இலங்கை ஊடகவியலாளர்களின் தொழில்முறை மற்றும் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால் வருடாந்தம் நடைமுறைப்படுத்தப்படும் ‘அசிதிசி வெகுஜன ஊடக’ மற்றும் ‘அசிதிசி - தொழில்நுட்ப’ புலமைப்பரிசில் நிகழ்ச்சித் திட்டங்கள் இம்முறையும் (2026) வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, ‘அசிதிசி வெகுஜன ஊடக’ / ‘அசிதிசி - தொழில்நுட்ப’ புலமைப்பரிசில் திட்டங்கள் - 2026 இற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதுடன், விண்ணப்பங்களை சமர்ப்பிக்கக்கூடிய இறுதித் திகதி 2026 ஜூலை மாதம் 10 ஆம் திகதியாகும்.
02 வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்துள்ள, நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களில் முழுநேர அல்லது பகுதிநேர அடிப்படையில் பணியாற்றும் 18-55 வயதுக்கு இடைப்பட்ட ஊடகவியலாளர்கள் இப்புலமைப்பரிசில் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும். மேலும், விண்ணப்பிக்கும் பாடநெறியானது ஊடகத்துறை சார்ந்த ஒரு பாடநெறியாக இருத்தல் வேண்டும் என்பதுடன், விண்ணப்பதாரர்கள் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் 2025/2026 ஆம் ஆண்டுக்காக ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊடகவியலாளர் அடையாள அட்டையை பெற்றிருத்தல் வேண்டும்.
‘அசிதிசி வெகுஜன ஊடக’ புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம்: கலாநிதிப் பட்டத்திற்கு Ph.D. (Doctorate) ரூ. 700,000/-, தத்துவவியல் முதுகலை (Master of Philosophy). இளமாணிப; பட்ட Bachelor’s Degrees மற்றும் சாதாரண பட்டப் படிப்புகளுக்கு அதிகபட்சமாக ரூ. 350,000/, முதுகலை டிப்ளோமா, டிப்ளோமா, நீண்டகால மற்றும் குறுகியகால சான்றிதழ் பாடநெறிகளுக்கு: அதிகபட்சமாக ரூ. 200,000/- வரை நிதியுதவி வழங்கப்படும். மேற்குறிப்பிட்ட திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் ஊடகவியலாளர்கள் ‘அசிதிசி - தொழில்நுட்ப’ ஊடக புலமைப்பரிசில் திட்டத்திற்கும் விண்ணப்பிக்க முடியும் என்பதுடன், இரண்டு திட்டங்களுக்குமான அதிகபட்ச நிதி எல்லை ரூ. 350,000/- ஆகும். (ஒரே பாடவிதானத்தை உள்ளடக்கும் இரண்டு பாடநெறிகளுக்காக இரு திட்டங்களின் மூலமும் விண்ணப்பிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படமாட்டாது).
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்படும் தேர்வுக் குழுவொன்றின் மூலம் விண்ணப்பதாரர்கள் நேர்முகப்பரீட்சைக்கு உட்படுத்தப்பட்டு புலமைப்பரிசிலுக்குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
இதற்காக சமர்ப்பிக்கப்படும் ‘அசிதிசி வெகுஜன ஊடக’ புலமைப்பரிசில் விண்ணப்பங்களை பணிப்பாளர் (ஊடகம்) அவர்களுக்கும், ‘அசிதிசி - தொழில்நுட்ப’ புலமைப்பரிசில் விண்ணப்பங்களை பணிப்பாளர் (அபிவிருத்தி) அவர்களுக்கும் 2026.07.10 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பின்வரும் முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும். சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, , இல. 163, "அசிதிசி மெந்துர", கிருளப்பன மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05. அல்லது அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.media.gov.lk பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படும் QR குறியீட்டை (Scan) ஸ்கேன் செய்வதன் மூலமும் இணையவழியாக தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
‘அசிதிசி வெகுஜன ஊடக’, ‘அசிதிசி - தொழில்நுட்ப’ புலமைப்பரிசில் - 2026 திட்டங்கள் பற்றிய மேலதிக விபரங்களை 011 2513 645 / திரு. சந்தன - 071 4 931 696 ஆகிய எண்களைத் தொடர்புகொள்வதன் மூலமும், மாதிரி விண்ணப்பப் படிவங்களை www.media.gov.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலமும் பெற்றுக்கொள்ள முடியும்.


