சமீபத்திய செய்தி

 

பாராளுமன்றத்தை வன்முறையாளர்களிடமிருந்து பாதுகாத்து, ஜனநாயகத்தை பாதுகாத்த இராணுவ வீரர்களுக்கு தேசத்தின் கௌரவம் உரித்தாகும்.-ஜனாதிபதி தெரிவிப்பு.

நிறைவேற்றுத்துறையை கையகப்படுத்தி, சட்டத்துறையை முடக்கிய வன்முறையாளர்களை ஒடுக்கி ஜனநாயகத்தைப் பாதுகாத்த இராணுவத்தினருக்கு தேசத்தின் கௌரவம் உரித்தாகுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

பெலவத்த, அக்குரேகொடவில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்திற்கு இன்று (09) முற்பகல் விசேட உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி அவர்கள், இராணுவத்தினரை சந்தித்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அன்று வன்முறையாளர்கள் பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்து சட்டத்துறையை முடக்கியிருந்தால் நாடு ஆட்சியை இழந்திருக்கும் எனவும் அவ்வாறு நடந்திருந்தால் நாட்டின் நிலைமை முற்றிலும் மாற்றமாக அமைந்திருக்கும் எனவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். எந்தவொரு நபர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தாமல் அமைதியான முறையில் அந்த நடவடிக்கையை முன்னெடுத்த பாதுகாப்புப் படையினருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் குறிப்பிட்டார்.

இராணுவத் தலைமையக வளாகத்தை வந்தடைந்த ஜனாதிபதி அவர்களை இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் விக்கும் லியனகே வரவேற்றதுடன், பின்னர் ஜனாதிபதி அவர்களுக்கு விசேட இராணுவ மரியாதையும் வழங்கப்பட்டது.

ஜனநாயகத்தை பாதுகாக்கும் உன்னத இடமான பாராளுமன்ற வளாகத்துக்குள் வன்முறையாளர்கள் பிரவேசிப்பதை வெற்றிகரமாக தடுத்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி வைத்ததோடு, சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரிகளுடன் குழுப் புகைப்படத்தில் தோன்றியதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அதிதிகளின் குறிப்பேட்டில் குறிப்பொன்றையும் இட்டார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், “பாராளுமன்றத்தைப் பாதுகாத்தமைக்காக உங்கள் அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவிக்கும் வகையில் இன்று இந்த விசேட நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளோம். பலருக்கு இதன் முக்கியத்துவம் தெரியாது. எனவே விஷேடமாக இதைப் பற்றி சில விடயங்களைக் குறிப்பிட விரும்பினேன். இந்த நாட்டைப் பாதுகாப்பதும், இந்த நாட்டின் அரசியலமைப்பைப் பாதுகாப்பதும் உங்களின் தலையாய கடமையாகும்.

மக்களின் இறையாண்மையை நடைமுறைப்படுத்த 03 பிரதான நிறுவனங்கள் உள்ளன. பாராளுமன்றம், நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை. இந்த 03 நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், இந்த நாடு கட்டுப்பாட்டை இழக்கும். அரசியலமைப்பு சிதையும். ஜனநாயகம் இழந்துவிடும். அப்படிப்பட்டதொரு சூழ்நிலையில்தான் நீங்கள் பாராளுமன்றத்தை பாதுகாத்தீர்கள்.

நிகழ்வுகள் பற்றி பேசுகையில், ஜூலை 09, முன்னாள் ஜனாதிபதி இருந்த ஜனாதிபதி மாளிகை வன்முறையாளர்களால் கைப்பற்றப்பட்டது, பின்னர் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை செலுத்தும் ஜனாதிபதி அலுவலகம் கையகப்படுத்தப்பட்டது. ஜனாதிபதியிடம் நடைமுறைப்படுத்த எந்த நிறுவனமும் இல்லை. மாலையில் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான "அலரி மாளிகை" கையகப்படுத்தப்பட்டது. அந்த அலுவலகத்தின் செயல்பாடுகளை மேற்கொள்ள முடியவில்லை. அப்போது முன்னாள் ஜனாதிபதி கொழும்பில் இல்லாததாலும், அவர் இருக்கும் இடம் தெரியாததாலும், நான் பதவி விலகுவேன் என்ற நம்பிக்கையில் எனது வீட்டிற்கு தீ வைத்தார்கள். ஆனால் சேர் எர்னஸ்ட் டி சில்வா மாவத்தையில் பிரதமர் அலுவலகம் மாத்திரம் இருந்தது.

கடந்த 13ம் திகதி திரும்பி வந்து பிரதமர் அலுவலகத்தை கைப்பற்றினர். அப்போது நிர்வாகத்தை இயக்க எந்தவொரு அலுவலகமும் இல்லை. அப்போது ஜனாதிபதி இருந்த ஜனாதிபதி மாளிகையும் இல்லாமல் போய்விட்டது. நிறைவேற்றுத்துறையாக, இயங்குவதற்கு எந்தவொரு இடமும் இருக்கவில்லை. மாலையில் நிலைமை மாறியது. பாராளுமன்றத்தை முற்றுகையிட முயன்றனர். பாராளுமன்றத்தை கைப்பற்றினால், சட்டத்துறையை அமுல்படுத்த முடியாது. சட்டத்துறையை அமுல்படுத்த முடியாவிட்டால், நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லை.

நீதிமன்றத்தை சுற்றிவளைத்து நீதிமன்றத்தை நிறுத்துவது எளிதான காரியம். மற்ற இரண்டு நிறுவனங்களைப் போல அல்ல. பாராளுமன்றத்தை இழந்தால் அது பெரிய பிரச்சனையாகிவிடும். அன்றைய தினம் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. சபாநாயகருக்கு தெரியும், இந்த குழு வருவதை அறிந்ததும், கட்சி தலைவர்கள் கூட்டத்தை நிறைவு செய்தார். பாராளுமன்றத்தை பாதுகாக்க யாரும் இருக்கவில்லை. பாராளுமன்றம் வீழ்ந்தால் அரசியல் அமைப்பு பறிபோகும். எனவே, அவ்வேளையில் பாதுகாப்புச் சபையின் தலைவர்களிடம் குறிப்பாக சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் லியனகே ஆகியோரிடம் பாராளுமன்றத்தைப் பாதுகாக்குமாறு கூறினேன். பாராளுமன்றத்தை இழந்தால் ஆட்சி இல்லாமல் போகும். பாராளுமன்றம் இல்லாததால், பாதுகாப்பு அமைச்சை செயற்படுத்த முடியாது. அதனால்தான் உங்களிடம் அந்த செயற்பாட்டை ஒப்படைத்தேன்.

அதன்படி பாராளுமன்றத்தை கைப்பற்ற வந்தவர்களுக்கு துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அதற்காக உங்கள் அனைவருக்கும் எனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களில் பலர் காயமடைந்துள்ளனர். பாதுகாப்பு இருந்ததால் அடுத்த நாளே நாட்டில் நிலைமை மாறியது. பாராளுமன்றம் பாதுகாக்கப்படாவிட்டால் இன்று நாட்டில் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.

இது வடக்கில் பார்த்த பெரிய யுத்தங்கள் போல் இல்லை, ஜனநாயகத்தை பாதுகாக்க நீங்கள் எடுத்த ஒரு நடவடிக்கை. அன்று பயங்கரவாதத்தை ஒழித்தது போல் ஜனநாயகத்தையும் பாதுகாத்தீர்கள். இந்தப் பாராளுமன்ற கட்டடத்தை பாதுகாத்து பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு இடமளித்ததன் மூலம் அரசியலமைப்பு ரீதியான கடமை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் மூலம் நாடும் பாதுகாக்கப்பட்டுள்ளது. இப்போது இருப்பது பாராளுமன்றத்தை முன்னோக்கி கொண்டு செல்வதே ஆகும். பாராளுமன்றத்தை முன்னோக்கி கொண்டு சென்று பா.உறுப்பினர்கள் மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். உங்களின் நடவடிக்கை இப்போது முடிந்துள்ளது. பாராளுமன்றத்தில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

புதிய அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டு வர நாம் முயற்சிக்கிறோம். புதிய பாராளுமன்ற சீர்திருத்த முன்மொழிவுகளை கொண்டு வந்து சர்வகட்சி ஆட்சியை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இது பற்றி கலந்துரையாடப்படுகிறது,

இப்போது உங்கள் கடமையை செய்யுங்கள். இப்போது பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டும். பிரதமர் மற்றும் சபாநாயகர் அவர்களிடம் தயவு செய்து இதனை பாராளுமன்றத்தில் நினைவூட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த அர்ப்பணிப்பிலிருந்து நாம் பயனடைய விரும்பினால், அனைவரும் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தை மீண்டும் நாட்டின் நலனுக்காக செயல்படுத்த வேண்டும்.

இந்தச் சந்தர்ப்பத்தில் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நாட்டுக்காக, பாராளுமன்றத்துக்காக, அரசாங்கத்துக்காக நன்றி தெரிவிக்கிறேன். இந்த நடவடிக்கையை எடுத்ததால், இப்போது எமக்கு நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க முடியும். வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. பயணங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

அடுத்த ஆண்டுக்குள் நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டுமானால், அது பாராளுமன்றத்தில் செய்யப்பட வேண்டும். அதைப் பாதுகாக்க உழைத்திருக்கிறீர்கள். பாராளுமன்றம் செயல்பட வாய்ப்புஅளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நீங்கள் அனைவரும் வான்வழிப் படையைச் சேர்ந்தவர்கள். அதைப் பற்றியும் சில வார்த்தைகளைச் சொல்ல விரும்புகிறேன். ஏனெனில் இது நம் நாட்டில் ஒரு முக்கிய அலகாகக் கருதப்படுகிறது.

அன்று 1992 மற்றும் 1993 ஆம் ஆண்டுகளில் இந்தப் படையை உருவாக்க வேண்டும் என்று நாம் கலந்துரையாடினோம். அந்த நேரத்தில், நான் அக்டோபர் மாதம் லண்டன் சென்றேன். நான் லண்டனில் ஜெனரல் மைக்கேல் ரோஸை சந்தித்தேன். அவரை எனக்கு அறிமுகப்படுத்தியது ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்கள். ஜெனரல் ரணதுங்க மற்றும் ஜெனரல் ஆடிகல ஆகியோர் அவருடன் இருந்தனர். அவர் இப்படி ஒரு பிரிவைத் தொடங்க வேண்டும் என்றார். அப்போதைய இராணுவத் தளபதி வைத்தியரத்னவிடம் அந்தப் பணி ஒப்படைக்கப்பட்டது, பின்னர் ஜெனரல் ஜெரி சில்வா படையை ஆரம்பித்து இந்தப் பணியை சிறப்பாகத் தொடர்ந்தார். குறிப்பாக அப்போது தொடங்கியதை தொடர்வதில் நாம் மகிழ்ச்சி அடைகிறோம்.

பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு


 

 

2022.08.08 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

(அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரசார பிரிவினால் சிங்கள மொழியிலான அமைச்சரவை தீர்மான ஆவணம், தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.)

01.     உயர்கல்வி புத்தாக்கத்திற்கான சர்வதேச நிலையம் (UNESCO – ICHEI) மற்றும் இலங்கை அரசின் கல்வி அமைச்சுக்கும் இடையில் கல்வி ஒத்துழைப்புக்கள் தொடர்பான ஒப்பந்தத்தை மேற்கொள்ளல்

யுனெஸ்கோ அமைப்பின் அனுசரணையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் உயர்கல்வி புத்தாக்கத்திற்கான சர்வதேச நிலையம் எமது நாட்டின் கைத்தொழில் மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் பணியாளர்களின் திறமையை மெருகூட்டுவதற்காக இணையவழி ஊடாக பயிற்சிகளை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது.

