சமீபத்திய செய்தி

 

பேராசிரியர் சுனந்த மத்தும பண்டார மற்றும் ஷனுக்கா செனவிரட்ன ஆகியோர் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பேராசிரியர் மத்தும பண்டார ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராகவும் (ஊடகம்) செனவிரட்ன சர்வதேச ஊடகங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

களனி பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரான பேராசிரியர் மத்தும பண்டார களனி பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் சமூக விஞ்ஞான திணைக்களத்தின் பீடாதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.

அவர் ஊடக இராஜாங்க அமைச்சின் செயலாளராகவும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் பதவி வகித்துள்ளார். மேலும் அவர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றியுள்ளார்.

இலங்கை வெளிவிவகார சேவையைச் சேர்ந்த முன்னாள் சிரேஷ்ட இராஜதந்திரியான செனவிரட்ன வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஆவார். அவர் இங்கிலாந்துக்கான உயர்ஸ்தானிகராகவும் தாய்லாந்துக்கான தூதுவராகவும் ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மற்றும் நியுயோர்க்கிற்கான நிரந்தர பிரதிநிதியாகவும் பதவி வகித்துள்ளார்.

 

 

பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர். பந்துல குணவர்தன இன்று (25) வெகுசன ஊடக அமைச்சராக தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

அமைச்சர் தனது நியமனக் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து கடந்த வெள்ளிக்கிழமை (22) பெற்றுக்கொண்டார். அமைச்சர் குணவர்தன இதற்கு முன்னரும் வெகுசன ஊடக அமைச்சராக பதவி வகித்துள்ளமை குறிப்பிடதக்கது.

அமைச்சர் தனது கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட, அமைச்சின் மேலதிக செயலாளர் (நிருவாகம்) எஸ்.ஆர்.டபிள்யு.எம்.ஆர்.பி சத்குமார, மேலதிக செயலாளர் இ.எம்.எஸ்.பி ஜயசுந்தர, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க உள்ளிட்ட அமைச்சின் பல சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 

 

வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட இன்று (22) அமைச்சில் வைத்து தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

இலங்கை நிருவாகச்சேவையின் சிரேஷ்ட உத்தியோகத்தரான இவர் இதற்கு முன்னரும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளராக பதவி வகித்துள்ளமை குறிப்பிடதக்கது.

 

 

 

இடைக்கால அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 18 பேர் இன்று (22) ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

அவர்களின் பெயர் விவரங்கள் கீழ்வருமாறு-

புதிய அமைச்சரவை அமைச்சர்கள்

1. பிரதமர் தினேஷ் குணவர்தன - பொது நிர்வாகம்இ உள்நாட்டலுவல்கள்இ மாகாண சபைகள்இ உள்ளூராட்சி சபைகள்

2. டக்ளஸ் தேவானந்தா - மீன்பிடி அமைச்சர்

3. கலாநிதி சுசில் பிரேமஜயந்த - கல்வி அமைச்சர்

4. பந்துல குணவர்தன - போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

5. கலாநிதி கெஹெலிய ரம்புக்வெல்ல - சுகாதாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்

6. மஹிந்த அமரவீர - விவசாயம், வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர்

7. கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ - நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்

8. ஹரின் பெனாண்டோ - சுற்றுலா மற்றும் காணி அமைச்சர்

9. ரமேஷ் பத்திரண - பெருந்தோட்டம் மற்றும் கைத்தொழில் அமைச்சர்

10. பிரசன்ன ரணதுங்க -நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு

11. எம்.யூ.எம். அலி சப்ரி - வெளிவிவகாரம்

12. விதுர விக்ரமநாயக்க - புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்

13. கஞ்சன விஜேசேகர - மின்சக்தி மற்றும் வலுசக்தி

14. அஹமட் நசீர் - சுற்றாடல் அமைச்சர்

15. ரொஷான் ரணசிங்க - விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்

16. மனூஷ நாணயக்கார - தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்

17. டிரான் அளஸ் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

18. நளின் பெனாண்டோ - வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர்

 

இலங்கை நிருவாகச் சேவையின் சிரேஷ்ட உத்தியோகத்தரான டி.எம் அநுர திசாநாயக்க இலங்கை பிரதமரின் செயலாளராக இன்று (22) நியமிக்கப்பட்டார்.

அவருக்கான நியமனக் கடிதத்தை பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று பிரதமர் அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.

 

 

வன்முறையற்ற, அமைதியான கூட்டங்களுக்கான உரிமை உறுதி செய்யப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து வெளியேற்றியமை தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச ராஜதந்திரிளுக்கு விளக்குமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்றுள்ள இந்த சந்திப்பின்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்.

