கிரிந்த-புகுல்வெல்ல பிரதேச ஒருங்கிணைப்புக் குழு ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் மார்ச் 04ஆம் திகதி கிரிந்த-புகுல்வெல்ல பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் கூடியது.

பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மக்கள் பிரதிநிதிகளும், அரச அதிகாரிகளும் தமது பிரதேசத்தில் உள்ள பிரச்சினைகளை கலந்துரையாடக்கூடிய கௌரவமான இடம் எனவும், உள்ளூர் மற்றும் கிராமிய மட்டங்களில் வெளிவரும் முன்மொழிவுகள் மற்றும் யோசனைகள் தொடர்பில் குழு அதிக கவனம் செலுத்த வேண்டுமென அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பிரதேச சபை உறுப்பினர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய பரிசோதனை உத்தியோகத்தர்கள், குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள் ஆகியோரின் கூட்டு அர்ப்பணிப்பே கிராம அபிவிருத்திக்கான பங்களிப்பின் அடிப்படையாக அமைவதாகவும் அவர்களின் முறையான சேவை மிகவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கிரிந்த புழுல்வெல்ல பிரதேச சபையின் தலைவர் சனத் ஹெட்டியாராச்சி, கிரிந்த புழுல்வெல்ல பிரதேச செயலாளர் ஏ.பி.டபிள்யூ.டி. திருமதி ராஜபக்சே மற்றும் அரச அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.