சமீபத்திய செய்தி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை.

(2020.03.17) சங்கைக்குரிய மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினரின் அனுமதியுடனும், இந்து, கத்தோலிக்க, இஸ்லாமிய மற்றும் ஏனைய மதத் தலைவர்களின் அனுமதியுடனும் ,தாய்மார்களே, தந்தைமார்களே, பிள்ளைகளே!

நான் இன்று உங்கள் முன்னிலையில் உரையாற்றுவது கொரோனா வைரஸ் என்ற COVID -19  வைரஸ் தொடர்பாக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய நிலைமைகள் பற்றி உங்களை தெளிவுபடுத்துவதற்கேயாகும்.

இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக உலகத்தின் அவதானம் செலுத்தப்பட்டதோடு, சீனாவின் வூஹான் பிரதேசத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த இலங்கை மாணவர்கள் 34பேரை இலங்கைக்கு அழைத்துவர நான் முடிவெடுத்தேன். அந்நேரம் எந்வொரு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவரும் இலங்கையில் பதிவு செய்யப்படாது இருந்தாலும், இந்த வைரஸினால் எதிர்காலத்தில் ஏற்பட முடியுமான ஆபத்தான நிலைக்கு முகங்கொடுப்பதற்காக ஜனவரி மாதம் 26ஆம் திகதி விசேட தேசிய செயலணி குழுவொன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஜனவரி மாதம் 27ஆம் திகதி இலங்கையில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவராக இலங்கைக்கு சுற்றுலாவுக்காக வருகை தந்திருந்த சீன பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டார். அவரை உடனடியான ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. அவர் பெப்ரவரி 19ஆம் திகதியாகும்போது முழுமையாக குணமடைந்து இலங்கையிலிருந்து தனது நாட்டுக்கு சென்றார்.

விசேட விமானமொன்றின் மூலம் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட இலங்கை மாணவர்கள் மத்தளை விமான நிலையத்தில் கண்காணிப்பு நடவடிக்கைக்குட்படுத்தப்பட்டு தியத்தலாவையில் விசேடமாக அமைக்கப்பட்ட கண்காணிப்பு நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் முகாமில் 14 நாட்கள் கண்காணிப்புக்குட்படுத்தப்பட்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி பாதுகாப்பாக தமது வீடுகளுக்கு சென்றனர். இக்காலத்தில் விமான நிலையத்தினூடாக வருகை தருபவர்களின் சுகாதார நிலைமை தொடர்பாக அடிப்படை பரிசோதனைகள் விமான நிலையத்திலேயே மேற்கொள்வதற்கும் அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பெப்ரவரி 26ஆம் திகதி தொற்றுக்குள்ளான சீன பெண் அடையாளம் காணப்பட்ட பின்னர் ஒரு மாதகாலம்வரை வேறு எந்தவொரு நோயாளி பற்றியும் அறியக் கிடைக்கவில்லை. சீனாவிற்கு வெளியே வேறு நாடுகளிலும் வைரஸின் தாக்கம் பரவியதன் காரணமாக இத்தாலி, தென்கொரியா, ஈரான் போன்ற நாடுகளிலிருந்து வருகைதரும் விமானப் பயணிகள் 14 நாட்களுக்கு கண்காணிப்புக்குட்படுத்த தீர்மானம் எடுக்கப்பட்டது. அத்தீர்மானம் மார்ச் மாதம் 19ஆம் திகதி எடுக்கப்பட்டது. இதன்படி கந்தகாடு, மட்டக்களப்பு கண்காணிப்பு நிலையங்களுக்கு பயணிகளை உள்வாங்குதல் ஆரம்பமாகியது. இது ஆரம்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இத்தாலி அல்லது கொரியாவிலிருந்து வருகை தந்த ஒரு சிலர் அதற்கு பலத்த எதிர்ப்பை தெரிவித்ததோடு கண்காணிப்பு நிலையங்களுக்கு அழைத்து செல்லும் வழியில் திரும்பிச் செல்லவும் ஒரு சிலர் முற்பட்டனர்.

மார்ச் மாதம் 11ஆம் திகதி எமக்கு கொரோனா தொற்றுக்குள்ளன முதலாவது நபர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டார். அவர் இத்தாலி சுற்றுலா குழுவொன்றிற்கு வழிகாட்டக்கூடிய சுற்றுலா ஆலோசகராவார்.

கண்காணிப்பு நிலையத்தினுள் மற்றும் அதற்கு வெளியே எம்மால் மேற்கொள்ளப்படுகின்ற பரிசோதனைகளின் மூலம் மேலும் பல தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டதோடு, தற்போது 34 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் ஜேர்மனியிலிருந்து வருகை தந்த நான்கு பேரைத் தவிர ஏனைய அனைவரும் இத்தாலியில் இருந்து வருகை தந்தவர்கள் அல்லது அவர்களுடன் தொடர்புபட்டிருந்தவர்களாக இருந்தமை மிக முக்கிய விடயமாகும்.