அதன் கீழ் Artificial Intelligence, றொபோ தொழிநுட்பம், தரவுப் பகுப்பாய்வு, இயந்திராதிகள், பொறியியல் கற்கைகள், டிஜிட்டல் வடிவமைப்பு, மற்றும் டிஜிட்டல் வர்த்தகம் போன்ற துறைகளை அணுகுவதற்கான தளங்களை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இருதரப்பினர்களிடையே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. செலவு வரம்பின் அடிப்படையில் நீர்க் கட்டணத்தை அறிமுகப்படுத்தல்

 

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நிதி நிலைபேற்றை உறுதிப்படுத்தல் மற்றும் பொதுமக்களுக்கு தொடர்ச்சியாகவும் தடையின்றியும் நீர் வழங்கலை மேற்கொள்வதற்கு கட்டணங்களில் திருத்தம் கொண்டுவர வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மீண்டெழும் செலவுகள் மற்றும் மூலதனக் கடன் பொறுப்புக்களை ஈடு செய்வதற்கு இயலுமான வகையில் தற்போது அறவிடப்படும் நீர்க் கட்டணம் மற்றும் மலக்கழிவகற்றல் கட்டணங்களைத் திருத்தம் செய்வதற்கு நீர்வழங்கல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள பிராந்தியக் கைத்தொழில் பேட்டைகளில் தொழிற்சாலைகளை நிறுவுவதற்கான காணிகளை வழங்கல்

பிராந்திய மட்டத்தில் கைத்தொழிற்றுறையை மேம்படுத்தும் நோக்கில் கைத்தொழில் அமைச்சின் மூலம் 'பிராந்திய கைத்தொழில் அபிவிருத்தி வேலைத்திட்டம்' நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதற்கமைய, குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள 25 முதலீட்டாளர்களுக்கு 13 கைத்தொழில் பேட்டைகளில் காணித் துண்டுகளை வழங்குவதற்காக கைத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04.     பாடசாலை மட்டத்தில் ஜப்பான் மொழித் தேர்ச்சியை ஆரம்பித்தல்

இலங்கை அரசு மற்றும் ஜப்பான் அரசுக்கிடையில் கையொப்பமிடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம், தொழிநுட்ப சேவைக்காலப் பயிலுனர்களாக, விசேட நிபுணத்துவங்களுடன் கூடிய வேலைவாய்ப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 14 துறைகளில் தொழிலுக்கு விண்ணப்பிப்பதற்காக இலங்கையர்களுக்கு இயலுமை உண்டு. அதற்காக, ஜப்பான் மொழித் தேர்ச்சி கட்டாயமான தகைமையாக இருப்பதுடன், பல கட்டங்களாக நடாத்தப்படும் பரீட்சைகள் மூலம் குறித்த தகைமையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அடுத்துவரும் 05 ஆண்டுகளில் விசேட நிபுணத்துவ வேலைவாய்ப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 345,000 தொழிலாளர்கள் ஆட்சேர்ப்புச் செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், இலங்கை உள்ளிட்ட 07 நாடுகளுடன் ஜப்பான் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு, தற்போது பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படும் தொழிநுட்பவியல் பாடவிதானத்தின் கீழ் ஜப்பான் மொழி மற்றும் ஆங்கில மொழிக் கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கும், ஜப்பான் வேலைவாய்ப்புக்களை இலக்காகக் கொண்ட பராமரிப்புச் சேவைகள், விருந்தோம்பல் சேவைகள், கட்டடங்கள் தூய்மையாக்கல், விவசாய நடவடிக்கைகள், மோட்டார் வாகன தொழிநுட்பவியல் அல்லது மின்னியல் மற்றும் இலத்திரனியல் தொழிநுட்பத் துறைகளில் மென் திறன்களை விருத்தி செய்வதற்கும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமானக் கம்பனிக்கான விமான சேவைகள் காப்புறுதிக் காப்பீட்டுக்கான ஒப்பந்தம் வழங்கல்

ஸ்ரீலங்கன் விமான சேவைகள் கம்பனி தனது விமானங்களுக்கு 04 வகையான காப்புறுதிக் காப்பீட்டின் கீழ் காப்புறுதிச் சேவைகளைப் பெற்றுக் கொள்கின்றது. குறித்த 04 காப்புறுதிக் காப்பீடுகளுக்காக காப்புறுதி ஒழுங்குறுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ள பொதுக் காப்புறுதிக் கம்பனிகளிடமிருந்து மட்டுப்பட்டுத்தப்பட்ட தேசியப் போட்டி விலைமுறி கோரப்பட்டுள்ளது. அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் பரிந்துரைகளின் பிரகாரம் குறித்த ஒப்பந்தத்தை இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்குவதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியனுசரணை வழங்குகின்ற ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் 2 கருத்திட்டங்களின் அடுத்த கட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தல்

ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியனுசரணை வழங்குகின்ற ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் 2 கருத்திட்டங்களின் கீழ் 6,250 சதுர கிலோமீற்றர் கிராமிய வீதிகளும், 750 சதுர கிலோமீற்றர் தேசிய வீதிகளும் அபிவிருத்தி செய்து, பராமரிப்பதற்காக 140 சிவில் வேலை ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதுவரை 4,800 சதுர கிலோமீற்றர் கிராமிய வீதிகளும், 300 சதுர கிலோமீற்றர் தேசிய வீதிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. குறித்த கருத்திட்டங்களை தடையின்றி மேற்கொள்ளும் வகையில் 1 வது கருத்திட்டத்தின் 5 ஆம் கட்டத்திற்காக 243 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் 2வது கருத்திட்டத்தின் 4 ஆம் கட்டத்திற்கான 200 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக் கொள்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி, தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07 . வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்

 

2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதிசேர் வரிச் சட்டத்தின் கீழ் கட்டளைகள் விதிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல், கலால் வரி (52 ஆம் அத்தியாயம்) இன் கீழ் வெளியிடப்பட்டுள்ள கட்டளைகள் உள்ளடங்கிய 02 வர்த்தமானி அறிவித்தல்கள் மற்றும் 2003 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள கட்டளைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல்களை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காகச் சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. இலத்திரனியல் முச்சக்கர மோட்டார் ஊர்திகளைப் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளுக்காக மோட்டார் வாகனச் சட்டத்தை திருத்தல் செய்தல்

சுவட்டு எரிபொருட்களைப் பயன்படுத்தாமல் இலத்திரனியல் வலுவைப் பயன்படுத்தி இயங்குகின்ற வாகனப் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக இலத்திரனியல் மோட்டார் முச்சக்கர ஊர்திகளை இலங்கையில் பயன்படுத்துவதற்கு வாய்ப்பு வழங்குமாறு பல்வேறு தரப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும், அதற்கான சட்ட ஏற்பாடுகள் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் காணப்படாமையால், குறித்த சட்டம் திருத்தம் செய்யப்பட வேண்டியுள்ளது. அதற்கமைய, இலத்திரனியல் முச்சக்கர மோட்டார் ஊர்திகளை பதிவு செய்வதற்கு இயலுமை கிட்டும் வகையில் குறித்த சட்ட ஏற்பாடுகளை உள்வாங்கி மோட்டார் வாகன சட்டத்தை திருத்தம் செய்வதற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. 1954 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கடை மற்றும் அலுவலக ஊழியர்கள் (ஊழியத்தையும் ஊதியத்தையும் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தை திருத்தம் செய்தல்

அறிவுச் செயன்முறையை வெளியிலிருந்து பெற்றுக்கொள்ளல் (Knowledge Process Outsourcing) வியாபாரச் செயன்முறையை வெளியிலிருந்து பெற்றுக் கொள்ளல் (Business Process Outsourcing), வேறு நாடுகளில் அமைந்துள்ள வியாபார நிறுவனங்களுக்கான கணக்கு, நிர்வாக மற்றும் தொழிநுட்ப நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற அலுவலகங்கள் (Back office) மற்றும் தகவல் தொழிநுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட (ICT enabling services) வியாபார நிறுவனங்களின் இயல்புகளுக்கமைய குறித்த தொழில்களில் ஈடுபடும் ஊழியர்களுக்கு வேறு நாடுகளின் நேர அட்டவணைக்கமைய பணிபுரிவதற்கு நேரிடுகின்றது.

ஆனாலும், 1954 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கடை மற்றும் அலுவலக ஊழியர்கள் (ஊழியத்தையும் ஊதியத்தையும் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழ் மாலை 6.00 மணிக்குப் பின்னர் பெண்களை மட்டுப்படுத்தப்பட்ட தொழில்களில் மாத்திரமே பணியில் அமர்த்தலாம். குறித்த நிலைமையின் கீழ் பெண்களை இரவு வேளைகளில் தொழிலில் அமர்த்துதல் தொடர்பாக தற்போது காணப்படும் வரையறுக்கப்பட்டுள்ள சட்ட ஏற்பாடுகளைத் திருத்தம் செய்வதற்காக 1954 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கடை மற்றும் அலுவலக ஊழியர்கள் (ஊழியத்தையும் ஊதியத்தையும் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தை திருத்தம் செய்வதற்காக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10.   அமைச்சரவை உப செயற்குழுக்களை நியமித்தல்

அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுப்பதற்கு அதிக நேரத்தை ஒதுக்குவதற்கு இயலுமை கிட்டும் வகையில் சட்டரீதியான மற்றும் ஏனைய ஏற்புடைய விடயங்களை ஆழமாக ஆராய்ந்து தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டிய விடயதானங்களுக்கு அமைவாக சமர்ப்பிக்கப்படும் அமைச்சரவை விஞ்ஞாபனங்கள் தொடர்பாக அமைச்சரவைக்குப் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கு இயலுமாகும் வகையில் அமைச்சரவை உப செயற்குழுக்களை நிறுவுதல் பொருத்தமானதென கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, புதிய கருத்திட்டங்களை ஆரம்பித்தல் மற்றும் பெறுகைக் கோரல் நடவடிக்கைகள் போன்ற அரச செலவுகள் தொடர்பான யோசனைகள் பற்றி கொள்கை ரீதியான பரிந்துரைகளை அமைச்சரவைக்குச் சமர்ப்பிப்பதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்களின் தலைமையில் அரச செலவுகள் முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை உப செயற்குழுவொன்றை நியமிப்பதற்காகவும், அரச சேவை நியமனங்கள், பதவியுயர்வு, இடமாற்றம் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் போன்ற நிறுவன ரீதியான நடவடிக்கைகள் தொடர்பான விடயங்கள் பற்றி சமர்ப்பிக்கப்படும் யோசனைகளை ஆராய்ந்து அமைச்சரவைக்கு கொள்கை ரீதியான பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக கௌரவ பிரதமர் அவர்களின் தலைமையில் நிறுவன ரீதியான விவகாரங்கள் தொடர்பான அமைச்சரவை உப செயற்குழுவை நியமிப்பதற்காவும் கௌரவ ஜனாதிபதி அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபசெயற்குழுவை நியமித்தல் மற்றும் உணவுப்பாதுகாப்புக் குழுவை அமைத்தல்

நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நிலைமையில் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை பற்றாக்குறையின்றி சந்தைக்கு விநியோகிக்கப்படுவதை உறுதிப்படுத்தி வாழ்க்கைச் செலவை நிலையாகப் பேணுவதற்கு அவசியமான கொள்கை ரீதியான மற்றும் நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை அமைச்சரவைக்குப் பரிந்துரைப்பதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்களின் தலைமையில் வாழ்க்கைச் செலவு தொடர்பான உபசெயற்குழுவை நியமிப்பதற்கும், குறித்த உபசெயற்குழு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பதற்காக சந்தை, வணிக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சரின் தலைமையின் கீழ் உணவுப் பாதுகாப்புக் குழுவை நியமிப்பதற்கும் கௌரவ ஜனாதிபதி அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மீட்சி அவசர நிவாரண உதவித்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்

 

வறுமைப்பட்டவர்கள் மற்றும் இடர்களுக்கு உள்ளாகியவர்களின் உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கும் நோக்கில் 'உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மீட்சி அவசர நிவாரண உதவித்திட்டம்' எனும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்படப்பட்டுள்ளது. குறித்த கருத்திட்டத்திற்குத் தேவையான நிதி, ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியனுசரணையின் கீழ் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் கருத்திட்டங்கள் சிலவற்றில் காணப்படும் மேலதிக நிதியை மீளாய்வின் மூலம் ஒதுக்கிக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், கருத்திட்ட செயற்பாடுகளின் நிதியிடலுக்காக சுபீட்சமான மற்றும் ஆசிய பசுபிக் வலய துரிதமீட்சிக்கான ஜப்பான் நிதியத்தால் 3 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஆசிய அபிவிருத்தி வங்கி மூலம் வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதியை ஒதுக்கிக் கொள்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்கும், அதற்கமைய ஏற்புடைய ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கும், நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. திரவப் பெற்றோலிய சமையல் எரிவாயுக்கான திருத்தப்பட்ட விலைச்சூத்திரத்தை நடைமுறைப்படுத்தல்

தொடர்ச்சியான சமையல் எரிவாயு விநியோகத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் செலவு வரம்பின் அடிப்படையில் தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதற்கும், குறித்த விலைச் சூத்திரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 05 ஆம் திகதி சமையல் எரிவாயு விலையைத் திருத்தம் செய்வதற்கும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. 2002 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தைத் திருத்தம் செய்தல்

சமகாலத்தில் நாட்டில் நிலவுகின்ற மோசமான வெளிநாட்டுச் செலாவணிப் பற்றாக்குறையால், தொடர்ச்சியாக பெற்றோலிய உற்பத்திப் பொருட்களின் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக, பெற்றோலியப் பொருட்களின் இறக்குமதிக்காக மேலும் போட்டித்தன்மையான தரப்பினர்களுக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் 2002 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சட்டவரைஞரால் குறித்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சட்டமூலம்த்திற்காக சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்நோக்கும் தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்கு சாதகமான சூழலையும் ஸ்திரத்தன்மையையும் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் மிகவும் முக்கியமானதாக அமையும் என்றும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறீப்பிட்டுள்ளார்.

 இந்த சவால்களை எதிர்கொள்வதற்கான தேசிய மூலோபாயத்தை வகுப்பதில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில் ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கான ஜனாதிபதியின் உறுதிப்பாட்டை ஐ.நா பொதுச்செயலாளர் வரவேற்றுள்ளார். சட்டத்தின் ஆட்சி மற்றும் அடிப்படை மனித உரிமைக் கோட்பாடுகளுக்கு மதிப்பளிப்பதை உறுதி செய்யும் அதே வேளையில், பொதுமக்களுடன் கலந்தாலோசிப்பது உட்பட அனைவருடனான ஒருமித்த கலந்துரையாடல்களை அவர் பாராட்டியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் உடனடி மற்றும் நீண்டகாலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அவர்களுக்கு ஆதரவளிக்க ஐக்கிய நாடுகள் சபை தயாராக உள்ளதுடன், அனைத்து இலங்கையர்களுக்கும் சமாதானம், நிலையான அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் தொடர்பான ஒத்துழைப்பை ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்தும் எதிர்பார்க்கிறது என்றும் அவர் தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

இடைக்கால வரவு செலவுத் திட்டமொன்று எதிர்வரும் செப்டெம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பிரதிநிதிகளை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த இடைக்கால வரவு செலவுத்திட்டத்தினூடாக மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படும். அரச ஊழியர்கள் காத்திரமான சேவையை நாட்டுக்கு வழங்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதன்போது 22ஆம் திருத்தச் சட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொதுவான இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு தேவையெனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ராஜகிரியவிலுள்ள ஶ்ரீ கோத்தம தபோவன விஹாரைக்கு விஜயமளித்து இலங்கை அமரபுர மஹா நிக்காயவின் மகாநாயக்க தேரர் அதி வணக்கத்துக்குரிய தொடம்பஹல சந்திரசிறி தேரரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.

