2022 ஆம் ஆண்டின் புக்கர் பரிசை இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக்க வென்றுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை (17) லண்டனில் நடந்த வைபவத்தில் இப்பரிசை ஷெஹான் கருணாதிலக்க பெற்றுக்கொண்டார். இலங்கையில் பல தசாப்தங்களாக நடந்த யுத்தம் தொடர்பாக அவர் எழுதிய "The Seven Moons of Maali Almeida "(‘மாலி அல்மேடாவின் ஏழு நிலவுகள்’ ) எனும் நாவலுக்காக இப்பரிசு வழங்கப்பட்டுள்ளது

இலங்கையின் நற்புகழை சர்வதேச மட்டத்தில் மீண்டும் அறிமுகம் செய்துள்ள ஷெஹான் கருணாதிலக்க நாட்டுக்கு நற்பெயரை ஏற்படுத்தியிருப்பதாகவும் ஜனாதிபதி தனது Twitter செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ஷெஹான் கருணாதிலக்க எழுத்துத்துறையில் மென்மேலும் சிறந்து விளங்குவதற்கு அவசியமான தைரியமும் சக்தியும் கிடைக்க வேண்டுமென பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி, எழுத்தாளர் என்ற வகையில் அவருடைய எதிர்கால முயற்சிகள் வெற்றியடையவும் ஜனாதிபதி தனது வாழ்த்துப் பதிவில் தெரிவித்துள்ளார்.