மார்ச் 13ஆம் திகதி முதல் தென்கொரியா, இத்தாலி மற்றும் ஈரானிலிருந்து வருகை தருபவர்களும் கண்காணிப்புக்கு உள்வாங்கப்படுவது ஆரம்பமானது. இவற்றுள் பிரான்ஸ், ஸ்பெயின், ஜேர்மன், சுவிட்சலாந்து, டென்மார்க், நெதர்லாந்து, சுவீடன் மற்றும் அவுஸ்திரேலியாவும் ஒன்று சேர்ந்தது. தற்போது இங்கிலாந்து, பெல்ஜியம், நோர்வே, கனடா, கட்டார் மற்றும் பஹ்ரேன் போன்ற நாடுகளிலிருந்து வருகை தருபவர்களும் கண்காணிப்புக்குள்ளாக்கப்படுகின்றனர். நாளை முதல் மறு அறிவித்தல் வரை அனைத்து சுற்றுலா பயணிகளும் வருகை தருவது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் 10ஆம் திகதி கந்தகாடு மற்றும் பூனானி கண்காணிப்பு நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரை 16 கண்காணிப்பு நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று காலை ஆறு மணியாகும்போது 1882 பயணிகள் இக்கண்காணிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதில் 92 பேர் தற்போது பல்வேறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எமக்கு தற்போது காணப்படும் அடிப்படை பிரச்சினை என்னவெனில் மார்ச் மாதம் 10ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு முன்னர் இரண்டு வாரங்களுக்குள் நோய்த் தொற்று ஏற்பட்டிருந்த நாடுகளிலிருந்து 2000 பேரளவில் இலங்கைக்கு வருகை தந்திருந்தமையாகும்.

தற்போது இனங்காணப்பட்டுள்ள தொற்றுக்குள்ளான 34 பேரில் 19 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பது கண்காணிப்பு நிலையங்களிலிருந்தாகும். அவர்கள் அனைவரும் இத்தாலியில் இருந்து வருகை தந்தவர்கள். ஏனையோர் கண்காணிப்பு நடவடிக்கைக்கு முன்னர் இலங்கைக்கு வருகை தந்திருந்தவர்கள் அல்லது வருகை தந்தவர்கள் மூலம் தொற்றுக்குள்ளனாவர்கள். நாம் கண்காணிப்பு  நடவடிக்கைகளை ஆரம்பிக்க முன்னர் மேலே குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வருகை தந்த அனைவரும் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்களை இனங்கண்டு அவர்களின் வீடுகளிலேயே சுயகண்காணிப்புக்குட்படுத்த நாம் தீர்மானித்துள்ளோம்.

இதற்காக பொலிஸார், முப்படையினர், சுகாதார பரிசோதகர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துவதோடு, அவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். ஏனைய நாடுகளிலிருந்து வருகை தந்துள்ள இலங்கையர்கள் பொறுப்புடன் செயற்படுமாறும் நான் கேட்டுக்கொள்கின்றேன்.

நாம் அரசாங்கத்தினால் விசேட விடுமுறையை வழங்கியதற்கான காரணம் வைரஸ் தொற்று பரவுவதை குறைப்பதற்காகவாகும். அதன் உரிய பயன்பாட்டை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் பயணங்கள், கூட்டாக ஒன்று சேர்தல் மற்றும் விழாக்களிலிருந்து முழுமையாக ஒதுங்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். இந்நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக இதுவரை நாம் மேற்கொண்டிருந்த செயற்பாடுகள், உங்களுக்கு வழங்கப்பட்ட ஆலோசனைகளை நீங்கள் பின்பற்றுவதன் மூலம் இப்பிரச்சினையை முழுமையாக கட்டுப்படுத்த எம்மால் முடியும்.

அரசாங்கம் என்ற வகையில் நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை தொடர்ந்து முன்னெடுக்க வழியமைப்பது எமது அடிப்படை பொறுப்பாகும். மக்களின் பல்வேறு தேவைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டும். நாட்டில் சில மாகாணங்களில் தற்போது வரட்சி நிலவுகின்றது. அப்பிரதேச மக்களுக்கு நாம் குடிநீரைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

பல பிரதேசங்களில் சிறுபோக பயிர்ச் செய்கை நடவடிக்கைகளை ஆரம்பிக்க சேற்றுப் பசளை வழங்கப்பட வேண்டும். மேலும் பல பிரதேசங்களில் அறுவடை மேற்கொள்வதனால் அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மரக்கறிகளை உரிய நேரத்தில் கொள்வனவு செய்யாதவிடத்து மரக்கறி விவசாயிகள் பாதிக்கப்படுவர். அதேபோன்று மரக்கறிகளை தொடர்ச்சியாக சந்தைக்கு கொண்டு சேர்ப்பதும் அவசியமாகும். அதேபோல் வாழ்க்கைச் செலவையும் நாம் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது.

