இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கௌரவ ரணில் விக்ரமசிங்க இன்று (21) பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார்.

 
பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டலஸ் அழகப்பெரும  உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், முதற்பெண்மணி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
 
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதைத் தொடர்ந்து ஏற்பட்ட ஜனாதிபதி பதவி வெற்றிடத்துக்கு அடுத்துவரும் ஜனாதிபதியைத் தெரிவுசெய்யும் இரகசிய வாக்கெடுப்பு நேற்று (20) நடைபெற்றதுடன், இதில் பதில் ஜனாதிபதியாகக் கடமையாற்றியிருந்த ரணில் விக்ரமசிங்க 134 வாக்குகளைப் பெற்று அடுத்துவரும் ஜனாதிபதிப் பதவிக்குத் தெரிவுசெய்யப்பட்டார்.