சமீபத்திய செய்தி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பேண்தகு அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹெனா சிங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வறுமை ஒழிப்பு, காலநிலை மாற்றம், அரச நிறுவனங்களின் டிஜிட்டல் மயமாக்கம், காணாமற்போனோர் தொடர்பான பிரச்சினையை முகாமைத்துவம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

DE2 6451வறுமையை இல்லாதொழிப்பதே அரசாங்கத்தின் பிரதான குறிக்கோளாகும். குறைந்த வருமானமுடைய ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தல் மற்றும் சலுகை விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை பெற்றுக்கொடுப்பதற்கு முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் ஆகியன தொடர்பில் ஜனாதிபதி ஐ.நா பிரதிநிதியிடம் தெளிவுபடுத்தினார்.

கல்வித்துறை, தகவல் தொழிநுட்ப மேம்பாடு மற்றும் அரச நிறுவனங்களின் டிஜிட்டல் மயமாக்கம் போன்ற செயற்பாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு ஐ.நா பிரதிநிதி இணக்கம் தெரிவித்தார்.

காணாமற்போனோர் தொடர்பான பிரச்சினை பற்றியும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. குறித்த குடும்பங்களின் வாழ்வாதார அபிவிருத்திக்கான செயன்முறையொன்றினை தயாரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

தமது அரசியல் அபிலாஷைகளுடன் முரண்பட்டுள்ளமையினால் தமிழ் அரசியல்வாதிகள் அந்த நடவடிக்கைகளை நிராகரித்துள்ளபோதிலும், பாதிப்புக்குட்பட்டுள்ள குடும்பங்களின் நலனுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

பகிடிவதை காரணமாக பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய மாணவர்களுக்கு மீண்டும் பல்கலைக்கழக வாய்ப்பை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்காக திருத்த சட்ட மூலம் ஒன்று கொண்டுவரப்படும் என்று உயர் கல்வி அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்கான செய்தியாளர்களுடனான சந்திப்பில் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற இந்த சந்திப்பின் போது அமைச்சர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் பகிடிவதையை பொறுத்துக்கொள்ள முடியாமல் பல்கலைக்கழக கல்வியை பெற முடியாமலும் பகிடிவதைக்குள்ளாகி பட்டத்தை பெறமுடியாமல் போனவர்களுக்கு இதற்கான சந்தர்ப்பத்தை இதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பாக அடுத்த வாரத்தில் பத்திரிகை அறிவிப்பு ஒன்று வெளியிடப்படும் என்று தெரிவித்த அமைச்சர் பகிடிவதையின் தன்மை, பல்கலைக்கழக வசதியை பெற்றுக்கொள்ள தயாரான பட்டப்படிப்பு கற்கை நெறி தொடர்பான தகவல்களை இதற்காக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

சமர்ப்பிக்கப்படும் தகவல்களின் உண்மை தன்மை பரிசோதிக்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர் இந்த குழுவில் துணை வேந்தர்கள்;, விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் இடம்பெறுவர். நீதியான விசாரணைக்கு பின்னர் தான் விரும்பும் பல்கலைக்கழகத்துக்கு பிரவேசித்து பட்டத்தை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் இந்த மாணவர்களுக்கு கிடைக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பகிடிவதையை எதிர்கொள்ள முடியாமல் பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறிய மாணவர்கள் சுமார் 2000 பேர் இருப்பதாகவும் உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.

குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதியின் பணிப்புரையில் துரித நிவாரணங்கள்

Ø குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள்..

Ø பொருட்களை பெற்றுக்கொள்ள இலத்திரனியல் அட்டை..

Ø சிறிய அளவிலான வர்த்தகர்களையும் உற்பத்தியாளர்களையும் ஊக்குவிப்பதும் நோக்கம்..

Ø கிராமிய தோட்ட மற்றும் நகரப் பிரதேசங்களில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வீடுகளுக்கு குடிநீர்..

Ø ஒரு லட்சம் கிராமிய வீதிகள் அபிவிருத்தி..

Ø விவசாயம், வியாபார அபிவிருத்தி மற்றும் வீட்டுத் திட்டத்திற்கு ஒரு லட்சம் காணித் துண்டுகள்..

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தீர்மானித்துள்ளார். இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தகுதிபெறும் அனைவருக்கும் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்ய விசேட இலத்திரனியல் அட்டையொன்றும் வழங்கப்படும்.