அரச ஊழியர்கள் கடமைகளில் ஈடுபடாதவிடத்து அவை அனைத்தும் பாதிப்புக்குள்ளாகும். அனைவரின் மீதும் அவதானத்தை செலுத்தியே நாம் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். நவம்பர் 16ஆம் திகதி நாம் பெற்ற வெற்றியின் பின்னர் எமக்கு அதிகாரம் குறைந்த அரசாங்கம் ஒன்றை எம்மால் உருவாக்க முடிந்தது. நான் பதவிக்கு வரும்போது கடந்த அரசாங்கத்தின் மூலம் வரவுசெலவு திட்டமொன்று முன்வைக்கப்பட்டிருக்கவில்லை. நாட்டை இடைக்கால வரவுசெலவு திட்டமொன்றின் மூலமே முன்னெடுக்கப்பட்டிருந்தது. பல்வேறு அத்தியாவசிய கொடுப்பனவுகளுக்காக நிதி ஒதுக்கீடுகளுக்கு அனுமதி பெற்றிருக்கவில்லை. உரம், மருந்து வகைகள், உணவு வழங்குனர்கள் மற்றும் நிர்மாணத்துறையினருக்காக நிதி ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. நாம் இதற்காக இடைக்கால நிதி ஒதுக்கீட்டினை பெற்றுக்கொள்ள முயற்சி எடுத்தோம். அதற்கு எதிர்க்கட்சி ஒத்துழைப்பு வழங்கவில்லை. இந்நிலைமையின் கீழ் நான் உங்களுக்கு வாக்களித்த பொறுப்புக்களை நிறைவேற்ற முடியாமல் போனது. அதிகாரம் குறைந்த அரசாங்கத்தினால் இந்நிதிகளை பாராளுமன்றத்தில் முன்வைத்து அனுமதியை பெற முடியாது.

அதனால்தான் எனக்கு கிடைத்த முதல் சந்தர்ப்பத்திலேயே பாராளுமன்றத்தை கலைத்து உறுதியான புதிய அரசாங்கமொன்றை அமைப்பதற்காக தேர்தலை நடத்த உத்தேசித்தோம். பாராளுமன்றத்தை கலைத்ததுடன், அரசியலமைப்பின் மூலம் கிடைத்துள்ள அதிகாரத்திற்கமைய நான் இடைக்கால நிதி ஒதுக்கீட்டிற்கு அனுமதியளித்தேன்.  அதன்படி அத்தியாவசிய செலவுகளுக்காக நிதிக்கொடுப்பனவுகள் வழங்க ஆரம்பித்தோம். அதனாலேயேதான் தற்போதைய அசாதாரண சூழ்நிலைக்கு முகங்கொடுப்பதற்கும் எம்மால் முடியுமாகவிருந்தது.

அதனால் தேர்தல் ஒன்றை நடத்தி புதிய நிலையான அரசாங்கம் ஒன்றை அமைத்து புதிய வரவுசெலவு திட்டமொன்றை முன்வைத்து “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் நான் உங்களுக்கு வழங்கிய வாக்கின் பிரகாரம் நிவாரணங்களை வழங்குதல், தொழில் வழங்குதல், விவசாயத்தை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும். அதனால் அனுபவ முதிர்ச்சியுள்ள அரசியல்வாதியான, மக்கள் மனங்களை வெற்றிகொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் பலமான அரசாங்கத்தை உருவாக்குவதற்கு எம்மோடு ஒன்றிணையுமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன்.

இச்சந்தர்ப்பத்தில் எமது பொறுப்பானது அரசாங்கத்தை உரிய முறையில் நடாத்தி செல்வதாகும். எக்காரணம் கொண்டும் அரசாங்கத்தை செயலிழக்கச் செய்வதற்கு இடமளிக்க முடியாது நாம் தூரநோக்கிற்கு செயற்பட்டால் மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிப்படையும். தலைவர்கள் முழுமையான நம்பிக்கையோடு செயற்பட வேண்டும். மக்களுக்குள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தக்கூடாது.

நாம் இச்சந்தர்ப்பத்தில்  நாட்டினுள் வைரஸ் உள்நுழைதல் மற்றும் அதை நாட்டிற்குள் பரவுவதற்கு உள்ள சந்தர்ப்பத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக செய்ய வேண்டியவைகளை நாம் ஏற்கனவே அடையாளம் கண்டு முன்னெடுத்திருக்கின்றோம். அதற்காக அவசியமான அதிகாரங்களை செயலணிக்கு வழங்கியுள்ளோம். நாம் இதற்கு முன்னரும் சவால்களுக்கு முகங்கொடுத்து வெற்றிபெற்றுள்ளோம். நாம் சவால்களுக்கு முகங்கொடுக்கத் தயார். அதற்காக எமக்கு அவசியமானது ஒற்றுமையாகும் அதனால் இச்சந்தர்ப்பத்தில் பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன்.

