இலங்கைப் பல்கலைக்கழகங்கள் அன்று ஆசிய பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதன்மையான இடத்தில் இருந்ததாகவும், அந்தத் தரம் மற்றும் நற்பெயரை இந்நாட்டின் பல்கலைக்கழக கட்டமைப்பில் மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அதன் ஊடாக வெளிநாட்டு மாணவர்களையும் இலங்கைப் பல்கலைக் கழகங்களுக்கு ஈர்க்க முடியும் எனவும் அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் எனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த (09) பிற்பகல் இடம்பெற்ற “CVCD Excellence Awards" நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

இந்த நாட்டில் கல்வி முறையில் உள்ள பிரச்சினைகளை விரைவில் தீர்க்க வேண்டியதன் அவசியத்தை விளக்கிய ஜனாதிபதி, அனைவரும் சரியான வயதில் கல்வியை நிறைவு செய்து முன்னேறிச் செல்லக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பல்கலைக்கழகக் கட்டமைப்பினுள் நவீன ஆராய்ச்சி கலாசாரத்தை நிறுவுவதற்கு வழங்கும் சிறப்பான தலைமைத்துவம் மற்றும் அர்ப்பணிப்புக்காக இலங்கையின் உபவேந்தர்கள் மற்றும் பணிப் பாளர்கள் குழுவினால் பாராட்டப்பட்டார். இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

நான் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய காலம் இப்போது நினைவுக்கு வருகின்றது. அப்போது, சென்னையில் நடந்த லண்டன் உயர்தரப் பரீட்சையிலும் நான் சித்தி பெற வேண்டும் என்று என் தந்தை வலியுறுத்தினார். அதனால் நான் சென்னைக்குச் சென்று லண்டன் உயர்தரப் பரீட்சையையும் எழுதினேன்.

ஆனால், அதற்குள் நான் இலங்கையில் தோற்றிய உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளும் வெளியாகி பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றிருந்தேன். எனவே அந்த நாட்களில் இது ஒரு எளிய செயல்முறையாக இருந்தது. இப்போது போல் புள்ளி வழங்கும் முறை இருக்கவில்லை. நான்கு பாடங்களில் சித்தி பெற்ற அனைவரும் பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப் பட்டனர். பின்னர் மூன்று பாடங்களில் மற்றும் சித்தி பெற்றவர்களும் அனுமதிக்கப் பட்டனர்.

அதேநேரம், நான் லண்டன் உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளையும் பெற்றிருந்தேன். அதனால் இலங்கையில் தங்குவதா அல்லது ஐக்கிய இராச் சியம் செல்வதா என்பதை நான் தீர் மானிக்க வேண்டியிருந்தது. ஆனால் நான் இலங்கையில் இருக்க முடிவு செய்தேன். எனது தாத்தாவுக்கு இருந்த தொடர்புகளின் அடிப்படையில் நான் பேராதனை பல்கலைக்கழகத்திற்குச் செல்ல வேண்டும் என்று எனது அம்மா வற்புறுத்தினார். ஆனால் சட்டக் கல்வி யைத் தொடர கொழும்பு பல்கலைக்க ழகத்திற்கு செல்ல வேண்டும் என்பதே எனது விருப்பமாக இருந்தது.

பேராசிரியர் லீயின் மரணத்திற் குப் பிறகு, அப்போதைய பீடாதிபதி மற்றும் சட்டத்துறைப் பேராசிரியராக இருந்த நடராஜா, ரோமன் டச்சு சட்டத் தில் அதிக நிபுணத்துவம் பெற்றிருந் தார். மேலும் எங்களுக்கு பல விரிவு ரையாளர்கள் இருந்தனர். இளம் உதவி விரிவுரையாளராக ஜி.எல். பிரிஸ் அவர் களும் பணியாற்றினார். இலங்கையில் எனது பல்கலைக்கழகக் கல்வியை வெற்றிகரமாக நிறைவு செய்தேன். இலங்கையில் எனது கல்வி குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.