- பிரதமர் ரணில், சீன பிரதி தூதுவரிடம் தெரிவிப்பு

இந்த கலந்துரையாடலின் போது, ​​'ஒரு சீனா கொள்கை' இலங்கையுடன் இணங்குவதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கையிலுள்ள சீன தூதரகத்தின் பிரதித் தூதுவர் ஹு வெய் யிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக, பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது. 

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சீனாவின் பிரதித் தூதுவர் ஹு வெய் ஆகியோருக்கு இடையில் நேற்று (21) முற்பகல் கலந்துரையாடலொன்று இடம்பெற்றபோதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இலங்கை எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் உணவுப் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்துக் கேட்டறிந்த சீன துணைத் தூதுவர், உணவு நெருக்கடியை குறைக்க சீனா இலங்கைக்கு அரிசியை நன்கொடையாக வழங்கும் என்று பிரதமரிடம் மீண்டும் உறுதியளித்தார்.