இதற்கிடையில் மக்களின் அன்றாட வாழ்க்கையை இலகுபடுத்துவதற்காக  அவர்களின் நுகர்வு நிலையை உறுதி செய்வதற்கு நான் உத்தேசித்துள்ளேன். அரிசி வழங்கும் நடவடிக்கைகளை ஏற்கனவே  நிலை பெறச் செய்துள்ளோம். நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு தடையாக அமையாதவாறு அரச சேவைகள், வங்க நிதி நடவடிக்கைகள், போக்குவரத்து செயற்பாடுகளை குறைந்தளவிலானோரைக் கொண்டு முன்னெடுப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அனைத்து வியாபார நிலையங்களுக்கும் இன்று இரவு முதல் பருப்பு ஒரு கிலோவிற்கான அதிகபட்சம் 65 ரூபாவிற்கு விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோன்று டின் மீன் ஒன்று நூறு ரூபாவிற்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் பல நிவாரணங்களை எதிர்காலத்தில் வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் வணிக நடவடிக்கைகளுக்கு பாரிய பாரமாகக் காணப்படும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களினால் வழங்கப்பட்டுள்ள கடன்களை மீளப் பெற்றுக்கொள்ளல் 6 மாத காலத்திற்கு இடைநிறுத்துவதற்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். அதேபோன்று வங்கியினால் வழங்கப்படும் பணி மூலதனம் 4% வட்டிக்கு பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு எச்சந்தர்ப்பத்திலும் பங்கம் ஏற்படாதவாறு செயற்படுவேன் என உறுதியளிக்கின்றேன் உங்களதும் எனதும் நாடு இன்று பாதுகாப்பானது.               

தேசிய பொறுப்பாக கருதி கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்வதன் மூலம் நாடு என்ற வகையில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். உலகின் பல்வேறு முக்கிய நாடுகள் கட்டுப்படுத்த முடியாத வகையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு முகங்கொடுத்துள்ளனர். இந்த நிலையில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு அனைவரினதும் உதவி தேவையானதாகுமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

சீனாவின் வூஹான் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவுவது ஆரம்பமானது முதல் நாட்டுக்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் முடிந்திருப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் முறையாகவும் திட்டமிட்ட அடிப்படையிலும் செயற்பட்டதன் மூலம் நோய்த்தொற்றை தவிர்க்கக்கூடியதாக இருந்தது. தொடர்ந்தும் இந்த நிலைமையை பேணுவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நோய்த் தடுப்பு நிகழ்ச்சித்திட்டங்களுக்கும் ஏனைய நடவடிக்கைகளுக்கும் அனைத்து தரப்பினரதும் முழுமையான உதவி தேவையாகுமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய தீர்மானங்கள் சம்பந்தமாக இன்று (11) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற பல்வேறு துறைகளையும் சேர்ந்த நிபுணர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கையர் நேற்று (10) பிற்பகல் இனங்காணப்பட்டுள்ளார். 52 வயதுடைய அவர் சுற்றுலா வழிகாட்டியாக செயற்பட்டவராவார். இத்தாலி நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அவர் சேவையினை வழங்கியுள்ளார். அந்த நோயாளர் தற்போது நோய் தடுப்பு நடவடிக்கைக்கு உட்பட்டிருப்பதுடன், அவருக்குத் தேவையான சிகிச்சை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவர் ஹபரனை மற்றும் திக்வல்லை பிரதேசங்களில் இரண்டு குழுக்களுடன் பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.

அந்த இடங்கள் மற்றும் ஆட்கள் தொடர்பிலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டிருப்பதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இரண்டு நிலையங்களில் 685 பேர் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மிகவும் குறுகிய காலத்தில் அவர்களுக்கு வழங்க முடியுமான அதிகபட்ச வசதிகளை தயார்படுத்துவதற்கு இராணுவத்தினரும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்ததாக இராணுவ பணிக்குழாம் பிரதானி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார். ஹெந்தலை மற்றும் தியத்தலாவை மத்திய நிலையங்களும் நோய்த் தடுப்புக்காக தயார்படுத்தப்பட்டுள்ளன.

தென்கொரியா, இத்தாலி மற்றும் ஈரானில் இருந்து வருகை தரும் இலங்கையர்களும் வெளிநாட்டவர்களும் 14 நாட்கள் நோய்த் தடுப்புக்காக இந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். அவர்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளையும் ஏனைய வசதிகளையும் முடியுமானளவு பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் அனைவரும் நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கைகளுக்கு உதவுமாறு ஜனாதிபதி அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

நோய்த் தடுப்பின் பின்னர் அது பற்றிய சான்றிதழ் ஒன்றை வழங்கவும் கலந்துரையாடலின்போது தீர்மானிக்கப்பட்டது. வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் on arrival வீசா வசதியை மீண்டும் அறிவிக்கும் வரை இடை நிறுத்துமாறும் ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

வேறு நாடுகளிலிருந்து வருவோர் வீடுகளிலிருந்து நோய்த் தடுப்பில் ஈடுபடுவதன் மூலம் இதற்கு பங்களிக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் கேட்டுக்கொண்டார்.

குழுக்களாக வேறு நாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்வதை உடனடியாக நிறுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. பற்றாக்குறையின்றி மருந்து வகைகளை தயார்படுத்தி வைத்தல், பரிசோதனை நடவடிக்கைகளுக்கு தேவையான வசதிகளை முறைப்படுத்துமாறும் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி மற்றும் பல்வேறு துறைகளையும் சேர்ந்த நிபுணர்கள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

மொஹான் கருணாரத்ன

பிரதிப் பணிப்பாளர்

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2020.03.11

“இலங்கை ஒரு சிறிய நாடு, சிறிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. அதன் சனத்தொகையும் பெரியளவில் இல்லை. இத்தகையதொரு நாட்டை எப்படி அபிவிருத்தி செய்வது என்பது பற்றி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுங்கள்” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஆராய்ச்சித்துறையை சேர்ந்தவர்களிடம் தெரிவித்தார்.

