கடவுச்சீட்டுக்களை ஒன்லைன் மூலமாக விநியோகிக்கும் வேலைத் திட்டம் இன்று (15) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
இன்றைய தினம் முற்பகல் ஹோமாகம பிரதேச செயலகத்தில் இச்செயற்திட்டம் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். கடவுச்சீட்டு விநியோகிக்கும் ஒரு நாள் சேவைகள் வழமை போன்று இடம் பெறுவதாக தெரிவித்துள்ள அவர், ஒன்லைன் மூல விநியோகம் நடைபெற்ற போதும் அவசியமானால் எவரும் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்துக்கு நேரடியாக வருகை தந்து, அதற்கான விண்ணப்பத்தை ஒப்படைக்கவும் முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இப்புதிய வேலைத் திட்டத்தின் கீழ் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்ததன் பின்னர் மூன்று தினங்களுக்குள் கடவுச்சீட்டு கூரியர் சேவைக்கு ஒப்படைக்கப்படும். அதனையடுத்து அதனை வீட்டுக்கே பெற்றுக் கொள்ளவும் முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். குடிவரவு, குடியகல்வு திணைக்களமானது மக்களுக்காக சிறந்த வேலைத் திட்டத்தை ஆரம்பித்துள்ளதுடன் கடவுச்சீட்டுக்காக ஒன் லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒன்லைன் மூலமாக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போர் அவர்கன்து விரல் அடையாளத்தை நாடளாவிய ரீதியில் உள்ள பிரதேச செயலகங்களுடன் இணைந்ததாக, செயற்படும் ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தின் நிளை அலுவலகங்கள் ஊடாக மேற்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட பிரதேச செயலகங்களின் விபரங்கள் பொதுமக்கள் பாது காப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன.
@ அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை, பொத்துவில், @ அனுராதபுரம் மாவட்டத்தில் நுவரகம், கெகிராவை, ஹொரவபொத்தான, @ பதுளை மாவட்டத்தில் மஹியங்களை, அப்புத்தளை.. @ மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை, காத்தான்குடி @ கொழும்பு மாவட்டத்தில் ஹோமாகம, சீதாவக்க, @ காலி மாவட்டத்தில் கரந்தெனிய, அக்மீமன, நெலுவ @ கம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு, கம்பஹா, மீரிகம @ ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தங்காலை, திஸ்ஸமஹாராமை, @ யாழ்ப்பாண மாவட்டத்தில் சாவகச்சேரி, பருத்தித்துறை. @ களுத்துறை மாவட்டத்தில் இங்கிரிய, மத்துகம, பாணந்துறை. @ கண்டி மாவட்டத்தில் கம்பளை, குண்டசாலை, பூஜாபிட்டிய @ கேகாலை மாவட்டத்தில் கலிகமுவ, ருவன்வெல்ல @ கிளிநொச்சி மாவட்டத்தில் கரச்சி. @ குருநாகல் மாவட்டத்தில் வடமேல் மாகாண பிரதேச செயலகம், குளியாப்பிட்டி நிக்கவரெட்டிய @ மன்னார் மாவட்டத்தில் மன்னார் மேற்கு @ மாத்தளை மாவட்டத்தில் நாவுல. @ மாத்தறை மாவட்டத்தில் அதுரலிய தெவிநுவர. @ மொனராகலை மாவட்டத்தில் புத்தள. @ முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு. @ நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுக வலப்பனை. @ பொலனறுவை மாவட்டத்தில் திம்புலாகல எலஹெர ஹிங்குரன்கொட @ புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் சிலாபம் @ @ இரத்தினபுரி மாவட்டத்தில் பலாங்கொடை குருவிட்ட எம்பிலிப்பிட்டிய. @ திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா @ வவுனியா மாவட்டத்தில் வெங்கல செட்டிக்குளம் என்பனவும் குறிப்பிடப்பட்டுள்ளன.