 

2022 ஆம் ஆண்டு பேர்மிங்காமில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கையின் யுபுன் அபேகோன் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

இறுதி போட்டியில் யுபுன் அபேகோன் 10.14 வினாடிகளில் ஓடி மூன்றாம் இடத்தை அடைந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

முன்னதாக, இலங்கை நேரப்படி புதன்கிழமை (3) இரவு 11.40 மணிக்கு நடைபெற்ற மூன்றாவது அரையிறுதிப் போட்டியில் 10.20 வினாடிகளில் கடந்து நான்காவது இடத்தைப் பிடித்த 27 வயதான ஓட்டப்பந்தய வீரர் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.

கென்யாவின் ஃபெர்டினாண்ட் ஓமன்யாலா (10.02), தென்னாப்பிரிக்காவின் அகானி சிம்பைன் (10.07), இங்கிலாந்தின் நெதனீல் மிட்செல் - பிளேக் (10.13), கெமரூனின் இம்மானுவேல் எஸேம் (10.14), வேல்ஸின் ஜெர்மியா அசு (10.15), அவுஸ்திரேலியாவின் ரோஹன் பிரவுனிங் 17 (10.15), ரோஹன் பிரவுனிங்.7 (10.18) ஆகியோரும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.  

செவ்வாய்க்கிழமை (02), அபேகோன் 2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் 100 மீற்றர் ஆடவர் நிகழ்வின் முதல் சுற்றின்  எண் 06 இல் முதலிடத்தைப் பெற்றிருந்தார்.

ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் பந்தயத்தின் அரையிறுதிப் போட்டிக்கு அவர்  10.06 வினாடிகளில் ஓடித் தகுதி பெற்றார்.

இதேவேளை, பொதுநலவாய போட்டியில் பாலித்த பண்டார பரிதிவட்டம் எறிதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

வாசகர்களுக்கு உடனடி செய்திகளை வழங்கும் நோக்கத்துடன், லேக்ஹவுஸ் மூன்று மொழிகளிலும் SMS News Alert சேவையை ஆரம்பித்துள்ளது.

Reg (space) TKN என டைப் செய்து 77010 என்ற எண்ணுக்கு SMS அனுப்புவதன் மூலம், தினகரன் SMS News Alert செய்தி சேவையுடன் இணைய முடியும்.

அவ்வாறே Reg (space) DIN என டைப் செய்து 77010க்கு SMS அனுப்புவதன் மூலம் தினமின செய்திகளையும், Reg (space) DAILYNEWS என டைப் செய்து 77010க்கு SMS செய்து அனுப்பவதன் மூலம் டெய்லி நியூஸ் SMS செய்திச் சேவையிலும் இணையலாம்.

வெகுசன ஊடக அமைச்சின் செயலாளரும் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவருமான அனுஷ பெல்பிட்ட இந்த குறுஞ்செய்தி சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

புதிய தலைமுறையினர் புதிய ஊடகங்களில் அதிக நாட்டம் கொண்டுள்ள இன்றைய காலகட்டத்தில், இலங்கை பத்திரிகைகளின் தாய்வீடான லேக்ஹவுஸ் புதிய ஊடக முறைகளுக்கு ஏற்றவாறு தகவல்களை வாசகர்களுக்கு தெரிவிக்க வேண்டுமென நிறுவன கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஆரம்ப விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தலைவர் தெரிவித்தார்.

மேலும், புதிய தொழில்நுட்ப முறைகளுக்கு ஏற்றவாறு, வாசகர்களுக்கு தகவல் தெரிவிக்கும் ஆதாரங்களை மாற்ற வேண்டும் என்றும், செய்தித்தாளில் இணைந்த வாசகர்கள், தகவல் பரிமாற்றம் செய்வதற்கான பிற புதிய முறைகளுடன் உடனடியாக இணைய வேண்டுமென்றும் அவர் கூறினார்.

புதிய இலத்திரனியல் ஊடகங்களுடன் கைகோர்த்து ஆரம்பிக்கும் இந்த குறுஞ்செய்தி சேவை ஒரு சிறிய செடியைப் போன்றது என்றும், ஆனால் அது விரைவில் பாரிய விருட்சமாக வளரும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியின் காரணமாக அதிகரித்து வரும் அச்சடிப்புச் செலவு அனைத்து அச்சு நிறுவனங்களுக்கும் தாக்குப் பிடிக்க முடியாததாகி வருவதாகத் தெரிவித்த தலைவர், நாட்டில் அமைதியான சூழலைப் பேண முடிந்தால் எதிர்காலத்தில் இந்நிலைமையை ஓரளவுக்கு தணிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

ஆசிரியர் பீட பணிப்பாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் சிசிர பரணதந்திரி,நிறுவனத்தின் சட்ட அலுவல்கள் பணிப்பாளர் ஜனக ரணதுங்க, நிதி அலுவல்கள் பணிப்பாளர் பேராசிரியர் ஹரேந்திர காரியவசம், பிரதம ஆசிரியர்கள் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

 

உள்ளூர் ஆடை உற்பத்தி உபகரணங்கள் அல்லது உபகரணங்களின் இறக்குமதிக்கு வரிச்சலுகை வழங்குவதற்கு கைத்தொழில் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரனவினால் முன்வைக்ககப்பட்ட கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன (3) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை முடுவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே கோவிட் 19 தொற்றுநோய்க்கு மத்தியிலும் இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் முக்கிய துறைகளில் ஒன்றாக ஆடைத் துறைக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குணவர்தன சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், மூலப்பொருட்களின் விலையேற்றம் மற்றும் நாட்டில் நிலவும் சாதகமற்ற பொருளாதார சூழல் காரணமாக, உள்ளுரில் உற்பத்தி செய்யப்படாத ஆடை உற்பத்திக்குத் தேவையான உபகரணங்களை இறக்குமதி செய்யும் போது, உள்ளூர் ஆடை உற்பத்தியாளர்கள் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

அதன்படி, நிலவும் சூழ்நிலைக்கு ஒரு தீர்வாக, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படாத மற்றும் ஒத்திசைக்கப்பட்ட அமைப்பு (HS) குறியீடுகளின் கீழ் வரும் உள்ளூர் ஆடை உற்பத்தி உபகரணங்கள் அல்லது / பொருட்கள் இறக்குமதிக்கு வரிச் சலுகைகளை வழங்குவதற்கு கைத்தொழில் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதென்றும் தெரிவித்தார்.

 

 

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (03) வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்நிகழ்வு எளிமையாக இடம்பெற்றதுடன், மரியாதை வேட்டுக்கள் தீர்த்தல் மற்றும் வாகனத் தொடரணி இடம்பெறவில்லை.

இன்று மு.ப. 9.50 இற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களின் வருகை இடம்பெற்றது. அதனை அடுத்து பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களின் வருகை இடம்பெற்றதுடன், அதனைத்தொடர்ந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வருகை இடம்பெற்றது.

இதன்போது, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க ஆகியோர் பாராளுமன்ற கட்டடத்தின் பிரதான நுழைவாயிலின் படிக்கட்டுக்கு அருகில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வரவேற்றனர்.

இங்கு முப்படையினரால் ஜனாதிபதிக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தபட்டது. அதனை அடுத்து படைக்கலசேவிதர், பிரதி படைக்கல சேவிதர் மற்றும் உதவி படைக்கல சேவிதர் ஆகியோர் முன்செல்ல சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோரினால் ஜனாதிபதி பாராளுமன்றக் கட்டடத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்டார்.

இதன்போது பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகே கொழும்பு தேவிபாலிகா வித்தியாலய மாணவியர் ஜயமங்கல கீதம் இசைத்தனர்.

இதன் பின்னர் உடையணி அறைக்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்கள் மு.ப 10.25 மணிவரை அங்கிருந்து, அதனைத் தொடர்ந்து செங்கோலைக் கையில் தாங்கியவாறு படைக்கல சேவிதர் உள்ளிட்டவர்களுடன் சபா மண்டபத்துக்குள் வருகை தந்தார். அதனைத்தொடர்ந்து மு.ப. 10.30 அளவில் ஜனாதிபதி அக்கிராசனத்தை ஏற்று அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்தார். இம்முறை ஜனாதிபதியின் ஆசனத்தில் ஜனாதிபதியுடைய இலச்சினைக்கு பதிலாக அரசாங்கத்தின் இலச்சினை பொருத்தப்பட்டிருந்தது விசேட அம்சமாகும். ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்ததை அடுத்து பாராளுமன்றம் எதிர்வரும் ஆகஸ்ட் 09 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

அதனை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்களுக்கு தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஜனாதிபதி மற்றும் முதற்பெண்மணி ஆகியோர் பாராளுமன்றத்தை விட்டு வெளியேறும்போதும் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கும் நிகழ்விற்கு வெளிநாட்டு இராஜதந்திரிகள், பிரதம நீதியரசர், உயர்நீதிமன்ற நீதிபதிகள், சட்டமா அதிபர், பாதுகாப்புச் செயலாளர், முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட விசேட விருந்தினர்கள் வருகை தந்திருந்தனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை

பாராளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை நம்பிக்கையினை பெற்றுக்கொண்ட நபர் என்ற வகையில் நான் கடந்த 20 ஆம் திகதி ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். இன்றைய தினத்திலே ஜனாதிபதியாக நான் முதல் முறையாக உரையாற்றுகின்றேன்.

இச்சபையினை இலங்கையின் பல்வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனர். சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், பறங்கியர் மற்றும் ஏனைய இனத்தவர்கள் என நீங்கள் யாராக இருந்தாலும் இலங்கைப் பாராளுமன்றம் என்ற ரீதியிலேயே இந்த இடத்தில் ஒன்று கூடுகின்றீர்கள்.

எமது நாட்டிலே வாழுகின்ற மக்களும் பல்வேறு இனங்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றனர். அவ்வாறு எந்த இனத்தைப் பிரதிநிதித்துவம் செய்தாலும் நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற ரீதியிலேயே செயற்படுகின்றோம்.

நான் இன்று உங்கள் முன் அனைத்து இலங்கையர்களினதும்  ஜனாதிபதியாகவே உரையாற்றுகின்றேன்.

எமது நாடு பல்வேறு கலாசாரங்களை கொண்டுள்ள, பல்வேறு சமயங்களை பின்பற்றுகின்ற, பல்வேறு மொழிகளை பேசுகின்ற மக்களை கொண்டுள்ளது. கலாசார விழுமியங்களை பேணி வருவதற்கும், சமயங்களை பின்பற்றுவதற்கும் மற்றும் தமது தாய் மொழியை பயன்படுத்துவதற்கும் அனைவருக்குமுள்ள உரிமையை உங்கள் ஜனாதிபதி என்ற வகையில் நான் பாதுகாப்பேன்.

அவ்வாறே அரசியலமைப்பின் பிரகாரம் பௌத்த சமயத்துக்கு முன்னுரிமையளித்து, பௌத்த சமயத்தைப் பேணிப் பாதுகாத்து வளர்ப்பதற்கும் அனைத்து சமயங்களினதும் உரிமைகளை பாதுகாப்பதற்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்.

எமக்கு சமய, கலாசார, சமூக ரீதியான மாத்திரமன்றி, பொருளாதார ரீதியாகவும் சிறந்ததொரு பாரம்பரியம் உரித்தாக உள்ளது. அது பல்வேறு கலாசாரங்களினால் வளர்ந்துள்ளது. நான்குவரம் கடவுள்கள் பற்றிய எண்ணகருவானது அவ்வாறே பௌத்த சமயத்துடன் தொடர்புபடுகின்றது. இவ்வாறான பாரம்பரிய மரபுரிமைகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் பொறுப்பு இன்று எம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நான் கஷ்டத்தில் விழுந்திருந்த ஒரு நாட்டையே பொறுப்பேற்றேன். கடுமையான பொருளாதாரப் பிரச்சினை ஒருபுறம். பாரிய மக்கள் எதிர்ப்பு மறுபுறம். எனினும் நாட்டுக்காக இந்த கடினமான சவாலை பொறுப்பேற்க நான் தீர்மானித்தேன். அதற்குக் காரணம் இருளுக்கு சாபமிட்டுகொண்டு இருப்பதை விட ஒரு விளக்கினையேனும் ஏற்றுவது நாட்டிற்காக நான் செய்யும் கடமை என நான் கருதியமையாகும்.

நாம் இன்று நவீன வரலாற்றிலே ஒருபோதும் எமது நாடு முகம்கொடுத்திராத கடுமையான பிரச்சினையொன்றுக்கு முகம்கொடுத்துள்ளோம். நாம் பாரிய அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளோம். அதிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து சவாலை வெற்றிகொண்டால் மாத்திரமே முடியும். இந்த பாராளுமன்றத்தில் இருக்கும் கௌரவ உறுப்பினர்களும் அவ்வாறே நாட்டு மக்கள் அனைவரும் நாட்டினைக் கட்டியெழுப்பும் முயற்சிக்கு தத்தமது சக்திக்கு உட்பட்டவாறு பங்களிப்புச் செலுத்துவது மிகவும் இன்றியமையாததாகும்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக பாராளுமன்றத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என்பதே இச்சந்தர்ப்பத்தில் பெரும்பாலான நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும். ஒன்றிணையும் பட்சத்தில் எம்மால் நாட்டினைக் கட்டியெழுப்ப முடியும். பிரிந்து சென்றால் இப்பாராளுமன்றத்தில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகள் மாத்திரமன்றி முழு நாட்டு மக்களும் துன்பத்திற்கும் அழிவிற்கும் ஆளாகுவர்.