இன்று உலகில் இருப்பது அறிவை அடிப்படையாகக்கொண்ட பொருளாதாரம் என்பதால் இலகுவில் பயிற்றுவிக்கக்கூடிய தொழிற்படையொன்று உள்ள எமது நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டியது அவர்களை அடிப்படையாகக்கொண்டே ஆகுமென்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஆராய்ச்சித் துறையை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடன் இன்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி அவர்களின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனம் தொடர்பாக அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவூட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்படும் சந்திப்பு தொடரில் நான்காவது சந்திப்பாக இச்சந்திப்பு இடம்பெற்றது. ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தேசிய விஞ்ஞான மன்றம், ஆதர் சி கிளார்க் தொழிநுட்ப விஞ்ஞான மையம் உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களின் தலைவர்கள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

“எமது அரசியல் கலாசாரத்தில் உள்ள வீழ்ச்சி நிலையை சரி செய்யும் நோக்குடனேயே மக்கள் அரசியலுக்கு வெளியில் உள்ள ஒருவரை ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்துள்ளனர். இதுதான் நான் வெற்றிகொள்ள வேண்டியுள்ள சவாலாகும். மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் அரச துறைக்கு பாரியதொரு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அரச நிறுவனங்கள் வினைத்திறனாக செயற்பட்டால், மக்களுக்குத் தேவையான சேவைகளை உரிய முறையில் நிறைவேற்றினால் எமக்கு பிரச்சினைகள் இருக்காது” என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

பொருளாதார, சமூக செயற்பாடுகளின் அனைத்து துறைகளினதும் முன்னேற்றத்திற்காக முறையான ஆராய்ச்சிகளை மேற்கொள்வது பொருளாதார அபிவிருத்திக்கு முக்கிய காரணியாகுமென்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், சமூகத்தின் கீழ் மட்டத்திற்கு உயர் வாழ்க்கைத்தரத்தை ஏற்படுத்திக் கொடுப்பது தனது முக்கிய எதிர்பார்ப்பாகுமென்றும் குறிப்பிட்டார். வறிய குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சம் பேருக்கு தொழில்வாய்ப்புகளை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் இந்த நோக்கத்துடனேயே மேற்கொள்ளப்பட்டதென்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

எமது நாடு ஒரு விவசாய நாடு எனினும் எமது விவசாயிகள் வறியவர்களாக உள்ளனர். இரண்டாவது, மூன்றாவது பரம்பறை விவசாயத்தை தெரிவு செய்வது. வேறு ஏதும் செய்ய முடியாதிருக்கும் சூழ்நிலையில் மட்டுமேயாகும். புதிய தலைமுறையை விவசாய துறைக்கு ஈர்ப்பதற்கு இத்துறைக்கு தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும். இந்தியா அவ்வாறு செய்து பெறுபேறுகளை பெற்றுக்கொண்டுள்ளது. விவசாயத்துறைக்கு புதிய தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்தி குறைந்த வருமானம் பெறும் மக்களை வறுமையிலிருந்து விடுவிப்பதற்கு ஆராய்ச்சியாளர்கள் முறைமைகளை அறிமுகப்படுத்த வேண்டுமென்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஆராய்ச்சி நிறுவனங்களின் பொறுப்புக்கள் குறித்து விளக்கிய ஜனாதிபதி அவர்கள், எமது மக்களுக்கு என்ன தேவை என்பது பற்றி சரியாக கண்டறிவது ஆராய்ச்சியாளர்களின் பொறுப்பாகுமெனக் குறிப்பிட்டார். விவசாயத் துறைக்கு போன்றே மீன்பிடிக் கைத்தொழிலுக்கும் புதிய முறைமைகளை அறிமுகப்படுத்துவதற்காக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இரசாயன உரப் பாவனை பற்றி பிரச்சினை இருந்தபோதும் எமக்கு இன்னும் சேதன பசளையை பயன்படுத்தக்கூடிய நிலை இல்லை. மீன்பிடி கைத்தொழிலை எடுத்துக்கொண்டால் மீன்கள் அதிகம் உள்ள இடங்களை கண்டறிவதற்கு ஆராய்ச்சிகளை பயன்படுத்த முடியும். ஆராய்ச்சிகளின் பெறுபேறுகளை இறுதியில் உற்பத்திகளாக  சமூகமயப்படுத்த வேண்டுமென்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

 ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2020.03.12

கொரோனா வைரஸ் பற்றி அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களின் பணிக்குழாமினருக்கு அறிவூட்டும் நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதலாவது நிகழ்ச்சி இன்று (12) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. நோயை அறிந்துகொள்ளுதல், அதிலிருந்து தவிர்த்துகொள்ளுதல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து வைத்தியர் தேசாந்த திசாநாயக்க பணிக்குழாமினருக்கு தெளிவுபடுத்தினார்.

இதற்கேற்ப அரச, தனியார்துறை நிறுவனங்கள் தொடர்ச்சியாக இந்நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளன.