சமூர்த்தி உதவி பெறுவோர், சமூர்த்தி உதவி கிடைக்கப் பெறாதவர்கள், நிலையான தொழில் இல்லாதவர்கள், பெருந்தோட்டத் துறை தொழிலாளர்கள், தொழில் இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த அங்கவீனமுற்றோர், விதவை குடும்பங்கள், நிலையான வருமானம் இல்லாத முதியோர்கள் மற்றும் கடுமையான நோயாளிகள் உள்ள குடும்பங்கள் இத்திட்டத்திற்கு தகுதி பெறுவார்கள். அவர்களது உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது இந்நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும்.

சீனி, தேயிலை, அரிசி, மா, பருப்பு, கடலை, வெங்காயம், மிளகாய், கருவாடு, கிழங்கு மற்றும் பால் மா உள்ளிட்ட அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களை நிவாரண விலையில் வழங்க எதிர்பார்க்கப்படுகின்றது. சதொச, கூட்டுறவு விற்பனை வலையமைப்பு மற்றும் குறிப்பாக கிராமிய பிரதேசங்களில் தெரிவுசெய்யப்பட்ட அனுமதியளிக்கப்பட்ட விற்பனை நிலையங்களின் ஊடாக உணவுப் பொருட்களை இலகுவாக கொள்வனவு செய்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தெரிவுசெய்யப்படும் குறைந்த வசதிகளைக் கொண்ட கிராமிய விற்பனை நிலையங்களுக்கு நிவாரண அடிப்படையில் குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்ட உபகரணங்களை பெற்றுக்கொள்ளவும் வசதிகள் செய்யப்படவுள்ளன.

குறித்த விற்பனை நிலையங்களை மக்கள் செறிந்து வாழும் பிரதேங்கள், குறைந்த வருமானம் பெறும் வீட்டுத் தொகுதிகள், கிராமிய பகுதிகள் மற்றும் பெருந்தோட்டத் துறையை உள்ளடக்கும் வகையிலும் அமைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அனுமதியளிக்கப்பட்ட வியாபார நிலையங்களை தெரிவுசெய்யும் போது பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு முன்னுரிமையளிக்கப்படும்.

இதன் மூலம் சிறியளவிலான வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்கும் ஜனாதிபதி அவர்கள் எதிர்பார்த்துள்ளார். சுதேச உற்பத்தியாளர்களுக்கு முன்னுரிமையளித்து அவர்கள் உற்பத்தி செய்யும் பொதிசெய்யப்பட்ட உணவு, வாசனை திரவியங்கள், இறைச்சி, மீன் முட்டை மற்றும் ஏனைய வீட்டுத் தேவைகளை குறித்த வியாபாரிகளுக்கு தரகர்கள் இன்றி நேரடியாகவே வழங்குவதற்கும் இத்திட்டத்தில் வசதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சித்திதிட்டத்துடன் இணைந்ததாக கிராமிய தோட்ட மற்றும் நகர பிரதேசங்களில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வீடுகளுக்கு குடிநீர் வழங்கவும், ஒரு லட்சம் கி.மீ கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்யவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

வறிய மற்றும் குறைந்த வருமானம் பெறுவோர் என இனங்காணப்படுவோருக்கு காணி அமைச்சு, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு மற்றும் பிம் சவியவுடன் இணைந்து விவசாயம், வியாபார அபிவிருத்தி மற்றும் வீட்டுத் திட்டத்திற்காக முப்பது வருட குத்தகை அடிப்படையில் ஒரு லட்சம் காணித் துண்டுகளை வழங்கவும் ஜனாதிபதி அவர்கள் தீர்மானித்துள்ளார்.

மொஹான் கருணாரத்ன

பிரதிப் பணிப்பாளர் (ஊடகம்)

2020.01.15

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தைப்பொங்கலை முன்னிட்டு நேற்றைய தினம் முகத்துவாரத்தில் உள்ள விஷ்ணு ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதி பால உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

நாடு முழுவதிலும் 1,000 பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும். அத்தோடு ஒவ்வொரு மாவட்டத்திலும் மும் மொழிகளை கற்பிக்கும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டி பளிபாண ஸ்ரீ சந்திரானந்த பௌத்த மகளிர் வித்தியாலயத்தை பிரதமர் இன்று திறந்து வைத்தார். அதன் பின்னர் அங்கு உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

புதிய மக்கள் மய கொள்கையின் ஊடாக புதிய அரசாங்கம் நாட்டை சிறப்பாக முன்னெடுத்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். இதன் மூலமாக கல்வியில் பயனுள்ள மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

ஏகாதிபத்தியவாதிகளின் ஆக்கிரமிப்புடன் அழிந்துபோன தேசிய பௌத்த கல்வி முறையை மேம்படுத்துவதற்கு மகா விகாரையுடன் தொடர்புபட்ட பௌத்த பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவது மிக முக்கியமானதாகும் என்றும் அவர் கூறினார்.

