இலங்கைக்கு வழங்கிய கடனை மீளச் செலுத்துவதற்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கத் தயார் என சீனா எக்ஸிம் வங்கி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனைப் பெறுவதற்கான உத்தரவாதமாக சீனா வழங்கிய கடனை மறுசீரமைக்குமாறு கடந்த செப்டெம்பர் மாதம் இலங்கை விடுத்த கோரிக்கைக்கு எக்ஸிம் வங்கி பதிலளித்துள்ளது. கடன் மறுசீரமைப்பு தொடர்பான சீனாவின் நிலைப்பாடு நேற்று சர்வதேச நாணய நிதியத்திடம் IMF தெரிவிக்கப்பட இருந்தது. கடந்த வார முற்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்த சீனாவின் சர்வதேச திணைக்களத்தின் பிரதி அமைச்சர் Chen Zhou, கடனை மறுசீரமைப்பது குறித்து பரிசீலிக்குமாறு இலங்கை விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் நல்ல செய்தியை அறிவிக்க தயாராகி வருவதாகவும் தெரிவித்தார். இலங்கைக்கு வழங்கப்பட்ட கடனை மறுசீரமைக்கத் தயார் என இந்தியா கடந்த 18ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்திடம் தெரிவித்திருந்தது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்ற கடன் வழங்கும் நாடுகளிடம் கேட்டிருந்தார். தற்போதைய நிதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு இந்தியா பூரண ஆதரவை வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் கடனாளிகளின் பரீஸ் குழுக; கூட்டம் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை இலங்கை எதிர்பார்க்கிறது மற்றும் கடன் மறுசீரமைக்கப்படும் என கடனாளிகள் வழங்கிய உறுதிமொழியின் அடிப்படையில் இந்த வசதியை வழங்குவது குறித்து உடன்பாடு எட்டப்பட உள்ளது.

சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகியவை இலங்கையின் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்கும் நாடுகள் ஆகும்.

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவுடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடையும் என்றும் சீனாவின் பதில் சாதகமாக இருக்கும் என்றும் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம் சாதகமான ஆதரவை வழங்கும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நம்பிக்கை தெரிவித்தார்.

IMF நிதி உதவிக்கு ஒப்புதல் பெற இலங்கை சந்திக்க வேண்டிய மற்றொரு முக்கிய அளவுகோலாக சர்வதேச நாணய நிதியம் (IMF)

ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கான சமூக பாதுகாப்பு வலையமைப்பை அறிமுகப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கேட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

அரசாங்கம் ஏற்கனவே வறிய மற்றும் நலிவடைந்த சமூகங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான விண்ணப்பங்களை கோரியுள்ளதுடன், அவற்றை மதிப்பீட்டிற்காக மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், இறுதி அறிக்கை அடுத்த மாதத்திற்குள் கிடைக்கப்பெறும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.