எனவே சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காக ஒன்றிணையுமாறு இந்த பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்துத் தரப்பினரிடம் நான் மீண்டும் வேண்டுகோள் விடுக்கின்றேன். நான் உங்கள் அனைவருக்கும் நட்பின் கரத்தை கௌரவத்துடன் நீட்ட விரும்புகின்றேன். கடந்த காலத்தினை பின்தள்ளிவிட்டு நாட்டினைக் கட்டியெழுப்புவதற்காக ஒன்றிணையுமாறு நம்பிக்கையுடன் அழைப்பு விடுக்கின்றேன். சர்வகட்சி அரசாங்கம் பற்றி அரசியல் கட்சிகளுடன் நடாத்தும் பேச்சுவார்த்தையினை நான் ஏற்கனவே ஆரம்பித்துள்ளேன்.

எனது வேலைத்திட்டத்தை ஆராய்ந்து, அதன் பின்னர் சர்வகட்சி அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்கு இணக்கப்பாட்டினைத் தெரிவிப்பதாக சில தரப்பினர் தெரிவித்திருந்தனர். அது பற்றியும் இங்கு கருத்துக்கூற விரும்புகிறேன். சர்வகட்சி அரசாங்கம் என்பது ஒரு கட்சியின் தனி விருப்பத்திற்கேற்ப செயற்படுகின்ற அரசாங்கமொன்றல்ல. அது பொது கொள்கை வட்டத்தினுள் அனைத்துத் தரப்பினரதும் கருத்துக்களின் பிரகாரம் பயணிக்கும் அரசாங்கமொன்றாகும். அது நம் அனைவரினதும் கருத்துக்களின் பிரகாரம் செயற்படும் அரசாங்கமொன்றாகும். அது நாட்டிற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுத்துச் செல்லுகின்ற ஒரு அரசாங்கமாகும்.

விரைவில் இந்த அரசியல் நெருக்கடியினைத் தீர்த்துக்கொண்டு ஸ்திரத்தன்மை ஒன்றினை ஏற்படுத்திக்கொள்வதற்காக சர்வகட்சி அரசாங்கம் ஒன்றின் முக்கியத்துவம் பற்றி நான் இச்சபைக்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன்.

பொருளாதாரம் சரிந்து விழுந்ததினால் எமது நாடு பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டது. இவ்வாறு எமது பொருளாதாரம் ஏன் சரிந்து விழுந்தது.

எமது பொருளாதார முறைமைகள் எவ்வாறு அமைய வேண்டுமென்பது பற்றி நாம் இன்று மூன்று நான்கு தசாப்தங்களாக விவாதித்து வருகின்றோம். 1977 ஆம் ஆண்டு எமது நாட்டிற்கு புதிய பொருளாதார முறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் காலத்திற்கு பொருந்தக் கூடியவாறு அதனை எம்மால் நவீனமயப்படுத்த முடியவில்லை. பொருளாதாரத்தை நவீனமயப்படுத்துவதற்கு கவனம் செலுத்தாது போட்டித்தன்மை, தூரநோக்கற்ற அழிவுமிக்க குறுகிய அரசியலில் நாம் ஈடுபட்டோம். யுக்ரேன் யுத்தம் மற்றும் கோவிட் தொற்று என்பன காரணமாக உலகின் பிரதான பொருளாதாரங்கள் சரிந்து விழுதல் உள்ளிட்ட சர்வதேசத்தில் இடம்பெற்ற அனுகூலமான பொருளாதாரக் காரணிகள் எமது நெருக்கடியை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கியது.

இந்த அனைத்து காரணிகளினாலும் எமது நாடு மிகவும் பாதாளத்திற்குத் தள்ளப்பட்டது. மக்கள் பெரும் கஷ்டங்களுக்கு ஆளாகினர். தற்போது நாம் விழுந்த இடத்திலிருந்து மீண்டெழுவதற்கான முயற்சியினை ஆரம்பித்துள்ளோம்.

தற்போதுள்ள மின் வெட்டினை குறைத்துக்கொள்ள எம்மால் முடிந்துள்ளது. பயிர்செய்கைக்காக எதிர்காலத்தில் தேவைப்படும் உரத்தைக் கொண்டுவருவதற்கான பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. சமையல் எரிவாயு பிரச்சினை தற்போது முழுமையாக தீர்க்கப்பட்டுவரும் நிலையில் உள்ளது. வரிசையில் காத்திருக்காது சமையல் எரிவாயுவை இன்னும் சில தினங்களில் அனைவராலும் பெற்றுக்கொள்ள முடியும். உணவுத் தட்டுபாடொன்று ஏற்படாதவாறு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்து வகைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் என்பவற்றினைக் கொள்வனவு செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைத்தொழில்கள் மற்றும் ஏற்றுமதித் துறை என்பவற்றிற்கு ஏற்பட்டுள்ள தடைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

மீளெழும் முயற்சியிலே எமது அயல் நாடான இந்தியா வழங்கிய ஒத்துழைப்பு தொடர்பாக நான் விசேடமாக இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான இந்திய அரசாங்கம் எமக்கு வழங்கிய உயிர் மூச்சுக்கு நான் இலங்கை மக்கள் சார்பாக  பிரதமர் மோடி அவர்களுக்கும், இந்திய அரசாங்கத்திற்கும், இந்திய மக்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

தற்போது எமது முன்னால் உள்ள குறுங்கால பிரச்சினை எரிபொருள் தட்டுப்பாடாகும். எரிபொருளை கொண்டு வருவதற்காக ஏனைய நாடுகளிடமிருந்து கடன் உதவிகள் கிடைக்கும் வரையில் காத்திருக்கும் முறைமையை நாம் முடிவுக்கு கொண்டு வருதல் வேண்டும் எனவே எமது நாட்டின் ஏற்றுமதி வருமானம் மற்றும் வெளிநாட்டு நாணயமாற்று ஊடாக எரிபொருளை கொண்டு வருவதற்கான முறைமை ஒன்றினை நாம் ஆரம்பிக்க உள்ளோம். இதன்போது எரிபொருளுக்கான கொடுப்பனவினை சமப்படுத்திக்கொள்வதற்காக தேர்ந்தெடுத்த இறக்குமதிகளை வரையறுத்துக்கொள்ள வேண்டியும் எமக்கு ஏற்படும். மறுபுறம் எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டியும் ஏற்படும். எனவே இந்த ஆண்டின் இறுதி வரையில் இந்த கஷ்டத்தினை நாட்டுக்காக நாம் தாங்கிக்கொள்ளல் வேண்டும்.

பொருளாதார நெருக்கடி காரணமாக நாம் அனைவரும் பல்வேறுபட்ட இன்னல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றோம். துன்பப்படுகின்றோம், கஷ்டப்படுகின்றோம் சிக்கல்களுக்கு ஆளாகின்றோம். இவ்வாறான கஷ்டங்கள் மற்றும் துன்பங்கள் என்பவற்றிலிருந்து விடுபடுவதற்கான பாதையை நோக்கி இந்நாட்டினைக் கொண்டுசெல்வதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்புடன் நான் நடவடிக்கை எடுப்பேன்.

இந்த கஷ்டங்களிலிருந்து மீழுவதற்கு நாம் நீண்ட கால தீர்வுகளை நோக்கிப் பயணித்தல் வேண்டும். மீண்டும் ஒருபோதும் எமது நாட்டிலே இவ்வாறான பொருளாதார நெருக்கடியொன்று ஏற்படாதவாறு பலமிக்க அடித்தளமொன்றினை இடுதல் வேண்டும். பொருளாதாரத்தை நவீனமயப்படுத்துதல் வேண்டும். பொருளாதார ஸ்திரத்தன்மையினை ஏற்படுத்தி, போட்டித்தன்மைமிக்க சந்தைப் பொருளாதாரம் ஒன்றின் பக்கம் மாற்றியமைத்தல் வேண்டும்.  அவற்றிற்குத் தேவையான அறிக்கைகள், திட்டமிடல், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்கள் என்பவற்றினை தற்போது நாம் தயாரித்து வருகின்றோம்.

நான் இன்று உங்கள் முன்னிலையில் தெளிவுபடுத்துவது  எங்கள்   எதிர்காலத்துக்கு அடிப்படையாகும் திட்டமிடல் சட்டகமாகும். இச்சட்டகத்தினுள் நாம் நடைமுறைப்படுத்தும் செயல்திட்டங்கள் என்பவை தொடர்பான விபரமான தகவல்கள் எதிர்காலத்தில் பாராளுமன்றத்திற்கு  சமர்ப்பிக்கப்படும் இடைக்கால வரவுசெலவு மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தினூடாக  முன்வைக்கப்படும்.

மீளெழுச்சிபெறும்   ஆரம்பக் கட்டமொன்றாக நாம் சர்வதேச நிதியத்தோடு நான்கு வருட வேலைத் திட்டமொன்று தொடர்பான கலந்துரையாடல்களை ஆரம்பித்தோம். ஆகஸ்ட் மாதத்திலிருந்து நாம் அந்த கலந்துரையாடல்களை மீண்டும் முன்னெடுத்துச் செல்வோம். ஆரம்ப கட்ட உயர்மட்டத்திலான கலந்துரையாடல்களை துரிதமாகவும் சிறப்பான முறையிலும் முடிப்பது எமது எதிர்பார்ப்பாகும்.

சர்வதேச நிதியம் மற்றும் சட்ட நிபுணர்களான லசாட் மற்றும் கிளிபட் சான்ஸ் நிறுவனங்களோடு சேர்ந்த கடன் நிலைபடுத்தும்  திட்டம் தற்போது முடியுறும் தறுவாய்க்கு வந்துள்ளது. இந்த திட்டத்தை இன்னும் சில தினங்களில் நாம் சர்வதேச நிதியத்திடம் முன் வைப்போம். அதன் பின்பு எமக்கு கடன் உதவிகள் வழங்கியுள்ள நாடுகளோடு கலந்துரையாடுவோம். அதன் பின்பு தனியார் கடனாளிகளோடும் கலந்துரையாடல்களை ஆரம்பிப்போம். அவர்களோடு உடன்பாட்டுக்கு வருவோம்.

இறுதியாக ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்குத் தேவையான கொள்கைகள் மற்றும் சட்டங்கள் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்களை வகுப்போம். எமது கடந்த கால பொருளாதார உரிமை வெளிநாட்டு வர்த்தகமாகும். கடந்தகாலத்தில் இலங்கையை கடல் பட்டுப்பாதையில் அமைந்த பிரதான பொருளாதாரக் கேந்திர நிலையமொன்றாக இனங்கண்டிருந்தார்கள். இலங்கை ஒரு காலத்தில் கீழைத்தேய தானிய களஞ்சியமொன்றாக அறிமுகமானது அதனால்தான் முழு வலயத்திலும் இருந்த அரிசியை உலகம் பூராகவும் பகிர்ந்தளிக்கும் மத்திய நிலயமாக இலங்கை இருந்தது.

அந்தக் கடந்தகால உரிமைகளை மீண்டும் நிலைநாட்டுவதன்மூலம் வலுவான மற்றும் அபிவிருத்தியான பசுமை பொருளாதாரமொன்றை உருவாக்குவதே  எமது இறுதி இலக்காக இருந்தது. காலநிலை மாற்றங்கள் எதிர்கால உலகம் முகம்கொடுக்கும் பாரிய பிரச்சினையொன்று என்பதை இனங்கண்டுள்ளோம். காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளக்கூடிய வலுவான பொருளாதாரமொன்றை நாம் உருவாக்குதல் வேண்டும். மகா பராக்கிரமபாகு அரசர் கூறியதுபோல வானத்திலிருந்து விழும் ஒரு துளி நீரைக்கூட வீணாகாது நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இன்று நாம் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியின் பிரதிபலனாக இருப்போர் இல்லாதோர் இடைவெளி விரிவடைந்துகொண்டு செல்கின்றது. நடுத்தர வகுப்பினர் சுருங்கிச் செல்கின்றார்கள். இன்னுமொரு பக்கத்தில் தொழில்முயற்சிகள் மற்றும் கைத்தொழில்கள் பாரிய சவால்களுக்கு முகம் கொடுக்கின்றன. தொழில்கள் இல்லாது போகின்றன.

கடந்த காலத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் இலங்கைக்கு அனுப்பும் நிதியின் அளவு குறைந்துவிட்டது. அதற்குப் பல காரணங்கள் உள்ளன. கோவிட் தொற்றுப்பரவல் காரணமாக பல தொழில்கள் இல்லாது போனது. தொழில்களுக்காக வெளிநாடு செல்வோர் குறைந்துள்ளனர். ரூபாயின் பெறுமதியைச் செயற்கையாகக் கட்டுப்படுத்தியதன் காரணமாக வேறு முறைகளின்மூலம் இலங்கைக்கு பணம் அனுப்புதல் மிகவும்  இலாபகரமானதாக இருந்தது. தற்போது படிப்படியாக இந்நிலைமை மாற்றமடைந்து வருகின்றது. வங்கி முறைமையினூடாக இலங்கைக்குப் பணம் அனுப்புதலை ஊக்குவிப்பதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்.

சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருவது ஆகஸ்ட் மாதத்திலிருந்தாகும். இச்சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் வருவித்துக்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நாம் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துகின்றோம். அரச  உரிமைப்பத்திரதாரிகளுக்கு  அறுதி உறுதிப் பத்திரம்  வழங்குவோம். அரச  மாடிவீடுகளில் வசிப்போருக்கு வீட்டு உரிமைகளை வழங்குவோம். தோட்டத்துறையில் வாழும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவோம்.