சிவில் மற்றும் அரசியல் உரிமை தொடர்பான சர்வதேச இணக்கப்பாட்டின் 21 வது சரத்து மற்றும் அமைதியாக கூடுவதற்கான உரிமையை கட்டுப்படுத்துவதற்கான  அரசியலமைப்பின் 14 (1) (ஆ) சரத்து ஆகிய இரண்டையும் தற்போதைய அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் இதன்போது ராஜதந்திரிகளுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

அரசாங்க கட்டிடங்களுக்கு தடைகளை ஏற்படுத்தி அதன் வளங்களை வேறு நோக்கத்திற்காக உபயோகிப்பதற்கு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என அமெரிக்க சிவில் சுதந்திர சங்கத்தின் ஆலோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

வளங்களுக்கும் உயிர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நகரங்களில் அமைதியான ஆர்ப்பாட்டங்களுக்கு இடமளிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

அத்துடன் விகாரமாதேவி பூங்கா வெளியரங்கம், புதிய நகர மண்டபம், ஹை பாக் மற்றும் கம்பல் விளையாட்டரங்குகள் போன்ற கொழும்பு நிர்வாகப் பிரதேசத்தில் காணப்படும் இடங்களில் வன்முறைகளற்ற ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுவேளை கோட்டா கம இணையம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என தெரிவித்த அவர் பாதுகாப்பு படையினர் அவ்வாறு இணையத்தை நீக்கும் வகையில் செயல்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொலீசாரினால் கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டமை உள்ளிட்ட சட்ட ரீதியான செயல்பாடுகள் தொடர்பிலும் சட்டமா அதிபர் இதன் போது ராஜதந்திரிகளுக்கு தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் பிரதமராக சபை முதல்வர் தினேஷ் குணவர்த்தன இன்று உத்தியோகபூர்வமாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

கொழும்பு ப்ளவர் வீதியிலுள்ள பிரதமர் செயலகத்தில் இன்று நடைபெற்ற உத்தியோகபூர்வ நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முன்னிலையில் அவர் நாட்டின் 27ஆவது பிரதமராக   சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

இந்த உத்தியோகபூர்வ நிகழ்வில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

73 வயதான புதிய பிரதமர் தினேஷ் குணவர்த்தன முன்னாள் அமைச்சர் பிலிப் குணவர்த்தன மற்றும் இடதுசாரி அரசியல் பிரமுகரான குசுமா குணவர்த்தன தம்பதிகளின் புதல்வராவார்.

கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி கற்ற அவர் தேசிய சர்வதேச பல்கலைக்கழகங்களின் பட்டதாரியாவார்.

முன்னாள் அமைச்சரான இந்திக்க குணவர்த்தன, பிரதியமைச்சரான கீதாஞ்சன குணவர்த்தன, முன்னாள் கொழும்பு மாநகர முதல்வர் பிரசன்ன குணவர்த்தன ஆகியோரின் சகோதரராவார்.

1983 ஆம் ஆண்டு இடைக்கால தேர்தல் ஒன்றில் மஹரகம தொகுதியில் போட்டியிட்டு முதல் தடவையாக பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட அவர், போக்குவரத்து, நீர் வழங்கள், உயர்கல்வி, நகர அபிவிருத்தி, நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி,வெளிவிவகார மற்றும் தொழில், பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராகவும் பல்வேறு காலகட்டங்களில் பதவி வகித்துள்ளார்.

ஆளும் கட்சியின் பிரதம கொரடாவாகவும் பதவி வகித்துள்ள அவர்  தற்போது பாராளுமன்றத்தின் சபை முதல்வராகவும் பணியாற்றுகின்றார்.

சத்தியப் பிரமாண நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் தினேஷ் குணாவர்த்தனவின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

 

 

இலங்கை நிருவாகச் சேவையின் சிரேஷ்ட உத்தியோகத்தரான சமன் ஏக்கநாயக்க இலங்கையின் எட்டாவது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மே 12 ஆம் திகதி முதல் அவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளராக பணியாற்றி வந்தார்.

2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியினுள் அவர் பிரதமரின் செயலாளராக மூன்று தடவைகள் பணியாற்றியுள்ளார்.

இவர் இலங்கை நிருவாகச் சேவையின் ஓய்வுபெற்ற விசேட தரம் கொண்ட சிரேஷ்ட உத்தியோகத்தர் என்பதுடன் இவர் தனது 30 வருட பதவிக் காலத்தினுள் பல அமைச்சுக்களிலும் மலேசியா லண்டன் ஆகிய நாடுகளின் உயர்ஸ்தானிகராலயங்களிலும் உயர் பதவி வகித்துள்ளமை குறிப்பிடதக்கது.

 

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கௌரவ ரணில் விக்ரமசிங்க இன்று (21) பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார்.

 
பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டலஸ் அழகப்பெரும  உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், முதற்பெண்மணி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
 
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதைத் தொடர்ந்து ஏற்பட்ட ஜனாதிபதி பதவி வெற்றிடத்துக்கு அடுத்துவரும் ஜனாதிபதியைத் தெரிவுசெய்யும் இரகசிய வாக்கெடுப்பு நேற்று (20) நடைபெற்றதுடன், இதில் பதில் ஜனாதிபதியாகக் கடமையாற்றியிருந்த ரணில் விக்ரமசிங்க 134 வாக்குகளைப் பெற்று அடுத்துவரும் ஜனாதிபதிப் பதவிக்குத் தெரிவுசெய்யப்பட்டார். 
 