வீடொன்றை அல்லது சிறிய வர்த்தக நிலையமொன்றை நிர்மாணிக்கும் திட்டங்கள் உரிய முறையில் தயாரிக்கப்பட்டிருப்பின் அதற்கான அனுமதியை ஒரே நாளில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நிர்மாணப்பணிகளுக்கான திட்டங்களுக்கு அனுமதி வழங்கும்போது நிலவும் கடுமையான சட்ட திட்டங்கள் மற்றும் நீண்டகால தாமதம் காரணமாக மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.

எனவே நடைமுறையிலுளன்ள சட்ட திட்டங்களை இலகுபடுத்தி, மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை முடியுமான அளவு குறைப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

நகர அபிவிருத்தி, நீர் வழங்கல், வீட்டு வசதிகள் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் அதிகாரிகளுடன் இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போது தெரிவித்தார்.

திட்டங்களை அனுமதிப்பதற்காக உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் குறித்த நிறுவனங்கள் துரிதமாக அவற்றுக்கான ஏற்பாடுகளை செய்தல் குறித்து கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.

தற்போது அனுமதியளிக்கப்படாத திட்டங்களுக்கு அனுமதியளிப்பது சம்பந்தமாக சட்டம் குறித்த அறிவுள்ள அதிகாரி ஒருவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். உறுதிச் சான்றிதழை ஒரே நாளில் வழங்குவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தேசிய, பௌதீக திட்டத்தை இற்றைப்படுத்துவது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது. முதன்முறையாக வீடொன்றை கொள்வனவு செய்யும் ஒருவருக்கு நீண்டகால கடன் மற்றும் நிவாரண வட்டி முறைமையின் கீழ் கடன் வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

திட்டங்களை அனுமதிக்கும்போது ஒரே சட்டத்தை நடைமுறைப்படுத்தாது பூகோள நிலைமைகளை கருத்திற்கொண்டு பரிந்துரைகளை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. மாகாண மற்றும் பிரதேசங்களுக்கேற்ப முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கண்டறிந்து அவற்றுக்கான அனுமதியையும் அரசாங்க நிறுவனங்களினூடாகவே மேற்கொண்டு முதலீட்டுச் சபைக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வலுவூட்டப்படுவதுடன், தமது திட்டத்தை உடனடியாக ஆரம்பிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும்.

நாடளாவிய ரீதியிலுள்ள சகல சிறிய நகரங்களையும் முறையாகவும் அழகிய முறையிலும் அபிவிருத்தி செய்வதன் மூலம் சுற்றுலா பயணிகளை ஈர்க்க முடியும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். எடுத்துக்காட்டாக தலவாக்கலை, எல்ல மற்றும் கினிகத்ஹேன போன்ற நகரங்களை நவீனமயப்படுத்தக்கூடிய வழி வகைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

வேரெஸ்ஸ கங்கைத்திட்டப் பணிகளை துரிதப்படுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

கழிவு முகாமைத்துவம் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

குப்பைகளை சேதனப் பசளைகளாக மாற்றுவதற்கான திட்டங்களை தயாரிக்குமாறும் அதற்காக அதிகபட்சம் தொழிநுட்பத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட துறையினரிடம் தெரிவித்தார்.

புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் பங்களிப்பை பெற்று குவிந்திருக்கும் மணற் படிவுகளை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் மணலின் விலையை குறைப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இதன் மூலம் பல பிரதேசங்கள் முகங்கொடுத்துள்ள வெள்ள அச்சுறுத்தலுக்கும் தீர்வு வழங்க முடியும்.

