ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் இந்தோனேசிய தூதுவர் தேவி குஸ்டினா டொபின்க் ஆகியோருக்கிடையிலான இருதரப்புச் சந்திப்பு கடந்த மார்ச் 02ஆம் திகதி ஊடக அமைச்சில் நடைபெற்றது. இச்சந்திப்பின் ஆரம்பத்தில், இந்தோனேசியாவில் அண்மையில் இடம்பெற்ற பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் மக்களுக்கும் அமைச்சர் தனது ஆழ்ந்த அனுதாபங்களை இந்தோனேசிய தூதுவரிடம் தெரிவித்துக்கொண்டார். மேலும் பாளி நகரில் நடைபெறவுள்ள பாராளுமன்ற சங்கங்களுக்கிடையிலான 144வது மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் முகமாக தான் கலந்துகொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார். இலங்கையில் விரைவில் ஆரம்பிக்கப்படவிருக்கும் முதலாவது வெகுசன ஊடகப் பயிற்சி நிலையத்துக்கு இந்தோனேசிய அரசாங்கத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது உள்ளிட்ட நாடுகளுக்கு இடையிலான இருதரப்புச் சந்திப்பை மேலும் பலப்படுத்துவது தொடர்பிலும் இதன் போது இருதரப்பினரும் கலந்துரையாடினர். இலங்கை-இந்திய நாடுகளுக்கு இடையிலான  70 வருட இராஜதந்திர உறவை கொண்டாடும் வகையில் இலங்கை யில் முத்திரையொன்றை வெளியிட்டு வைக்குமாறு இந்தோனேசிய தூதுவர் முன்வைத்த கோரிக்கையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட அமைச்சர் அதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் உறுதிபூண்டார். இச்சந்திப்பில் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் ஓஷதி அழகப்பெரும மற்றும் இந்தோனேசிய தூதரகத்தின் அமைச்சர் ஆலோசகர் ஹெரு பிரயிட்னோ ஆகியோரும் கலந்து கொண்டனர்.