பொருளாதாரத்தை  நிலைபேறுடையதாக்கும் முயற்சியின்போது சமூகத்தின் வலுவற்ற மற்றும் நிர்க்கதியானோர் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்துவோம்.  நாட்டின் தொழில்முயற்சியாளர்களுக்கு தங்களது ஆற்றல்களினூடாக முன்வருவதற்குத் தேவையான வழிகளை மேலும் விரிவுபடுத்துவதோடு சமூகத்தில் கீழ்மட்டத்தில் வசிக்கும் மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு நடவடிக்கை எடுப்போம். நாடுபூராகவும் வசிக்கும்  ஏழை மக்களுக்கு குறுகியகால நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம். அதேபோன்று அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு நீண்டகால வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவோம். நான் சமூக மாற்றங்களுக்காக அர்ப்பணிப்போடு செயற்படுவேன்.

நான் எதிர்காலத்திற்காக மேற்கொள்ள வேண்டிய நேர்மறையான சமூக மாற்றங்களுக்காக அர்ப்பணிப்பேன். மீண்டும்  விரிவான நடுத்தர  வர்க்கத்தினரை உருவாக்குவதற்குத் தேவையான  அடிப்படையை உருவாக்குவேன். சமூக சந்தைப் பொருளாதாரம் ஒன்றின் ஊடாக நன்மைகள் முழு சமூகத்திற்கும் நியாயமானவாறு பெற்றுக்கொடுப்பேன். இக்குறிக்கோள்களை ஈடேற்றும் செயற்பாடுகளுக்காகச் சமூக நியாயாதிக்க ஆணைக்குழுவொன்றைத் தாபிப்பதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன்.

இற்றைக்கு நான்கு அல்லது ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் அரச தொழில்முயற்சிகள் தொடர்பில் பொருளாதார எண்ணக்கருவொன்று இருந்தது. ஆனாலும் அது  தோல்வியான மற்றும் வினைத்திறனற்றதென்பதை தற்போது முழு உலகமும் ஏற்றுக்கொண்டுள்ளது. சோசலிச  நாடுகளான சீனா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளும் தற்போது அரச தொழில்முயற்சிகளை செயற்படுத்துவதில்லை. நாம் மேலும் பண்டைய  எண்ணக்கருக்களில் தங்கிநின்றால்  எமது நாடு மேலும்  கீழ்நோக்கிச் செல்வதைத் தடுப்பதற்கு யாருக்கும் முடியாமல் போகும். ஆகையினால் இவ்வாறு நட்டமடையும் அரச முயற்சிகளை  முன்னெடுத்துச் செல்வது எவ்வாறு என்பதுபற்றி எமக்கு கொள்கைரீதியான தீர்மானங்களை எடுக்கவேண்டிவரும்.

இற்றைவரை உலகத்தில் பொருளாதார வல்லமைகொண்ட நாடுகளாக மேற்குலக நாடுகளே இருந்தன. ஆனாலும் 21 ஆம் நூற்றாண்டு முடிவடைவதற்கு முன்னதாக உலகத்தில்  வலுவான பொருளாதாரம்  இந்து சமுத்திரப் பிராந்தியத்துக்கு உரித்தாகும்.  அவ்வாறான பின்புலத்தில் எமது நாட்டின்  புவிசார் அமைவு மிகவும் முக்கியமானதாகும். நாம் இந்த இலாபகரமான அமைவின் உச்சப் பயனை பெற்றுக்கொள்ள வேண்டும். இதனை மனதில் நிறுத்திக்கொண்டு எமது எதிர்கால  நிறுவன சட்டங்கள் மற்றும் கொள்கைகளை வகுத்தல் வேண்டும். தினந்தோறும் கடன் பெற்றுக்கொள்வதன்மூலம் நாட்டை முன்கொண்டுச் செல்ல எம்மால் முடியாது. கடன் எடுப்பதை இயன்ற அளவு குறைத்துக்கொள்வதற்கு நாம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும். ஆகையினால் இந்து சமுத்திர கேந்திரீய புதிய பொருளாதார வலுவினால் எமது நாட்டுக்கு உச்சபட்ச பயனை பெற்றுக்கொள்ளக்கூடிய சட்டதிட்டங்கள் மற்றும் கொள்கைகளை நான் உங்களோடு சேர்ந்து வகுப்பேன்.

இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காகப் பாடுபடும்போது சம்பிரதாய சிந்தனையிலிருந்து விடுபடுமாறு நான் சகல தரப்பினரிடமும் கேட்டுக்கொள்கின்றேன். வெறுமனே அதிக வட்டிக்கு வர்த்தகக் கடன்களைப் பெற்றுக்கொள்ளும்போது அமைதியாகப் பார்த்திருந்த சில குழுக்கள் நாட்டுக்கு பொருத்தமான முதலீடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். பொய்யான  பலிக்கடாக்களை உருவாக்கி மக்களை திசைதிருப்புகின்றார்கள்.

யாரேனும்  சொல்வதை ஆராய்ந்து பார்க்காமல் ஏற்றுக்கொண்டு வெளிநாட்டு முதலீடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதனால் எமது நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பை அளவிட முடியாது. ஊழல் மற்றும் மோசடி ஊடாக நாட்டின் நிதி மற்றும் வளங்களைக் களவாடியதனால் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்புகள்பற்றி மக்கள் அறிவார்கள்.  ஆனாலும் பொய் பலிக்கடாக்களை எடுத்துக்காட்டி வெளிநாட்டு முதலீடுகளைத் தடைசெய்து நாட்டுக்கு ஏற்படுத்திய இழப்பு கணக்கிட முடியாத அளவுக்கு விசாலமானதாகும்.

நான்  உதாரணங்கள் பலவற்றை எடுத்துக் காட்டுகின்றேன்.

இந்தியாவோடு ஒன்றிணைந்து திருகோணமலை எண்ணெய்த்தாங்கித் தொகுதியினை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கும்போது இந்தியாவுக்கு இலங்கையை விற்கின்றார்கள் என்று கூறி அபிவிருத்தித் திட்டத்துக்கு இடையூறு விளைவித்தனர். அன்று எமக்கு எண்ணெய்த்தாங்கித் தொகுதியினை அபிவிருத்தி செய்துகொள்வதற்குச் சந்தர்ப்பம் கிடைத்திருப்பின் இன்று மக்களுக்கு எரிபொருள் வரிசைகளில்  நீண்டநாட்கள்  அலைவதற்கு  அவசியம் ஏற்பட்டிருக்காது.

சுவசெரிய நோய் காவு வண்டிகளின் சேவையை ஆரம்பிக்கும்போது அதேபோன்று எதிர்ப்புகளைச் செய்தார்கள். சுவசெரிய நோய் காவு வண்டிகள்  வைத்தியசாலைகளுக்கு வந்தால் ஏற்படுவது மரணம் எனக்கூறி சில வைத்தியர்கள்  ஊடகக் கலந்துரையாடல்கள் நடத்தினார்கள். ஆனாலும் நாம் எவ்வாறாயினும் சுவசெரியவை ஆரம்பித்ததனால் தற்போது பல்லாயிரக்கணக்கான  உயிர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மக்களை  வழிதவறி நடத்தி  தடைசெய்த கருத்திட்டங்கள் காரணமாக எமது பொருளாதாரக் கட்டமைப்பு  அழிவடைந்தது.

இலகு புகையிரதச் சேவையைத் தாபிப்பதற்கும், துறைமுகத்தை மேம்படுத்துவதற்கும் ஜப்பான் நாடு முன்வந்த சந்தர்ப்பத்தில் அதற்கெதிராக அடிப்படையற்ற வீணான காரணிகள் பலவற்றை எடுத்துக்காட்டியதன் காரணமாக எமது நாட்டுக்குக் கிடைப்பதற்கிருந்த 3 பில்லியன் டொலருக்கு அதிகமான அளவு  கிடைக்காமல் போயிற்று. அதுமட்டுமன்றி  ஜப்பான் மற்றும் இலங்கைக்கிடையே இருந்த நீண்டகால  நட்பு சிதறிப்போனது.

இக்கருத்திட்டங்களை எமக்குப் பெற்றுத்தருவதற்கு தலைமை தாங்கியவர் இலங்கையின் உற்ற நண்பனான முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அவர்களாவார். அவர் அண்மையில் படுகொலை செய்யப்பட்டார். எமது சமய நம்பிக்கைப்படி நான் அபே அவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்க விரும்புகின்றேன்.

அபிவிருத்தி பொருளாதாரம் ஒன்றினை நோக்கி நாம் பயணிக்கும் பாதையினை மிகவும் பலப்படுத்திக் கொள்வதற்காக நாம் கடந்த காலத்தை பற்றி திரும்பிப் பார்த்தல் வேண்டும். எமது பொருளாதாரம் இந்த அளவு வீழ்ச்சி அடைவதற்கு காரணம் என்ன? எதிர்மறையான பிரதிபலன்கள் எம்மை ஏன் வந்தடைந்தன? தனி நபர்கள் செய்த தவறுகள் மூலமா? அல்லது கொள்கை ரீதியான குறைபாடுகள் காரணமாகவா? ஒவ்வொரு நபரும் நாம் விரும்பியவாறு பொருளாதாரத்தை வழிநடத்த எவ்வாறு வாய்ப்பு ஏற்பட்டது? நபருக்கு நபர் நாட்டின் பொருளாதாரக் கொள்கை மாற்றம் அடையலாமா? காலத்திற்கு காலம் அவ்வாறு கொள்கைகளை மாற்றுவது நாட்டிற்கு பயன்மிக்கதா? அல்லது பயனற்றதா?

இது பற்றி நாம் ஆழமாக தேடிப் பார்த்தோம். அதற்கு தீர்வாக எதிர்வரும் 25 வருடங்களுக்கு நாங்கள் தேசிய பொருளாதார கொள்கை ஒன்றினை தயாரிக்க உள்ளோம். வறிய மற்றும் குறைந்த வருமானம் பெறுகின்ற குழுக்களை கவனித்து தொழில்முயற்சியாளர்களை ஊக்குவித்து உருவாக்குகின்ற சமூக சந்தைப் பொருளாதார முறைமைக்குத் தேவையான அடித்தாளத்தை இடுவேன்.

2025 ஆம் ஆண்டளவில் ஆரம்ப நிலை வரவுசெலவுத் திட்டத்தில் மிகை ஒன்றினை ஏற்படுத்துவது எமது முயற்சியாகும். பொருளாதார அபிவிருத்தி வேகத்தை நிலையான தன்மைக்கு உயர்த்துவதும் நமது முயற்சியாகும். 2026 ஆம் ஆண்டாகும் போது நிலையான பொருளாதார அடிப்படை ஒன்றினை உருவாக்கிக் கொள்வது எமது எதிர்பார்ப்பாகும் தற்போது அரச கடன் அளவானது மொத்த தேசிய உற்பத்தியின் நூற்றுக்கு 140 சதவீதம் ஆகும். இதனை 2032 ஆம் ஆண்டளவில் மொத்தத் தேசிய உற்பத்தியில் நூறு சதவீதத்தை விடவும் குறைப்பது எமது திட்டமாகும்.

அவ்வாறு தேசிய பொருளாதாரக் கொள்கையின் ஊடாக நாட்டினையும் நாட்டு மக்களையும் கட்டியெழுப்பும் செயற்பாட்டினை முன்னெடுத்துச் சென்றால், 2048 ஆம் ஆண்டிலே சுதந்திர தின நூற்றாண்டினைக் கொண்டாடும்போது, முழுமையான அபிவிருத்தி அடைந்த ஒரு நாடக எம்மால் மாற முடியும்.

நான் இவ்வாறான நீண்டகால இலக்குகளுக்குத் திட்டங்களைத் தயாரிக்கும்போது சிலர் பரிகாசமாகப் பார்க்கின்றார்கள். கேலிக்கதைகள் சொல்கின்றனர். ஆம். நான் ஏனைய அரசியல்வாதிகள் போன்றவர் அல்ல. என்னிடம் இருப்பது நீண்டகாலத் திட்டங்கள். நான் திட்டமிடுவது எனது முன்னேற்றத்துக்காக அல்ல. இளைஞர் சமுதாயத்துக்காகவே. நாளைய நாளுக்காகவே. நான் இன்று நாட்டும் மரத்தின் அறுவடையை எனக்கு அனுபவிக்க கிடைக்காது என்பதை நான் நன்றாக அறிவேன். ஆனாலும் நாளைய தினம் எமது பிள்ளைகளான எதிர்காலப் பரம்பரைகள் அந்த அறுவடையை அனுபவிப்பார்கள்.

எமது நாட்டின் வெளிநாட்டுக் கொள்கை தொடர்பிலும் விசேடமாகக் குறிப்பிட நான் விரும்புகின்றேன். வெளிநாட்டுக் கொள்கையில் உறுதியற்ற தன்மை காரணமாக எமக்கு சர்வதேச மட்டத்தில் அதிகளவிலான இழப்பீடுகள் மற்றும் பின்னடைவுகள் ஏற்பட்டன. நான் இந்த நிலைமையை மாற்றுவேன். உலகத்தில் சகல நாடுகளும் எனது நண்பர்கள். எமக்கு எதிராளிகள் இல்லை. நாம் எந்தவொரு கட்சியையும் சேர்ந்தவர்கள் அல்லர். சகல நாடுகளோடும் நட்புரீதியான கொள்கையைப் பின்பற்றுவதனை நான் உறுதிப்படுத்துகின்றேன்.

சுபீட்சமான இலங்கையொன்றைக் கட்டியெழுப்புவதற்காகப் பொருளாதார மேம்படுத்தலுக்குச் சமாந்திரமாக சமூக மற்றும் அரசியல் மறுசீரமைப்பகள் பலவற்றைச் செய்யவேண்டுமென நான் இதற்கு முன்பும்  வலியுறுத்தியுள்ளேன். எமது நாட்டின் மக்களும் பாரிய அரசியல் மறுசீரமைப்புச் செயற்பாடொன்றை எதிர்பாரக்கின்றனர்.

