எசிதிசி ஊடகவியலாளர்களுக்கான காப்புறுதி திட்டத்தின் கீழ் முதலாவது திடீர் மரணத்துக்கான காப்புறுதியை வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும கடந்த 16 ஆம் திகதி கையளித்தார்.

கோவிட் தொற்றுக்குள்ளாகி கடந்தவாரம் உயிரிழந்த பிராந்திய ஊடகவியலாளர் சுனில் பத்தேவித்தானவின் பெயரில் வழங்கப்பட்ட ஐந்து இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெருமதியான காப்புறுதியை அவரது மனைவி சமரவீர முதலிகே தோனா சோமாவத்தியிடம் அமைச்சர் கையளித்தார்.

களுத்துறை தொடங்கொடையை வசிப்பிடமாகக் கொண்ட பத்தேவித்தான(63) லங்காதீப்ப பத்திரிகையில் 30 வருடங்களும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுதாபனத்தில் 10 வருடங்களும் பிராந்தியச் செய்தியாளராக பணியாற்றியுள்ளார்.

 இந்நிகழ்வில் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்டவும் கலந்து கொண்டார்.