பேராசிரியர் சுனந்த மத்தும பண்டார மற்றும் ஷனுக்கா செனவிரட்ன ஆகியோர் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பேராசிரியர் மத்தும பண்டார ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராகவும் (ஊடகம்) செனவிரட்ன சர்வதேச ஊடகங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
களனி பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரான பேராசிரியர் மத்தும பண்டார களனி பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் சமூக விஞ்ஞான திணைக்களத்தின் பீடாதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.
அவர் ஊடக இராஜாங்க அமைச்சின் செயலாளராகவும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் பதவி வகித்துள்ளார். மேலும் அவர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றியுள்ளார்.
இலங்கை வெளிவிவகார சேவையைச் சேர்ந்த முன்னாள் சிரேஷ்ட இராஜதந்திரியான செனவிரட்ன வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஆவார். அவர் இங்கிலாந்துக்கான உயர்ஸ்தானிகராகவும் தாய்லாந்துக்கான தூதுவராகவும் ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மற்றும் நியுயோர்க்கிற்கான நிரந்தர பிரதிநிதியாகவும் பதவி வகித்துள்ளார்.