சீதாவக்க நகருக்குச் செல்ல ஒரு புதிய வழியைத் திறந்து "சீதாவக்க ஒடிஸி" தனது பயணத்தை தொடங்குகிறது.
போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் கருத்திட்டத்தின்படி, சீதாவக்க பிரதேசம் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான வலயமாக மாற்றும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட “சீதாவக்க ஒடிஸி” சொகுசு சுற்றுலா ரயில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து இன்று (15) காலை பயணத்தை ஆரம்பித்தது. கொழும்பு கோட்டையில் இருந்து வக நோக்கி பயணிக்கும் இந்த ரயிலில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் பிரதேசத்தில் உள்ள பல சுற்றுலாத் தலங்களை பார்வையிடுவதற்காக மேல் மாகாண சுற்றுலா சபையுடன் இணைந்து வேலைத்திட்டமொன்று திட்டமிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் இந்த ரயில் பயணம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.பாராளுமன்ற உறுப்பினர்களான திரு.யாதமினி குணவர்தன, திரு.மதுர விதான, மேஜர் பிரதீப் உந்துகொட மற்றும் உள்ளூராட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். ரயில்வே பொது முகாமையாளர், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் உள்ளூர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவும் கலந்து கொண்டனர்.