இன்று  ஏற்பட்டுள்ளது என்ன? அரசியல் முறைமை மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பான மக்களது நம்பிக்கை அற்றுப்போய்விட்டது. அரசியல் பொறிமுறை தொடர்பான மக்களது எதிர்பார்ப்புகள் உடைந்துபோயுள்ளன. கடந்தகாலம் பூராகவும்  எதிர்ப்பில் ஈடுபட்ட மக்கள் இந்த  முறைமைத்தொகுப்பின்  மாற்றத்தை கேட்டு நின்றது அதற்காகத்தான்.

இலங்கை நாட்டையும் நாட்டு மக்களையும் கட்டியெழுப்புவதற்குத் தேவையான சகல மாற்றங்களையும் செய்வதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன். நாடு கேட்கும் சமூக மற்றும் அரசியல் மறுசீரமைப்புகளை நான் நடைமுறைப்படுத்துவேன்.

ஆட்சி முறையில் மாற்றமொன்றை ஏற்படுத்தும் நோக்கில், நாடு பூராக ஆங்காங்கே ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்கள் பிற்காலத்தில் காலிமுகத்திடலில் கேந்திரமானது. நாட்டின் பிரதான நகரங்கள் சிலவற்றுக்கும் அது வியாப்தியடைந்தது. இந்தப் போராட்டமானது மிகவும் அஹிம்சையாகவும் ஆக்கபூர்வமாகவும் இடம்பெற்றது. இப்போராட்டக்காரர்கள் எந்தவொரு வன்முறைகளிலும் ஈடுபடவில்லை. அதன் காரணமாகவே குடும்பம் குடும்பமாக வந்து போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினர். சிறு குழந்தைகளையும் போராட்ட பூமிக்கு அழைத்து வருவதற்கு பெற்றோர்கள் அச்சம் கொண்டிருக்கவில்லை.

ஒரு சந்தர்ப்பத்தில் போராட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தின் சுவர்களில் சித்திரம் வரைந்தனர். ஆனால் எந்தவிதமான பாதிப்பும் இல்லாதவாறு டிஜிட்டல் முறையில். ஆனால் அதன்பின்னர் இப்போரட்டத்தில் அஹிம்சாவாதம் கீழ்படிந்து வன்முறை மேலெழுந்தது. ஒரு சில குழுக்கள் போராட்டத்தின் ஒற்றுமையை மிதித்து போராட்டத்தின் உரிமையாளர்களாக மாறினர். அவர்கள் அன்பிற்கு பதிலாக போராட்டத்தில் வன்முறையை திணித்தனர். நான் ஒருபோதும் வன்முறை மற்றும் பயங்கரவாதத்திற்கு இடமளிக்கமாட்டேன். ஆயினும் அஹிம்சை மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பேன். அமைதியாக போராட்டத்தில் ஈடுபடுவது அடிப்படை உரிமையாகும். அந்த உரிமையை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

நான் இந்தப் போராட்டக்காரர்களை வேட்டையாடப் போவதாக பாரிய பிரச்சாரத்தை சில குழுக்கள் சமூக ஊடகங்களின் வாயிலாக பரப்ப முயற்சித்து வருகின்றனர். ஆயினும் அது உண்மையல்ல. நான் அமைதியான போராட்டக்காரர்களுக்கு எந்தவொரு வகையிலும் பாதிப்பை ஏற்படுத்த இடமளிக்கப்போவதில்லை.  அமைதியான போராட்டக்காரர்களைப் பாதுகாக்கவும், அவர்களுக்காக முன்வருவதற்கும் நான் விசேட செயலணியொன்றை தாபிப்பேன்.

அமைதியான போராட்டக்காருக்கு அநீதி விளைவித்தால் அந்தச் செயலணிக்கு நாளில் 24 மணித்தியாலத்தில் எந்த ஒரு நேரத்திலும் முறைப்பாடு செய்ய முடியும். அவ்வாறான அறிவித்தல்கள் குறித்து விசாரித்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் குழுவொன்றை தாபிப்பேன்.

ஆயினும், திட்டமிட்டு சட்டத்தை மீறி, வன்முறை மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களும் உள்ளனர். அவர்களுக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தை மீறி செயல்பட எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை. சட்டம் எனக்கும், உங்களுக்கும், அனைவருக்கும் ஒன்று.

மே 09ஆம் திகதி அமைதியான போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மற்றும் போராட்டத்தின் பெயரில் வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை பரப்பும் நபர்கள் குறித்தும் அதேபோன்று சட்டத்தை அமுல்படுத்துவேன். இந்தச் செயற்பாட்டின்போது எந்த ஒரு அரசியல் அழுத்தம் இடம்பெறாத வகையில் பொறுப்புக்கூறுவேன்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வன்முறையைத் தூண்டும் குழு உள்ளனர். நாட்கணக்காக வரிசையிலுள்ள மக்களுக்கு எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கு இடமளிக்காது, பலவந்தமாக வரிசைகளை கடந்து முன்வருவோர் குறித்து முறைப்பாடுகள் வந்த வண்ணம் உள்ளன. இவ்வாறான பாதாள உலக கோஷ்டிகளுக்கு இடமளிக்க முடியாது.  இப்போது நாம் எரிபொருள் நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் நேரம். ஆகவே எமக்கு விநியோகிக்க கூடிய குறைந்தளவான எரிபொருளை நியாயமான முறையில் விநியோகிக்க வேண்டும். வரிசையை அத்துமீறுபவர்களுக்கு எதிராகச் சட்டத்தை வன்மையாக பிரயோகிக்க வேண்டுமென நான் பொலிசாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்.

ஆகஸ்ட் மாதம் பௌத்த மற்றும் இந்து சமய பிரதான பல நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. ஆகஸ்ட் மாதம் அதிகமான சுற்றுலா பயணிகளும் வருகை தருவதற்கான காரணங்களில் வைபவமும் ஒன்று. ஆயினும் நாட்டின் குழப்பமான பின்னணி ஏற்படுத்தி வைபவங்களை சீர் குலைப்பதற்கும் ஒரு சில குழுக்கள் முயற்சித்து வருவதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பிரிவினர் இது குறித்து அவதானிப்புடன் உள்ளனர். இவ்வாறான சூழ்ச்சிகளில் சிக்கி நாட்டின் எதிர்காலத்தை சீர்குலைக்கும் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாமென நான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.

அமைதியான முறையில் எதிர்ப்பினைத் தெரிவிப்பதற்காக கொழும்பு மாநகர சபை மற்றும் கண்டி மாநகர சபை என்பவற்றின் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களில் எதிர்ப்புத் தெரிவிக்கின்ற போராட்டக்காரர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கு மாநகர சபை நடவடிக்கை எடுக்கும். எனவே நான் மிகவும் வினயமாக வேண்டிக்கொள்வது அத்துமீறிய இடங்களில் தொடர்ந்தும் தங்கியிருக்க வேண்டாம் என்பதாகும். எனவே அவ்வாறான அத்துமீறிய இடங்களிலிருந்து வெளியேறி, சட்டத்தையும் ஒழுங்கினையும் பாதுகாப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அமைதியான போராட்டக்காரர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக உங்களது ஒத்துழைப்பினை எதிர்பார்க்கின்றேன்.

காலிமுகத்திடல் போராட்டத்துக்கு சமாந்தரமாக மட்டக்களப்பிலும் ஒரு போராட்டம் இடம்பெற்றது. நாளாந்தம் காந்தி சிலைவரை ஊர்வலமொன்று ஒருங்கிணைக்கப்பட்டது. இந்தப் போராட்டத்துடன் இணைந்த திபெத் நாட்டை சோர்ந்த வணக்கத்துக்குரிய தாசி சோதாப் அவர்கள் நிகழ்த்திய உரையை சுட்டிக்காட்ட நான் விரும்புகிறேன்.

“நான் ஊர்வலத்தில் இணைவதால் நீங்கள் உங்கள் பங்களிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளீர்கள். உங்கள் எதிர்ப்பை வேறொரு வகையில் வெளிப்படுத்துகின்றீர்கள். உங்களது பங்கேற்பில் வெளிப்படுவது யாதெனில் நடைமுறையில் இடம்பெறும் விடயங்கள் தொடர்பான உங்களது கருத்தாகும். தங்களைத் தெரிவு செய்திருப்பது இந்த நெருக்கடி நேரத்தில் விழிப்புடன் இருப்பது. அவ்வாறின்றி தனித்திருந்து அதிருப்தி கொள்வதல்ல. ஒரு போராட்டத்தை மற்றுமொரு போரட்டத்தால் தீர்க்க முடியாதென்பதை நாம் அறிவோம். நெருக்கடியை அமைதியாகவே தீர்க்க வேண்டும்.”

தாஷி சோதப் தேரர் குறிப்பிட்டவாறு, நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக இந்த நெருக்கடியினைத் தீர்த்துக்கொள்ள வேண்டுமென நான் மீண்டும் இச்சபைக்கு வலியுறுத்த விரும்புகின்றேன். நாம் அனைவரும் ஒன்றிணைவோம். 21 ஆம் நூற்றாண்டிற்குத் தேவையான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களை மேற்கொள்வோம்.

இங்கு சில காரணிகளின் பக்கம் நான் கவனம் செலுத்த வைப்பதற்கு விரும்புகின்றேன். இந்த நெருக்கடியினைத் தீர்த்துக்கொண்டு நாம் எவ்வாறு முன்னோக்கிச் செல்லல் வேண்டும்? அப்பயணத்தின் போது அரசியல் கட்சிகளின் பொறுப்புக்கள் என்ன? எமது மரபுரீதியான அரசியல் சிந்தனைக்குள் அடைபட்டு இப்பயணத்தைச் செல்ல முடியுமா?

அரசியல் கட்சி முறை பற்றி நாம் புதிதாக சிந்திக்க வேண்டியுள்ளது. கட்சிகளின் செயற்பாடானது எதிர்காலத்திற்கு பொருந்தக்கூடியவாறு மாற்றியமைக்கப்படுதல் வேண்டும். அரசியல் ஒன்று நாம் இன்று நினைத்துக்கொண்டிருப்பவை, அரசியல் ஒன்று நாம் இன்று மேற்கொள்பவை அனைத்தையும் அதே விதத்தில் நாம் முன்னெடுத்துச் செல்வதா என சிந்தித்தல் வேண்டும். அரசியல் கல்வி பற்றி ஆழமாக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

1977 ஆம் ஆண்டிலே இளைஞர் யுவதிகள் என்ற வகையில் எமது எதிர்பார்ப்புகள் மற்றும் அபிலாஷைகள் பலவற்றினை அடைந்துகொள்வதற்குரிய புதிய பொருளாதாரம் ஒன்றினை உருவாக்கிக்கொள்ள எம்மால் முடிந்தது. தற்போது எதிர்காலத்திற்கு உகந்த புதிய பொருளாதாரம் ஒன்றினை உருவாக்கிக்கொள்வதற்கு எமது இளம் பராயத்தினரின் முழுமையான பங்களிப்பு கிடைக்கப் பெறுதல் வேண்டும். அவர்களது திறமைகள் போராட்ட பூமிக்கு மாத்திரம் வரையறுக்கப்படலாகாது. நாட்டின் எதிர்காலத்திற்கு அவர்களது ஆக்கத்திறன்மிக்க திறமைகளை ஈடுபடுத்துவதற்கான வாய்ப்பினை நாம் திறந்து விடுதல் வேண்டும். எதிர்வரும் தேர்தல் ஒன்றின் போது அதிகம் அதிகம் இளைஞர் யுவதிகளே இப்பாராளுமன்றத்திற்கு வருகை தருதல் வேண்டும். எதிர்வரும் தேர்தலானது இளைஞர் வர்க்கத்தின் சந்தர்ப்பமாக அமைதல் வேண்டும்.

எனவே அதற்கு இடம் அளிக்கக் கூடிய வகையில் புதிய மனப்பான்மைகளைக் கொண்ட புதிய அரசியலமைப்பு ஒன்றினை உருவாக்க வேண்டியமை இங்கு பணியென நான் கருதுகின்றேன்.

தற்போது தேர்தல் ஆணைக்குழு, அரசாங்க சேவைகள் ஆணைக்குழு, போலீஸ் ஆணைக்குழு, நீதிச் சேவைகள் ஆணைக்குழு உள்ளிட்ட அனைத்திற்கும் உறுப்பினர்களை நியமிக்கும் பூரண உரிமை ஜனாதிபதிக்கே உண்டு. அது ஜனநாயகத்திற்கு உகந்த நிலை ஒன்றல்ல என்பதனை நான் நேரடியாக குறிப்பிட விரும்புகின்றேன். நாம் அந்த நிலையினை மாற்றியமைத்தல் வேண்டும். தற்போது ஜனாதிபதியிடம் இலங்கையின் ஆதிகாலத்தில் அரசர் ஒருவரிடம் இருந்த அதிகாரங்களை விடவும் அதிகமான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனை உடனடியாக மாற்றி அமைத்தல் வேண்டும்.

ஒரு நாட்டின் ஜனாதிபதி என்பவர் மக்களுக்கு மேலால் வாழுகின்ற அரசராக அல்லது கடவுளாக இருக்க வேண்டியதில்லை. அவரும் பிரசையில் ஒருவர். எனவே தனியான கொடி, இலச்சினை, தனியான கௌரவங்கள் மூலம் புனிதத்தன்மைக்கு ஆளாக்க வேண்டியதில்லை.

அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயற்பாட்டின் ஆரம்பமாக, 19 ஆவது திருத்தத்திலிருந்த அனைத்து நேர்மறையான விடயங்களையும் உள்ளடக்கி 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றிக்கொள்ள நாம் எதிர்பார்க்கின்றோம். அதற்காக இந்த கௌரவ சபையின் முழுமையான ஆதரவினை நான் எதிர்பார்க்கின்றேன்.

