வெகுஜன ஊடகத்துறை அமைச்சருக்கும் இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு ..

வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கேல் அப்பிள்டன் ஆகியோர்க்கு இடையே பெப்ரவரி 15 ஆம் திகதி வெகுஜன ஊடக அமைச்சில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

போலியான தகவல்கள் பரவுவது,  இன்று உலகம் எதிர்நோக்கும் கடும் சவாலாக உள்ளதாகவும், அதைத் தடுக்க நியூசிலாந்து அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் இரு தரப்பினரும் விவாதித்தனர்.

பிரஜைகளின் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ஓஷதி அழகப்பெரும மற்றும் இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயத்தின் கொள்கை ஆலோசகர் செல்வி சுமுது ஜயசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.