பேர வாவிகளை சுத்தப்படுத்தும் திட்டத்தை விரைவாக ஆரம்பிப்பதற்கு தீர்மானிப்பட்டது. இதன்போது பேர வாவிக்கு கழிவுகள் சேரும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள இடங்களை உடனடியாக மூடி விடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பணிப்புரை வழங்கப்பட்டது.

அமைச்சர்களான காமினி லொக்குகே, இந்திக அனுருத்த, அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

“வளம்பெறும் நாட்டிற்கு – பலன்தரும் மரங்கள்” எனும் தொனிப்பொருளில் பத்து இலட்சம் மரங்களை நாட்டும் தேசிய மரநடுகை செயற்திட்டத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களும் 01ம் திகதி முற்பகல் இணைந்துகொண்டார்.

தேசிய ஆளடையாள அட்டை, சாரதி அத்தாட்சிப்பத்திரம், குடிவரவு, குடியகல்வு ஆவணங்கள், பிறப்பு, இறப்புக்களை பதிவு செய்தல் உள்ளிட்ட அனைத்து தனிநபர் சார்ந்த தகவல்களையும் ஒரே தேசிய தரவு நிலையத்தின் கீழ் சேகரித்தல் தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் கவனம் செலுத்தியுள்ளார்.

15 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட சுனாமி பேரலை காரணமாக உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கான நினைவஞ்சலி நிகழ்வுகள் இன்று (26) நாடு பூராகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

சமாதானம், சகவாழ்வு ஆகியவற்றின் மகிமையை இவ்வுலகிற்கு எடுத்துரைத்த இயேசு பிரானின் உன்னத போதனைகளால் மக்கள் பக்குவமடைந்துள்ள தருணத்தில் பிறக்கும் இந்த நத்தார், சிறியோர் முதல் பெரியோர் வரை உலக மக்கள் அனைவருக்கும் ஒப்பற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது.

இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர் எம்.அஷ்ரப் ஹைதரி 12ம் திகதி முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.

Latest News right

எமது பல்கலைக்கழகங்களின் தரம், நற்பெயர் மீண்டும் உலகின் முன் உறுதிப்படுத்தல் அவசியம் அதன் மூலம் வெளிநாட்டு மாணவர்களையும் ஈர்க்க முடியும் - ஜனாதிபதி

ஜூன் 12, 2023
Default Image
இலங்கைப் பல்கலைக்கழகங்கள் அன்று ஆசிய பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதன்மையான இடத்தில்…

தொழில்சார் சட்டத்தரணியாக 50 வருடங்களை நிறைவு செய்த ஜனாதிபதிக்கு “அபிநந்தன” விருது வழங்கி கௌரவிப்பு

மார் 13, 2023
தொழில்சார் சட்டத்துறையில் 50 வருடங்கள் பணியாற்றிய இலங்கை சட்டத்தரணிகள் சங்க…

2023.01.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

ஜன 23, 2023
2023.01.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் (அரசாங்க தகவல்…

சீன கடனை செலுத்த 2 ஆண்டுகள் நிவாரணம் - எக்ஸிம் வங்கி ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

ஜன 23, 2023
இலங்கைக்கு வழங்கிய கடனை மீளச் செலுத்துவதற்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கத் தயார் என…

"சீதாவக்க ஒடிஸி" பயணம் தொடங்குகிறது.

ஜன 15, 2023
சீதாவக்க நகருக்குச் செல்ல ஒரு புதிய வழியைத் திறந்து "சீதாவக்க ஒடிஸி" தனது பயணத்தை…

“அஸிதிஸி” வெகுசன ஊடக புலமைப்பரிசில் வழங்கல் – 2021/2022

டிச 20, 2022
அனைத்து ஊடகவியலாளர்களையும் அறிவு, திறன் மற்றும் அணுகுமுறைகளுடன் தொழில்முறை வெகுசன ஊடகத்…

"வரவுசெலவுத்திட்ட உரை – 2023" இலங்கை, புதியதோர் எதிர்காலத்தை நோக்கி....

நவ 14, 2022
வரவு செலவுத்திட்ட உரை – 2023 இலங்கை, புதியதோர் எதிர்காலத்தை நோக்கி.... ​ கௌரவ சபாநாயகர்…

2022 புக்கர் விருது இலங்கையருக்கு ஷெஹான் கருணாதிலக்க விருதை வென்றார்

அக் 19, 2022
2022 ஆம் ஆண்டின் புக்கர் பரிசை இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக்க வென்றுள்ளார். கடந்த…