22 ஆவது அரசியல் அரசியலமைப்புத் திருத்த வரைவு தற்போது பாராளுமன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது பற்றி கலந்துரையாடி பொது இணக்கப்பாடு ஒன்றுக்கு வருவது பொருத்தம் என நான் கருதுகிறேன். எமக்கு தேவையான அனைத்தும் 22 ஆவது திருத்தத்தின் ஊடாக நிறைவேற்றிக்கொள்ள முடியாது போகலாம். அது எமது மறுசீரமைப்புத் தொடரின் முதலாவது அடித்தாளமாகும். இச்சபையிலுள்ள அனைவரும் ஏகமானதாக அதனை நிறைவேற்றிக்கொள்வது மிகவும் சிறந்த முன்னோக்கிய நகர்வாக அமையும்.

நான் இதற்கு முன்னரும் சபையில் குறிப்பிட்டது போன்று பாராளுமன்ற மேற்பார்வைக் குழுக்களை உடனடியாக நிறுவுவதற்கு நடவடிக்கை எடுப்பேன். அந்த குழுக்கள் ஊடாகவும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஒன்றாக இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புக் கிட்டும். சாதாரண சமூகமொன்றிற்கான தேசிய இயக்கம் இது தொடர்பாக சமர்ப்பித்த அறிக்கையினை நான் ஏற்கனவே இச்சபையில் சமர்ப்பித்துள்ளேன்.

அவ்வாறே அரசியல் கட்சித் தலைவர்களை உள்ளடக்கிய தேசிய சபை ஒன்றினை நிறுவுவதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன். முன்னெடுக்கும் நோக்கில் அனைவரினதும் ஆகக் குறைந்த பொது இணக்கப்பாடொன்றுடன் கூடிய வேலைத்திட்டம் ஒன்றினை இந்த தேசிய சபையின் ஊடாக தயாரித்துக்கொள்ள எம்மால் முடியும்.

பேதங்கள் மூலம் எமது நாடு முற்காலம் தொட்டு பின்னடைவுகளுக்கு உள்ளானது. நாம் இன ரீதியாக பிரிந்தோம், மொழி ரீதியாக பிரிந்தோம், சமய ரீதியாக பிரிந்தோம். கட்சி ரீதியாக பிரிந்தோம். வகுப்பு ரீதியாக பிரிந்தோம், பூகோள ரீதியாகவும் பிரிந்தோம் குல ரீதியாகவும் பிரிந்தோம்.

சில தரப்பினர்கள் இப்பிரிவினை மேலும் விஸ்தரித்தனர். அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக இவ்வாறான பிளவுகளை பயன்படுத்தினர். பிரித்து ஆள்வதன் அனுகூலத்தை அனுபவித்தனர். முஸ்லிம் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் பிரச்சினைகளை உருவாக்கினர். தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் பிரச்சினைகளை உருவாக்கினர். இவ்வாறு இன ரீதியாவும் சமய ரீதியாகவும் பல்வேறு விதமான பிளவுகளை ஏற்படுத்தி அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு முயற்சித்தனர்.

1977 இல், அரசியலில் பிரவேசித்த நாள் முதல் எனக்கு தேவைப்பட்ட ஒரு விடயம் இவ்வாறான பிரிவுகளற்ற இலங்கையெனும் ஆளடையாளத்தைக் கொண்ட சமூகமொன்றினை உருவாக்குவதாகும். ஒருதாயின் பிள்ளைகளாக ஒற்றுமையாக வாழக்கூடிய தேசமொன்றை உருவாக்குவதாகும்.  இம்முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டதன் காரணமாக நான் அரசியல் ரீதியாக தோல்விகளை சந்தித்தேன். சிங்கள பேரினவாதிகளின் மாத்திரமன்றி, தமிழ், முஸ்லிம் பேரினவாதிகளின் விமர்சனங்களுக்கு ஆளானேன். இனவாதிகளுக்கும். சமயவாதிகளுக்கும் எதிராக தொடர்ச்சியாக ஈடுபட்டமையால் சில அரசியல் கட்சிகள் என்னை தேசத்துரோகியாகவும் சமய எதிரியாகவும் அவதூறுக்கு உட்படுத்தின.

எனினும் நான் எனது கொள்கையில் இருந்து விலகிச் செல்லவில்லை. ஒருபோதும் நான் அந்தக்கொள்கையிலிருந்து விலகவும் மாட்டேன். இன்று இளம்பராயத்தில் பெரும்பாலானவர்கள் எனது அந்தக் கொள்கையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என ஏற்றுக்கொண்டுள்ளனர். அவர்கள் இனவாதத்திற்கும் சமயவாதத்திற்கும் எதிராக கோஷம் எழுப்புகின்றனர். சிங்களவர், தமிழர், முஸ்லிம், பறங்கியர் உள்ளிட்ட அனைத்து இனங்களுக்கும் சமத்துவமாக கவனித்தல் வேண்டும் என சிங்கள இளைஞர் யுவதிகள் கூறுகின்றனர். சுமார் ஐந்து தசாப்த காலமாக நான் இச்சமூகத்திற்கு விளங்கவைப்பதற்கு முயற்சித்த சத்தியத்தை இன்று இளம் பராயத்தினர் புரிந்து கொண்டுள்ளமையானது மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும்

இந்த இளைஞர் யுவதிகளின் ஒத்துழைப்புடன், முழு நாட்டையும் அக்கொள்கையின் பக்கம் ஒன்றுதிரட்டுவதற்கான வாய்ப்பு தற்போது எமக்கு கிடைத்துள்ளது. இன, மத, கட்சி, குலம் உள்ளிட்ட அனைத்து வேதங்களையும் ஒழிப்பதற்கு வாய்ப்புக்குக் கிட்டியுள்ளது. அந்த பேதங்கள் காரணமாக சில சமயங்கள் படுகின்ற துன்பத்தை ஒழிப்பதற்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. திறமை மற்றும் தேர்ச்சி மூலம் நபர்களின் எதிர்காலப் பயணத்தைத் தீர்மானிப்பதற்குகான அடித்தாளத்தை உறுதிப்படுத்துவதற்கும் வாய்ப்புக் கிட்டியுள்ளது. அனைத்துப் பிரசைகளும் சுதந்திரமாக வாழக் கூடிய சூழலை உருவாக்குவதற்கான பின்னணி ஏற்பட்டுள்ளது.

இங்கு பல வருட காலமாக தமிழ் மக்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டியமை அத்தியாவசியமான காரணி ஒன்றாகும். யுத்தத்தின் மூலம் பாதிக்கப்பட்ட அவர்கள் சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் பலவற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தீர்க்க வேண்டிய காணிப் பிரச்சினைகள் பல உள்ளன. வடக்கின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாக நாம் புதிதாக சிந்திக்க வேண்டியுள்ளது. வெளிநாடுகளில் வாழுகின்ற இலங்கை தமிழ் மக்களுடன் நெருங்கிச் செயற்பட்டு, இலங்கையினை மீளக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்திற்கு அவர்களது ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்வதற்கும் நாம் எதிர்பார்க்கின்றோம்.

எமது நாட்டின் சனத்தொகையில் பெரும்பான்மையாக காணப்படுகின்றன பெண்கள் இன்னமும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், ஏனைய வித்தியாசங்கள், குறைபாடுகள் பலவற்றிற்கு முகம்கொடுத்து வருகின்றனர். இந்நிலையினை மாற்றியமைத்தல் வேண்டும். அதற்குத் தேவையான அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளை நாம் எடுக்க வேண்டியுள்ளது.

அவ்வாறே இலஞ்சம், ஊழல் மற்றும் மோசடி என்பவற்றினை சமூகத்தில் இருந்து முழுமையாக ஒழிப்பதும் கட்டாயமான ஒன்றாகும். இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான தேசியக் கொள்கை ஒன்றினை நாம் அமுல்படுத்துவேன். இதற்குத் தேவையான சட்டதிட்டங்கள் நிதி அமைச்சினால் தயாரிக்கப்பட்டுவரும் நிலையில் உள்ளன. அவ்வாறே சர்வதேச நாணய நிதியத்துடனும் ஊழல் ஒழிப்பு பற்றிய இணக்கப்பாடொன்றிற்கு வருவோம்.

இந்த அனைத்துப் பணிகளையும் மேற்கொள்வதற்கு முழுமையான அரசியல் மறுசீரமைப்புத் திட்டமொன்று தேவைப்படுகின்றது. அந்த மறுசீரமைப்பை எனது பதவிக்காலத்தினுள் நான் மேற்கொள்வேன். எனினும் அது எனது தனிப்பட்ட அபிப்பிராயத்திற்கு அமைவாக அல்ல. இளைஞர்களின், பெண்களின் மற்றும் ஏனைய மக்களின் கருத்துக்களை அடிப்படையாக் கொண்டு மக்களினதும் பாராளுமன்றத்தினதும் இணக்கப்பாட்டிற்கு அமையவே அதனை மேற்கொள்வேன்.

மேற்கொள்ள வேண்டிய சமூக மற்றும் அரசியல் மறுசீரமைப்புக்கள் என்ன என்பது பற்றி தீர்மானிப்பதற்காக மக்கள் சபை ஒன்றினை நிறுவுவதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன். அரசியல் கட்சிகள், நானாவித அமைப்புகள் மற்றும் இது தொடர்பாக ஆர்வம் காட்டுகின்ற அனைத்து நபர்களதும் கருத்துக்களை மக்கள் சபையின் ஊடாக விசாரிப்பதற்கான பொறிமுறை ஒன்றினை உருவாக்குவேன். இதற்காக கருத்துக்களைப் பெற்றுத்தருமாறு போராட்டத்துடன் தொடர்புடைய இளைஞர்களிடமும், தொடர்புபடாத இளைஞர்களிடமும் நான் முக்கியமாக வேண்டுகோள் விடுக்கின்றேன்.

எமது நாட்டின் ஜனாதிபதி முறைமையினை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டுமா? நாட்டிற்கு மிகவும் பொருத்தமான முறைமை எது? ஆட்சி முறையானது எவ்வாறான மறுசீரமைப்புகளுக்கு உட்பட வேண்டும்? உள்ளிட்ட அனைத்து விடயங்களும் மக்கள் சபையின் ஊடாக கலந்துரையாடப்படும். நாட்டிற்கு மிகவும் பொருத்தமான முறைமை தொடர்பாக தேசிய இணக்கப்பாடொன்றுக்கு வந்ததன் பின்னர் அம்முறைமையினை சட்டமாக வரைந்து நடைமுறைப்படுத்துவேன்.

இவ்வாறான தேசிய இணக்கப்பாட்டிற்கு வருவது கட்டாயமான ஒரு விடயமாகும். அதுபற்றி நான் சிறிது விளக்க விரும்புகின்றேன். நமது நாட்டில் பல ஜனாதிபதி தேர்தல்களின் போது முன்வைக்கப்பட்ட பிரதான வாக்குறுதி தான் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படும் என்பதாகும். எனினும் அந்த வாக்குறுதியை வழங்கி அதன் மூலம் அதிகாரத்திற்கு வந்த எவரும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்கவில்லை. மாறாக ஒருவர் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை ஒழித்தாலும், அதன் பின்னர் ஆட்சிக்கு வரும் கட்சியினால் மீண்டும் அதனை மாற்றியமைக்கும் இயலுமை உள்ளது. அதனால் தான் நாங்கள் மக்கள் சபை ஊடாக பொதுவான தேசிய இனக்கப்பாடு ஒன்றிற்கு வரவேண்டிய தேவையுள்ளது.

மக்கள் சபை என்பது முழுமையாக சுயாதீனமாக செயற்படும் ஒரு நிறுவனமாகும். அரசாங்கம் அதற்குத் தேவையான வளங்களை வழங்குவதை மாத்திரமே மேற்கொள்ளும். அதன் பணிகளுக்கு அல்லது தீர்மானங்களுக்கு அரசாங்கத்தின் எவ்வித தாக்கமும் இருக்காது. மக்கள் சபையின் அமைவு பற்றி நாம் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடி தீர்மானிப்போம்.

சாதாரண சமூகமொன்றிற்கான தேசிய இணக்கமானது தற்போதும் கூட, மக்கள் சபை பற்றி கருத்துக்கள் மற்றும் பிரேரணைகள் என்பவற்றினை எமக்குப் பெற்றுத்தந்துள்ளன.

மக்கள் சபையின் பணிகளை மிகவும் முறைப்படுத்துவதற்காகவும் மற்றும் வினைத்திறன்மிக்கதாக அமையும் பொருட்டு ஐக்கிய நாடுகள் சபை போன்ற பல்தரப்பு அமைப்புகளின் ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்வதற்கும் வாய்ப்பினை வழங்குவேன். அவதானிப்புகள் அல்லது தொழில்நுட்ப ஆலோசனை மட்டத்தில் அவ்வாறான ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் சபைக்கு வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அனைத்துத் தரப்பினரதும் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் என்பவற்றினைப் பெற்றுக்கொண்டு, முழுமையான வெளிப்படையான தன்மையுடன் செயற்பட்டு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மறுசீரமைப்பு தொடர்பாக தேசிய திட்டமொன்றினை தயாரிக்கும் பொறுப்பு மக்கள் சபையிடம் ஒப்படைக்கப்படும். மிக விரைவில் இத்திட்டத்தைத் தயாரிக்குமாறு நாம் மக்கள் சபையிடம் வேண்டுவோம்.