நிறுவன ஊழியர்கள் தாம் பெற்றுக்கொள்ளும் அறிவை தமது குடும்ப உறுப்பினர்களுக்கும் சமூகத்திற்கும் வழங்குவார்களென எதிர்பார்க்கப்படுகின்றது. இவ் வைரஸ் தொற்று தேசிய பிரச்சினையாக மாறுவதை தவிர்ப்பதே இந்நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும்.

ஜனாதிபதி அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) திரு.கே.பி.எகொடவெல உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

“இலங்கை ஒரு சிறிய நாடு, சிறிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. அதன் சனத்தொகையும் பெரியளவில் இல்லை. இத்தகையதொரு நாட்டை எப்படி அபிவிருத்தி செய்வது என்பது பற்றி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுங்கள்” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஆராய்ச்சித்துறையை சேர்ந்தவர்களிடம் தெரிவித்தார்.

இன்று உலகில் இருப்பது அறிவை அடிப்படையாகக்கொண்ட பொருளாதாரம் என்பதால் இலகுவில் பயிற்றுவிக்கக்கூடிய தொழிற்படையொன்று உள்ள எமது நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டியது அவர்களை அடிப்படையாகக்கொண்டே ஆகுமென்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஆராய்ச்சித் துறையை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடன் இன்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி அவர்களின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனம் தொடர்பாக அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவூட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்படும் சந்திப்பு தொடரில் நான்காவது சந்திப்பாக இச்சந்திப்பு இடம்பெற்றது. ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தேசிய விஞ்ஞான மன்றம், ஆதர் சி கிளார்க் தொழிநுட்ப விஞ்ஞான மையம் உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களின் தலைவர்கள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

“எமது அரசியல் கலாசாரத்தில் உள்ள வீழ்ச்சி நிலையை சரி செய்யும் நோக்குடனேயே மக்கள் அரசியலுக்கு வெளியில் உள்ள ஒருவரை ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்துள்ளனர். இதுதான் நான் வெற்றிகொள்ள வேண்டியுள்ள சவாலாகும். மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் அரச துறைக்கு பாரியதொரு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அரச நிறுவனங்கள் வினைத்திறனாக செயற்பட்டால், மக்களுக்குத் தேவையான சேவைகளை உரிய முறையில் நிறைவேற்றினால் எமக்கு பிரச்சினைகள் இருக்காது” என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

பொருளாதார, சமூக செயற்பாடுகளின் அனைத்து துறைகளினதும் முன்னேற்றத்திற்காக முறையான ஆராய்ச்சிகளை மேற்கொள்வது பொருளாதார அபிவிருத்திக்கு முக்கிய காரணியாகுமென்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், சமூகத்தின் கீழ் மட்டத்திற்கு உயர் வாழ்க்கைத்தரத்தை ஏற்படுத்திக் கொடுப்பது தனது முக்கிய எதிர்பார்ப்பாகுமென்றும் குறிப்பிட்டார். வறிய குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சம் பேருக்கு தொழில்வாய்ப்புகளை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் இந்த நோக்கத்துடனேயே மேற்கொள்ளப்பட்டதென்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

எமது நாடு ஒரு விவசாய நாடு எனினும் எமது விவசாயிகள் வறியவர்களாக உள்ளனர். இரண்டாவது, மூன்றாவது பரம்பறை விவசாயத்தை தெரிவு செய்வது. வேறு ஏதும் செய்ய முடியாதிருக்கும் சூழ்நிலையில் மட்டுமேயாகும். புதிய தலைமுறையை விவசாய துறைக்கு ஈர்ப்பதற்கு இத்துறைக்கு தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும். இந்தியா அவ்வாறு செய்து பெறுபேறுகளை பெற்றுக்கொண்டுள்ளது. விவசாயத்துறைக்கு புதிய தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்தி குறைந்த வருமானம் பெறும் மக்களை வறுமையிலிருந்து விடுவிப்பதற்கு ஆராய்ச்சியாளர்கள் முறைமைகளை அறிமுகப்படுத்த வேண்டுமென்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஆராய்ச்சி நிறுவனங்களின் பொறுப்புக்கள் குறித்து விளக்கிய ஜனாதிபதி அவர்கள், எமது மக்களுக்கு என்ன தேவை என்பது பற்றி சரியாக கண்டறிவது ஆராய்ச்சியாளர்களின் பொறுப்பாகுமெனக் குறிப்பிட்டார். விவசாயத் துறைக்கு போன்றே மீன்பிடிக் கைத்தொழிலுக்கும் புதிய முறைமைகளை அறிமுகப்படுத்துவதற்காக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இரசாயன உரப் பாவனை பற்றி பிரச்சினை இருந்தபோதும் எமக்கு இன்னும் சேதன பசளையை பயன்படுத்தக்கூடிய நிலை இல்லை. மீன்பிடி கைத்தொழிலை எடுத்துக்கொண்டால் மீன்கள் அதிகம் உள்ள இடங்களை கண்டறிவதற்கு ஆராய்ச்சிகளை பயன்படுத்த முடியும். ஆராய்ச்சிகளின் பெறுபேறுகளை இறுதியில் உற்பத்திகளாக  சமூகமயப்படுத்த வேண்டுமென்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

