வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு,  வெளிநாடுகள் மீண்டும் நம் நாட்டைப் பார்க்க ஆரம்பித்துள்ளன. அதன்படி ஹங்கேரி அரசாங்கத்தின் பிரதிநிதிகள் இந்த நாட்டுக்கு வந்து கெடம்பே பாலத்தின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான வாக்குறுதிகளை பெற்றுள்ளனர். என போக்குவரத்து,  நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

 

கட்டுமானம் பாதியில் நிறுத்தப்பட்ட கட்டம்பே மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகளை இலங்கையில் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் மீள ஆரம்பிப்பது தொடர்பாக, விசேட அவதானிப்புக்காக இந்நாட்டுக்கு வந்துள்ள ஹங்கேரிய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கண்டியில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு பேசிய அமைச்சர்,

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு,  வெளிநாடுகள் மீண்டும் நம் நாட்டை திறந்த கண்களுடன் பார்க்க ஆரம்பித்துள்ளன. இதன்படி,  ஹங்கேரி அரசாங்கத்தின் பிரதிநிதிகள் இந்த நாட்டுக்கு வந்து கெடம்பே பாலத்தின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான வாக்குறுதிகளை பெற்றுள்ளனர். இல்லை என்றால் இந்த பாலம் கட்ட வாய்ப்பு கிடைத்திருக்காது. கண்டி நகரை பசுமை நகரமாக அபிவிருத்தி செய்வதற்காக உலக வங்கியின் பிரதிநிதிகள் நாட்டிற்கு வந்து கடன் அடிப்படையில் 200 மின்சார பஸ்களை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இப்போது அது பற்றி விவாதிக்க முடியுமகியுள்ளது.

அவ்வாறு செய்ய வெளிநாட்டு நாடுகளுடன் உறுதிமொழிக் குறிப்புகள் கையெழுத்திடப்பட்டு அவை சட்டமாக்கப்பட்டுள்ளன.

வரலாற்றில் முந்தைய அனைத்து அரசாங்கங்களும் தேவைக்கேற்ப பணத்தை அச்சிடும் திறன் பெற்றிருந்தன. ஆனால் தற்போது மத்திய வங்கி சட்டம் திருத்தப்பட்டு பணம் அச்சிடுவது சட்டத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையின் தேவைக்கேற்ப இறையாண்மை பத்திரங்களை வெளியிடுவது மற்றும் கடன்களைப் பெறுவது சாத்தியமில்லை. கடன் கட்டுப்பாடு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பல்வேறு வாக்குறுதிகள் அளித்தாலும், அந்த வாக்குறுதிகளுக்குத் தேவையான பட்ஜெட்டைத் தயாரிக்கும் திறன் இல்லை. நாடாளுமன்றம் நிதி மேலாண்மைச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. அதற்காக நிபுணர்கள் அடங்கிய பட்ஜெட் குழு நாடாளுமன்றத்தில் செயல்பட்டு வருகிறது.

2042 வரை பின்பற்றப்படுகின்ற கொள்கைகள் உள்ளடக்கப்பட்ட பொருளாதார மாற்றச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஊழல்,  முறைகேடுகளைத் தடுக்க இதுவரை ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்த ஐந்து சட்டங்களில் ஒன்றைக் கூட மாற்றி நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான இயலுமைகள் இல்லை.

இதன்படி,  2032 ஆம் ஆண்டளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வீதமாக இலங்கையின் கடன் சுமை 95% ஆக குறைக்கப்படும் என்ற வாக்குறுதி உலகிற்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது அந்த எண்ணிக்கை 128% ஆக உள்ளது. எந்தவொரு சூழ்நிலையிலும் அரசாங்கத்தின் மொத்த நிதித் தேவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13% ஐ விட அதிகமாக இருக்க முடியாது. கடன் தவணைகள்,  வட்டி செலுத்துதல் 4.5% ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது. ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தயாரிக்கும் போது 2.3% உபரி முதன்மைக் கணக்கில் பராமரிக்கப்பட வேண்டும். இஷ்டத்துக்கு இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை மேற்கொள்வதன் மூலம் கணக்கு இருப்பில் பற்றாக்குறையை ஏற்படுத்த முடியாது. ஒரு வருடத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1%க்கு மேல் செலுத்தும் இருப்புப் பற்றாக்குறையை அதிகரிக்க முடியாது. ஒவ்வொரு ஆண்டும் வளர்ச்சி விகிதம் 5 க்கு மேல் பராமரிக்கப்பட வேண்டும். வேலையில்லாத் திண்டாட்டத்தை 5%க்கும் குறைவாகவே வைத்திருக்க வேண்டும். பெண் தொழிலாளர் பங்கேற்பை 40% ஆக உயர்த்த வேண்டும்.

அந்த வகையில் சர்வதேச உடன்படிக்கைகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள சட்டங்களை நடைமுறைப்படுத்தி 2048 ஆம் ஆண்டளவில் சுமார் 20000 டொலர் தனிநபர் வருமானம் கொண்ட நாட்டை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதிலிருந்து விலகிச் சென்றால் நம் நாடு கடனை அடைக்க முடியாமல் அர்ஜென்டினா,  ஜிம்பாப்வே,  கோஸ்டாரிகா போன்ற நாடாக மாற வேண்டியிருக்கும்.

எனவே,  அந்த காலகட்டத்தில் நமது செலவுகள் 3 முக்கிய தூண்களுக்குள் சீரானதாக இருக்க வேண்டும். 2032ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 95%க்கு மேல் இருக்க வேண்டும். கட்டணம் செலுத்துவதற்கு கிடைக்கும் தொகையானது வருடத்திற்கு 4.5க்கு மேல் அதிகரிக்க முடியாது. அரசாங்க ஆண்டின் நிதித் தேவை 13% ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது. இந்த திட்டங்கள் அனைத்தும் இந்த 03 புள்ளிகளில் நிர்வகிக்கப்பட வேண்டும். எனவே அரசாங்கம் எதுவாக இருந்தாலும் சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கைகளுக்கு அமைவாக நாம் பொறுப்புடன் செயற்பட வேண்டும். நாட்டின் மீதுள்ள அன்புடன், நம் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான கடினமான முயற்சியில் வெற்றிபெற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திரு.தில்லும் அமுனுகம,  போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் திரு.ரஞ்சித் கங்கநாத் ரூபசிங்க, ஹங்கேரி அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் திரு. மார்டன் லாஸ்லோ,  புதுதில்லியில் உள்ள ஹங்கேரிய தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக ஆலோசகர் திரு.லெவென்டே கார்டோஸ்,  வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் திரு. பிரியந்த சூரியபண்டார,  திட்டப் பணிப்பாளர் திரு. நளிந்த ரத்நாயக்க,  வீதி அபிவிருத்தி அதிகாரசபை,  புகையிரத திணைக்களம் மற்றும் அரச நிறுவனங்களின் நிறைவேற்று உத்தியோகத்தர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.