழந்தைகளுக்கே உண்டு. குழந்தைகளுக்கு புத்தாண்டு தினத்தின் மகிழ்ச்சியைப் பாதுகாத்துக் கொடுப்பதில் நீங்கள் அதிக அக்கறை செலுத்துகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்.

அதேபோன்று, புத்தாண்டு கொண்டாட்டங்களை அனுபவிப்பதற்காக தமது பிள்ளைகளுடன் இணைவதற்கான வாய்ப்பை இழந்த, விசேட கடமைகளில் ஈடுபட்டு இருப்பவர்களைப் போன்று, வெளிநாடுகளில் இருக்கும் அனைவரினதும் அர்ப்பணிப்பை நினைவுகூருகிறேன்.

மலர்ந்துள்ள சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு, நிலவுகின்ற சவால்களை வெற்றிகொள்ளும் சுபீட்சம் நிறைந்த இனிய புத்தாண்டாக அமைய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன். 

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்கவும், நிதி அமைச்சின் புதிய செயலாளராக கே.எம்.எம். சிறிவர்தன ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் ஜனாதிபதியினால் நியமனக் கடிதங்கள் கையளிக்கப்பட்டன

பல்தரப்பு விவகாரங்கள் மற்றும் கடன் நிலைபேறான தன்மை தொடர்பான ஜனாதிபதி ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக புகழ்பெற்ற நிதி மற்றும் பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (6) நியமித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர், பொதுநலவாய செயலகத்தின் பொருளாதார விவகாரப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திப் பயிற்சி தொடர்பான பேராசிரியர் மற்றும் உலக வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணர் பேராசிரியர் சாந்த தேவராஜன், நிறுவனத் திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் மற்றும் IMFஇன் ஆபிரிக்க திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் கலாநிதி திருமதி ஷர்மினி குரே ஆகியோர் இந்த ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக செயற்படுவார்கள். 
சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்புபட்டுள்ள இலங்கையின் நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தல், தற்போதைய கடன் நெருக்கடிக்குத் தீர்வுகாணல் மற்றும் இலங்கையின் நிலைபேறான மீட்சிக்கு அவசியமான வழிகாட்டல்களை வழங்குதல் என்பன இந்த ஜனாதிபதி ஆலோசனைக் குழுவின் பொறுப்புக்கள் ஆகும்.

தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண ஒன்றிணையுமாறு, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

பல்வேறு பொருளாதார மற்றும் உலகளாவிய காரணிகளால் தற்போதைய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு ஜனநாயக கட்டமைப்பிற்குள்ளேயே தீர்வு காணப்பட வேண்டி உள்ளது.

அனைத்து குடிமக்கள் மற்றும் எதிர்கால சந்ததியினருக்காக, தேசிய தேவை எனக் கருதி ஒன்றிணைந்து செயற்பட வேண்டியுள்ளது. அதற்காக அமைச்சுப் பதவிகளை ஏற்று, தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு ஒன்றிணையுமாறு, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

மிரிஹாணையிலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டுக்கருகில் உருவான ஆர்ப்பாட்டம் கலவரமாக மாறுவதற்கு அடிப்படைவாத குழுவொன்றே காரணமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இக்கலவரத்துக்கு காரணமான பலர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் திட்டமிட்டு செயற்படும் அடிப்படைவாதக் குழுவென்பது தெரியவந்திருப்பதாகவும் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

5வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் பங்கெடுப்பதற்காக இலங்கை வந்திருந்த பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.எ.கே.அப்துல் மோமனுக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸிற்குமிடையில் கடந்த 30 ஆம் திகதி இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது வர்த்தக உடன்படிக்கை, உயர் கல்விக்கான ஒத்துழைப்பு, ஆடைக் கைத்தொழிலை தரமுயர்த்துதல், கொழும்பு மற்றும் சிட்டாகொங் துறைமுகங்களை இணைத்தல் மற்றும் சர்வதேச வர்த்தகத்துடன் இணைதல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.
 

5வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் பங்கெடுப்பதற்காக இலங்கை வந்திருந்த தாய்லாந்தின் பிரதி பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான டொன் பிராமுட்வினெய் கடந்த 30 ஆம் திகதி இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸை சந்தித்து பேச்சு நடத்தினார்.

இச்சந்திப்பின்போது தேராவாத பௌத்தம், புத்த சாசனம், மதகுருமார்களின் பிரயாணம், இலங்கை இரத்தினக்கல் கைத்தொழிலுக்கு ஒத்துழைப்பு வழங்குதல், சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல், நெற்பயிர்ச் செய்கையில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

Latest News right

இலங்கையின் ஊடகக் கல்வித் துறையில் ஒரு புதிய அத்தியாயம் சர்வதேச ஒத்துழைப்புடன் MMC–ITN கல்வி வளாகம் புதிய மைல்கல்லை எட்டியது

ஜன 08, 2026
இலங்கையின் ஊடகக் கல்வித் துறையின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும்…

2026 புதிய ஆண்டை முன்னிட்டு வெகுஜன ஊடக பிரதி அமைச்சரின் வாழ்த்துச் செய்தி

ஜன 01, 2026
2026 புதிய ஆண்டின் வருகை, நாம் நாடாக முன்னேறிச் செல்ல வேண்டிய புதிய திசையை மீண்டும்…

இலங்கை /பவுண்டேஷன் நிறுவகம் (SLFI) புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியது

ஜன 01, 2026
இலங்கை/பவுண்டேஷன் நிறுவனத்தின் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்ட உத்தியோகபூர்வ இணையதளம்…

இனம் – மதம் – கட்சி வேறுபாடுகள் இன்றி நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணைவோம்.

ஜன 01, 2026
நாட்டின் ஒவ்வொரு துறையிலும் தரமான மற்றும் நிலைத்த மாற்றங்களை ஏற்படுத்துவதும், இரக்கமுள்ள…

புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

ஜன 01, 2026
மிகப்பெரிய மறுசீரமைப்புச் செயல்முறையையும், மீளக் கட்டியெழுப்பும் பாரிய பணியையும் தோள்மேல்…

தேசிய பாதுகாப்பு தினம்

டிச 26, 2025
சுனாமியில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து நாடு முழுவதும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி…

நத்தார் தின வாழ்த்துச் செய்தி

டிச 25, 2025
டிசம்பர் மாதம் துவக்குதத்துடன் கிறிஸ்துவர்கள் ஆராதனையுடனும் ஆனந்தத்துடனும்…

நத்தார் வாழ்த்துச் செய்தி

டிச 25, 2025
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார் பண்டிகையை இன்று…

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் ஆசீர்வதிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் இன்று (24) நள்ளிரவில் ஆரம்பமாகிறது.

டிச 24, 2025
உலகத்தை பாவத்திலிருந்து மீட்பதற்காக இந்த உலகில் அவதரித்த அவரின் மனிதநேயக் கருணையின்…