தேசிய பொறுப்பாக கருதி கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்வதன் மூலம் நாடு என்ற வகையில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். உலகின் பல்வேறு முக்கிய நாடுகள் கட்டுப்படுத்த முடியாத வகையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு முகங்கொடுத்துள்ளனர். இந்த நிலையில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு அனைவரினதும் உதவி தேவையானதாகுமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

சீனாவின் வூஹான் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவுவது ஆரம்பமானது முதல் நாட்டுக்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் முடிந்திருப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் முறையாகவும் திட்டமிட்ட அடிப்படையிலும் செயற்பட்டதன் மூலம் நோய்த்தொற்றை தவிர்க்கக்கூடியதாக இருந்தது. தொடர்ந்தும் இந்த நிலைமையை பேணுவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நோய்த் தடுப்பு நிகழ்ச்சித்திட்டங்களுக்கும் ஏனைய நடவடிக்கைகளுக்கும் அனைத்து தரப்பினரதும் முழுமையான உதவி தேவையாகுமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய தீர்மானங்கள் சம்பந்தமாக இன்று (11) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற பல்வேறு துறைகளையும் சேர்ந்த நிபுணர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கையர் நேற்று (10) பிற்பகல் இனங்காணப்பட்டுள்ளார். 52 வயதுடைய அவர் சுற்றுலா வழிகாட்டியாக செயற்பட்டவராவார். இத்தாலி நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அவர் சேவையினை வழங்கியுள்ளார். அந்த நோயாளர் தற்போது நோய் தடுப்பு நடவடிக்கைக்கு உட்பட்டிருப்பதுடன், அவருக்குத் தேவையான சிகிச்சை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவர் ஹபரனை மற்றும் திக்வல்லை பிரதேசங்களில் இரண்டு குழுக்களுடன் பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.

அந்த இடங்கள் மற்றும் ஆட்கள் தொடர்பிலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டிருப்பதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இரண்டு நிலையங்களில் 685 பேர் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மிகவும் குறுகிய காலத்தில் அவர்களுக்கு வழங்க முடியுமான அதிகபட்ச வசதிகளை தயார்படுத்துவதற்கு இராணுவத்தினரும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்ததாக இராணுவ பணிக்குழாம் பிரதானி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார். ஹெந்தலை மற்றும் தியத்தலாவை மத்திய நிலையங்களும் நோய்த் தடுப்புக்காக தயார்படுத்தப்பட்டுள்ளன.

தென்கொரியா, இத்தாலி மற்றும் ஈரானில் இருந்து வருகை தரும் இலங்கையர்களும் வெளிநாட்டவர்களும் 14 நாட்கள் நோய்த் தடுப்புக்காக இந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். அவர்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளையும் ஏனைய வசதிகளையும் முடியுமானளவு பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் அனைவரும் நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கைகளுக்கு உதவுமாறு ஜனாதிபதி அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

நோய்த் தடுப்பின் பின்னர் அது பற்றிய சான்றிதழ் ஒன்றை வழங்கவும் கலந்துரையாடலின்போது தீர்மானிக்கப்பட்டது. வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் on arrival வீசா வசதியை மீண்டும் அறிவிக்கும் வரை இடை நிறுத்துமாறும் ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

வேறு நாடுகளிலிருந்து வருவோர் வீடுகளிலிருந்து நோய்த் தடுப்பில் ஈடுபடுவதன் மூலம் இதற்கு பங்களிக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் கேட்டுக்கொண்டார்.

குழுக்களாக வேறு நாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்வதை உடனடியாக நிறுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. பற்றாக்குறையின்றி மருந்து வகைகளை தயார்படுத்தி வைத்தல், பரிசோதனை நடவடிக்கைகளுக்கு தேவையான வசதிகளை முறைப்படுத்துமாறும் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி மற்றும் பல்வேறு துறைகளையும் சேர்ந்த நிபுணர்கள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

மொஹான் கருணாரத்ன

பிரதிப் பணிப்பாளர்

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2020.03.11

நாட்டின் பல்கலைக்கழகத்திற்கு அமைவாக அமைக்கப்படும் முதலாவது பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஹோமாகம - பிட்டிபனவில் எதிர்வரும் 16ஆம் திகதி திறக்கப்படவுள்ளது.

இதற்காக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இனோடெக் 2020 தொழில்நுட்ப கண்காட்சி ஹோமாகம – பிட்டிபன நகரில் இன்று(11) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்தக் கண்காட்சி எதிர்வரும் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலை 9.00 மணி தொடக்கம் இரவு 10 மணிவரை திறந்திருக்கும். இதனை இலவசமாக பார்வையிட முடியும்.

ஹோமாகம – பிட்டிபன மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கில் நனோ தொழில்நுட்ப நிறுவனம், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடம் உள்ளிட்டவற்றின் கண்காட்சி 300 ஏக்கர் நிலப்பரப்பில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. பாடசாலை ஆய்வு மற்றும் பல்கலைக்கழக மட்டத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புக்களை இந்த கண்காட்சியில் காணமுடியும்.