 
 
 

 

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக தம்மிக பெரேரா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இன்று (24) பிற்பகல் கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இப்பதவிப்பிரமாணம் இடம்பெற்றது.
 

 

- பிரதமர் ரணில், சீன பிரதி தூதுவரிடம் தெரிவிப்பு

இந்த கலந்துரையாடலின் போது, ​​'ஒரு சீனா கொள்கை' இலங்கையுடன் இணங்குவதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கையிலுள்ள சீன தூதரகத்தின் பிரதித் தூதுவர் ஹு வெய் யிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக, பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது. 

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சீனாவின் பிரதித் தூதுவர் ஹு வெய் ஆகியோருக்கு இடையில் நேற்று (21) முற்பகல் கலந்துரையாடலொன்று இடம்பெற்றபோதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இலங்கை எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் உணவுப் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்துக் கேட்டறிந்த சீன துணைத் தூதுவர், உணவு நெருக்கடியை குறைக்க சீனா இலங்கைக்கு அரிசியை நன்கொடையாக வழங்கும் என்று பிரதமரிடம் மீண்டும் உறுதியளித்தார்.

விவசாய அமைச்சின் கீழ் கண்காணிக்கப்படும் விவசாய நல புத்தாக்க திட்டத்தின் மூலம் வாகரையில் நடைபெற்று வரும் விவசாய நிலங்களை பார்வையிடும் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் கலந்து கொண்டு பார்வையிட்டுள்ளார்.

 

இத்திட்டத்தின் கீழ் பயிரிடப்பட்ட பச்சை வெள்ளரி அறுவடை நிகழ்விலும் ஆளுநர் கலந்து கொண்டதுடன், இவ் விவசாய நிலங்களில் உப விளைபொருளாக உயர்தர மானிக்காய் ரகங்கள் பயிரிடப்பட்டதுடன், அறுவடையின் தரத்தையும் கிழக்கு மாகாண ஆளுநர் பார்வையிட்டார்.

மேலும் இவ்வாறு தோட்டங்களை பார்வையிட்ட ஆளுநர், மாங்கேணி பிரதேசத்தில் ஹேலிஸ் நிறுவனத்தினால் நிறுவப்பட்டுள்ள பச்சை வெள்ளரி ஏற்றுமதி பதப்படுத்தும் தொழிற்சாலையையும் பார்வையிட்டார்.
 
 

Latest News right

“அஸிதிஸி வெகுசன ஊடக புலமைப் பரிசில் நிகழ்ச்சித் திட்டம் – 2023” விண்ணப்பம் கோரல்

செப் 10, 2023
Default Image
இலங்கை ஊடகவியலாளர்களின் தொழில் தன்மையினை உயர்த்தும் நோக்கில் வருடாந்தம்…

எமது பல்கலைக்கழகங்களின் தரம், நற்பெயர் மீண்டும் உலகின் முன் உறுதிப்படுத்தல் அவசியம் அதன் மூலம் வெளிநாட்டு மாணவர்களையும் ஈர்க்க முடியும் - ஜனாதிபதி

ஜூன் 12, 2023
Default Image
இலங்கைப் பல்கலைக்கழகங்கள் அன்று ஆசிய பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதன்மையான இடத்தில்…

2023.05.22 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

மே 23, 2023
Cabinet Decisions on 22.05.2023 Tamil page 0001
2023.05.22 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

தொழில்சார் சட்டத்தரணியாக 50 வருடங்களை நிறைவு செய்த ஜனாதிபதிக்கு “அபிநந்தன” விருது வழங்கி கௌரவிப்பு

மார் 13, 2023
தொழில்சார் சட்டத்துறையில் 50 வருடங்கள் பணியாற்றிய இலங்கை சட்டத்தரணிகள் சங்க…

2023.01.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

ஜன 23, 2023
2023.01.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் (அரசாங்க தகவல்…

சீன கடனை செலுத்த 2 ஆண்டுகள் நிவாரணம் - எக்ஸிம் வங்கி ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

ஜன 23, 2023
இலங்கைக்கு வழங்கிய கடனை மீளச் செலுத்துவதற்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கத் தயார் என…

"சீதாவக்க ஒடிஸி" பயணம் தொடங்குகிறது.

ஜன 15, 2023
சீதாவக்க நகருக்குச் செல்ல ஒரு புதிய வழியைத் திறந்து "சீதாவக்க ஒடிஸி" தனது பயணத்தை…

“அஸிதிஸி” வெகுசன ஊடக புலமைப்பரிசில் வழங்கல் – 2021/2022

டிச 20, 2022
அனைத்து ஊடகவியலாளர்களையும் அறிவு, திறன் மற்றும் அணுகுமுறைகளுடன் தொழில்முறை வெகுசன ஊடகத்…