புகழ்பெற்ற சிரேஷ்ட நடிகரும் கலைஞருமான ஜெக்ஸன் அன்தனி விரைவில் குணமடைய வேண்டி நெடுஞ்சாலைகள் போக்குவரத்து மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி. பந்துல குணவர்தனவின் ஏற்பாட்டில் கொழும்பு கங்காராம விகாரையில் இன்று (31) விசேட மத வழிபாடுகள் நடத்தப்பட்டன.
தலாவை பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற பாரிய விபத்தையடுத்து அவர் தொடர்ந்தும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
ஜெக்ஸன் அன்தனி அவரது மேடை தொலைக்காட்சி மற்றும் சினமா நடிப்பு துறைக்காக பாராட்டுக்களை பெற்றுக் குவித்துள்ளதுடன் பதினாறு தடவைகள் மிகச் சிறந்த நடிகருக்கான விருதுகளையும் வென்றுள்ளார்.
இவ்வழிபாட்டு நிகழ்வில் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளரும் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவருமான அனுஷ பெல்பிட்ட அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க அரச ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் கலைஞர்கள் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட மேலும் பலர் கலந்துகொண்டனர்.