யாழ்ப்பாணம் – மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட விசேட பொருளாதார  மத்திய நிலையத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைத்தார். விவசாயிகள் தமது அறுவடைகளுக்குத் தகுந்த விலையை பெற்றுக்கொள்வதற்கும் நுகர்வோர் மலிவு விலையில் மரக்கறி மற்றும் பழ வகைகளை கொள்வனவு செய்வதற்கும் வசதியாக இந்த விசேட பொருளாதார மத்திய நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசாங்கம் 200 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.