நண்பர்களே,

நான் 1977 ஆம் ஆண்டு இளம் உறுப்பினர் ஒருவராக பாராளுமன்றத்தில் பிரவேசித்தேன். நாட்டிலே பல்வேறு பதவிகளை வகித்தேன். அவமானப்படுத்தல்கள் - பாராட்டுக்கள் மத்தியில் மனச்சாட்சிக்கு ஏற்ப சரியென நினைத்தவற்றினை நாட்டிற்காக மேற்கொண்டேன். கடந்த இரண்டு மூன்று வருட காலப் பகுதியினுள் நாடு படிப்படியாக நிலையற்றத் தன்மையினை நோக்கிப் பயணிப்பதை நான் கண்டேன். அவை அனைத்தையும் மீண்டும் திரும்பிப் பார்க்கும் போது எனக்கு நினைவில் வருவது நான் றோயல் கல்லூரியில் கல்வி கற்கும்போது வாய்ப்பாடம் செய்த உலக புகழ்பெற்ற கலைஞர் ஒருவரான ருத்யாத் கிப்லிங் எழுதிய “இப்” எனப்படும் கவிதை வரிகளாகும்.

அதன் ஒரு பகுதியை நான் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

If you can meet with Triumph and Disaster

And treat those two impostors just the same;

If you can bear to hear the truth you’ve spoken

Twisted by knaves to make a trap for fools,

Or watch the things you gave your life to, broken,

And stoop and build ’em up with worn-out tools:

– you’ll be a Man, my son!

எனவே நாம் நேர்மையான உள்ளத்துடனும் உன்னத எதிர்பார்ப்புடனும் புதியதோரு பயணத்தை ஆரம்பிப்போம். உண்மையின் மற்றும் சுதந்திரத்தின் விதைகளை நாட்டுவோம். நிகழ்காலத்தில் எம்மைப் பற்றி அதிகமான குற்றச்சாட்டுக்களும் விமர்சனங்களும் எழலாம். எனினும் நாட்டிய உண்மையின் மற்றும் சுதந்திரத்தின் விதைகள் வளர்ந்து பலனளிக்கும். எதிர்காலத்தில் ஒரு நாள், நாம் சரியென்பது நிரூபிக்கப்படும்.

எனது உரையினை நிறைவு செய்து நாம் புத்தபெருமான் அவர்கள் போதித்த கருத்தொன்றினை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றேன். பல சந்தர்ப்பங்களில் புத்தபெருமான் அவர்கள் இதனை வலியுறுத்தியதாக திரிபிடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“அத்ததீபா விஹரத……”

தாம் தமக்கே தீபமாக இருங்கள்.

நாம் எமக்கு தீபமாக அமைவோம். அந்த தீபத்தின் ஒளியால் இலங்கை தீபத்தை ஒளிமயமாக்குவோம்.

 

 

01. விவசாயம் மற்றும் பயிர்ச்செய்கை நடவடிக்கைககளை ஊக்குவித்தல்

தற்போது நிலவும் எரிபொருள் பற்றாக்குறையால் அரச ஊழியர்களுக்கு தமது போக்குவரத்தைப் பெற்றுக்கொள்வதில் பிரச்சினைகள் ஏற்பட்டமையாலும் மற்றும் எதிர்காலத்தில் உருவாகக் கூடுமென எதிர்பார்க்கப்படும் உணவுப் பற்றாக்குறைக்குத் தீர்வாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குத் தேவையான வசதிகளை வழங்கும் பொருட்டு வெள்ளிக்கிழமைகளில் அரச நிறுவனங்களை மூடுவதற்கு 2022.06.13 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த ஆலோசனைகள் அடங்கிய 03 மாத காலப்பகுதிக்கு ஏற்புடைய வகையில் 2022.06.15 ஆம் திகதிய 15/2022 ஆம் இலக்க அரச பொது நிருவாக சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனாலும், தற்போது பொதுப் போக்குவரத்துச் சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்புவதாலும், விவசாய நடவடிக்கைகளுக்கான அடிப்படைச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு போதுமானளவு நேரம் கிடைத்திருப்பதைக் கருத்தில் கொண்டு மேற்படி சுற்றறிக்கையை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இரத்து செய்வதற்கு அரச நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  

02. அரச கூட்டுத்தாபனங்கள், நியதிச்சட்ட சபைகள் மற்றும் அரச கம்பனிகளின் செலவுகளை முகாமைத்துவம் செய்தல்

தற்போது நாட்டில் நிலவுகின்ற சவால்மிக்க நிலைமைகளுக்கு முகங்கொடுப்பதற்கு இயலுமான வகையில் அரச வியாபாரங்களின் தொழிற்பாட்டுச் செயற்றிறன் மற்றும் நிதி ஒழுக்கங்களை மிகவும் இறுக்கமாக உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது. அதற்கமைய, அரச செலவுகளைக் கட்டுப்படுத்துதல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள 2022.04.26 ஆம் திகதிய தேசிய வரவு செலவுத்திட்ட சுற்றறிக்கை 03/2022 ஆம் இலக்கத்திற்கு இணையாக, அரச கூட்டுத்தாபனங்கள், நியதிச்சட்ட சபைகள் மற்றும் அரச கம்பனிகளின் செலவுகளை முகாமைத்துவம் செய்வதற்காக ஆலோசனை சுற்றறிக்கையை வெளியிடுவதற்காக, நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. உள்ளூர் ஆடைக் கைத்தொழில் உற்பத்திகளுக்குத் தேவையான உபகரணங்களுக்கான இறக்குமதி வரிச் சலுகையை வழங்கல்

கொவிட் - 19 தொற்று நிலைமையிலும் கூட, இலங்கைக்கு வெளிநாட்டு செலாவணியைப் பெற்றுக் கொடுக்கும் பிரதான துறையான ஆடைக் கைத்தொழிற்துறை அமைந்துள்ளது. ஆயினும், மூலப்பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையாலும், தற்போது நாட்டில் நிலவுகின்ற ஆரோக்கியமற்ற பொருளாதார நிலைமைகளாலும் ஆடைக் கைத்தொழிற்துறைக்குத் தேவையான உள்ளூரில் தயாரிக்கப்படாததுமான உபகரணங்களை இறக்குமதி செய்யும் போது உள்ளூர் ஆடைக் கைத்தொழிற்துறை உற்பத்தியாளர்கள் பல சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. அதற்குத் தீர்வாக ஒத்திசைவுக் குறியீட்டு இலக்கம் 19 இன் கீழ் உள்ளூரில் தயாரிக்கப்படாத உபகரணங்கள் பிரிவுக்கான தீர்வை வரிச் சலுகையை வழங்குவதற்காக கைத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

              

04. புலம்பெயர் தொழிலாளர்கள் சட்டபூர்வமான முறையில் பணம் அனுப்புவதை ஊக்குவித்தல்

நாட்டில் நிலவுகின்ற வெளிநாட்டு செலாவணி நெருக்கடிக்குத் தீர்வாக புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்புகின்ற பணத்தை அதிகரிப்பதற்காக வழங்கப்பட வேண்டிய சலுகைகள் மற்றும் ஊக்குவிப்புக்கள் தொடர்பான விடயங்களை ஆராய்ந்து பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக 2022.06.27 திகதி அமைச்சரவைக் கூட்டத் தீர்மானத்தின் பிரகாரம் அலுவலர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த அலுவலர் குழுவின் அறிக்கை மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மூலம் எமது நாட்டிற்கு முறைசார் வழிகள் மூலம் அனுப்பப்பட்ட வெளிநாட்டுப் பணத்தொகையைக் கருத்தில் கொண்டு குறித்த புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டிற்கு வருகை தரும் போது மேலதிக தீர்வை வரிச் சலுகைக் கொடுப்பனவை வழங்குவதற்கும் மற்றும் இலத்திரனியல் கார் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்காக குறித்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வசதிகளை வழங்குவதற்கும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. யுனெஸ்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழுவின் யாப்பை சட்ட வலுவாக்குதல்

யுனெஸ்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழுவை முறைசார்ந்த வகையில் வலுப்படுத்தி போதியளவு அதிகாரங்களுடன் சட்ட ரீதியாகத் தாபிக்கப்பட வேண்டிய தேவை கண்டறிப்பட்டுள்ளது. அதற்கமைய, யுனெஸ்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழுவை தாபிப்பதற்கு தேவையான யாப்பின் சட்டமூலத்தை தயாரிப்பதற்காக 2021.06.14 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அங்கீகாரத்தின் பிரகாரம் சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்பிப்பதற்காகவும் கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. மலைநாட்டு விவாகம் மற்றும் விவாகரத்துச் சட்டத்திற்கான திருத்தம்

பராயமடையாத பிள்ளைகளின் திருமணத்திற்கு பெற்றோர்களின் விருப்பு ஒப்புதல் தேவையென குறித்துரைக்கப்பட்டுள்ள, மலைநாட்டு விவாகம் மற்றும் விவாகரத்து சட்டத்தின் II ஆம் பகுதியை நீக்குவதற்கும் மற்றும் அதில் காணப்படும் ஒவ்வாமையை நீக்குவதற்காகவும் சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்காக 2021.10.26 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்பிப்பதற்காகவும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

புகழ்பெற்ற சிரேஷ்ட நடிகரும் கலைஞருமான ஜெக்ஸன் அன்தனி விரைவில் குணமடைய வேண்டி நெடுஞ்சாலைகள் போக்குவரத்து மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி. பந்துல குணவர்தனவின் ஏற்பாட்டில் கொழும்பு கங்காராம விகாரையில் இன்று (31) விசேட மத வழிபாடுகள் நடத்தப்பட்டன.

தலாவை பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற பாரிய விபத்தையடுத்து அவர் தொடர்ந்தும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

ஜெக்ஸன் அன்தனி அவரது மேடை  தொலைக்காட்சி மற்றும் சினமா நடிப்பு துறைக்காக பாராட்டுக்களை பெற்றுக் குவித்துள்ளதுடன் பதினாறு தடவைகள் மிகச் சிறந்த நடிகருக்கான விருதுகளையும் வென்றுள்ளார்.

இவ்வழிபாட்டு நிகழ்வில் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளரும் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவருமான அனுஷ பெல்பிட்ட அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க அரச ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் கலைஞர்கள் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட மேலும் பலர் கலந்துகொண்டனர்.

 

 

பிரதமர் தினேஷ் குணவர்தன பிரதமராக பததவியேற்றதன் பின்னர் முதற்தடவையாக இன்று (31) கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்து மத வழிபாடுகளில் ஈடுபட்டார்.

வழிபாடுகளை தொடர்ந்து ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும்போது அவர் நாடு எதிர்கொண்டுள்ள சவால்களை வெற்றி கொள்வதற்கு அனைத்து தரப்பினரதும் இணக்கப்பாட்டுடன் நடவடிக்கைகளை முன்னெடுக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் மேற்கொள்ளுமென பிரதமர் தெரிவித்தார்.

பிரதமர் கண்டியில் வைத்து மேலும் கூறியதாவது-

சர்வ கட்சி அரசாங்கம் உருவாக்குவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார்.

பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பிக்கும் அமர்விலும் அதற்கான அழைப்பு அனைத்துக் கட்சிகளுக்கும் விடுக்கப்படும்.

எவ்வாறாயினும் சர்வ கட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளுக்கும் எழுத்து மூலம் அழைப்பு விடுப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஜனாதிபதியும் நானும் சர்வதேச நாடுகளின் தூதுவர்களுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றோம். நாட்டின் வேலைத் திட்டங்களுக்கு அவர்களது ஒத்துழைப்பு எமக்கு கிடைக்கின்றது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

 

Latest News right

இலங்கையின் ஊடகக் கல்வித் துறையில் ஒரு புதிய அத்தியாயம் சர்வதேச ஒத்துழைப்புடன் MMC–ITN கல்வி வளாகம் புதிய மைல்கல்லை எட்டியது

ஜன 08, 2026
இலங்கையின் ஊடகக் கல்வித் துறையின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும்…

2026 புதிய ஆண்டை முன்னிட்டு வெகுஜன ஊடக பிரதி அமைச்சரின் வாழ்த்துச் செய்தி

ஜன 01, 2026
2026 புதிய ஆண்டின் வருகை, நாம் நாடாக முன்னேறிச் செல்ல வேண்டிய புதிய திசையை மீண்டும்…

இலங்கை /பவுண்டேஷன் நிறுவகம் (SLFI) புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியது

ஜன 01, 2026
இலங்கை/பவுண்டேஷன் நிறுவனத்தின் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்ட உத்தியோகபூர்வ இணையதளம்…

இனம் – மதம் – கட்சி வேறுபாடுகள் இன்றி நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணைவோம்.

ஜன 01, 2026
நாட்டின் ஒவ்வொரு துறையிலும் தரமான மற்றும் நிலைத்த மாற்றங்களை ஏற்படுத்துவதும், இரக்கமுள்ள…

புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

ஜன 01, 2026
மிகப்பெரிய மறுசீரமைப்புச் செயல்முறையையும், மீளக் கட்டியெழுப்பும் பாரிய பணியையும் தோள்மேல்…

தேசிய பாதுகாப்பு தினம்

டிச 26, 2025
சுனாமியில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து நாடு முழுவதும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி…

நத்தார் தின வாழ்த்துச் செய்தி

டிச 25, 2025
டிசம்பர் மாதம் துவக்குதத்துடன் கிறிஸ்துவர்கள் ஆராதனையுடனும் ஆனந்தத்துடனும்…

நத்தார் வாழ்த்துச் செய்தி

டிச 25, 2025
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார் பண்டிகையை இன்று…

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் ஆசீர்வதிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் இன்று (24) நள்ளிரவில் ஆரம்பமாகிறது.

டிச 24, 2025
உலகத்தை பாவத்திலிருந்து மீட்பதற்காக இந்த உலகில் அவதரித்த அவரின் மனிதநேயக் கருணையின்…