புதிய கண்டுபிடிப்புக்களை காட்சிப்படுத்தும் நோக்கில் 400 பாடசாலைகள், 15 பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆய்வுகள் மூலமும் தயாரிக்கப்பட்ட 1500 புதிய கண்டுபிடிப்புக்கள் இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தேசிய பொறுப்பாக கருதி கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்வதன் மூலம் நாடு என்ற வகையில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். உலகின் பல்வேறு முக்கிய நாடுகள் கட்டுப்படுத்த முடியாத வகையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு முகங்கொடுத்துள்ளனர். இந்த நிலையில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு அனைவரினதும் உதவி தேவையானதாகுமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

சீனாவின் வூஹான் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவுவது ஆரம்பமானது முதல் நாட்டுக்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் முடிந்திருப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் முறையாகவும் திட்டமிட்ட அடிப்படையிலும் செயற்பட்டதன் மூலம் நோய்த்தொற்றை தவிர்க்கக்கூடியதாக இருந்தது. தொடர்ந்தும் இந்த நிலைமையை பேணுவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நோய்த் தடுப்பு நிகழ்ச்சித்திட்டங்களுக்கும் ஏனைய நடவடிக்கைகளுக்கும் அனைத்து தரப்பினரதும் முழுமையான உதவி தேவையாகுமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய தீர்மானங்கள் சம்பந்தமாக இன்று (11) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற பல்வேறு துறைகளையும் சேர்ந்த நிபுணர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கையர் நேற்று (10) பிற்பகல் இனங்காணப்பட்டுள்ளார். 52 வயதுடைய அவர் சுற்றுலா வழிகாட்டியாக செயற்பட்டவராவார். இத்தாலி நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அவர் சேவையினை வழங்கியுள்ளார். அந்த நோயாளர் தற்போது நோய் தடுப்பு நடவடிக்கைக்கு உட்பட்டிருப்பதுடன், அவருக்குத் தேவையான சிகிச்சை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவர் ஹபரனை மற்றும் திக்வல்லை பிரதேசங்களில் இரண்டு குழுக்களுடன் பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.

அந்த இடங்கள் மற்றும் ஆட்கள் தொடர்பிலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டிருப்பதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இரண்டு நிலையங்களில் 685 பேர் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மிகவும் குறுகிய காலத்தில் அவர்களுக்கு வழங்க முடியுமான அதிகபட்ச வசதிகளை தயார்படுத்துவதற்கு இராணுவத்தினரும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்ததாக இராணுவ பணிக்குழாம் பிரதானி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார். ஹெந்தலை மற்றும் தியத்தலாவை மத்திய நிலையங்களும் நோய்த் தடுப்புக்காக தயார்படுத்தப்பட்டுள்ளன.

தென்கொரியா, இத்தாலி மற்றும் ஈரானில் இருந்து வருகை தரும் இலங்கையர்களும் வெளிநாட்டவர்களும் 14 நாட்கள் நோய்த் தடுப்புக்காக இந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். அவர்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளையும் ஏனைய வசதிகளையும் முடியுமானளவு பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் அனைவரும் நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கைகளுக்கு உதவுமாறு ஜனாதிபதி அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

நோய்த் தடுப்பின் பின்னர் அது பற்றிய சான்றிதழ் ஒன்றை வழங்கவும் கலந்துரையாடலின்போது தீர்மானிக்கப்பட்டது. வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் on arrival வீசா வசதியை மீண்டும் அறிவிக்கும் வரை இடை நிறுத்துமாறும் ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

வேறு நாடுகளிலிருந்து வருவோர் வீடுகளிலிருந்து நோய்த் தடுப்பில் ஈடுபடுவதன் மூலம் இதற்கு பங்களிக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் கேட்டுக்கொண்டார்.

குழுக்களாக வேறு நாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்வதை உடனடியாக நிறுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. பற்றாக்குறையின்றி மருந்து வகைகளை தயார்படுத்தி வைத்தல், பரிசோதனை நடவடிக்கைகளுக்கு தேவையான வசதிகளை முறைப்படுத்துமாறும் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி மற்றும் பல்வேறு துறைகளையும் சேர்ந்த நிபுணர்கள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

பழைய பாராளுமன்றமாகிய தற்போதைய ஜனாதிபதி அலுவலகத்தை மார்ச் 14 சனிக்கிழமை தொடக்கம் ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை பொதுமக்களுக்கு பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும். பார்வையிட வருபவர்களுக்கு புகைப்படம் எடுக்கவும் முடியும்.

பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) எனும் பெயருக்கு வேண்டுகோள் கடிதமொன்றை 011-2441685 என்ற பெக்ஸ் இலக்கத்திற்கு அனுப்பிவைப்பதன் ஊடாக அல்லது 011-2354354 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்வதன் மூலம் பார்வையிடுவதற்கான நேரத்தை ஒதுக்கிக்கொள்ளலாம்.

பழைய பாராளுமன்ற கட்டிடத் தொகுதியானது இலங்கை அரசியல் வரலாற்றில் தீர்மானமிக்க யுகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. பழைய கட்டிட நிர்மாண முறைமைகளில் ஐந்தில் ஒன்றான “அயானியானு முறைமைக்கு” ஏற்ப 82 ஆண்டுகளுக்கு முன் இது நிர்மாணிக்கப்பட்டது. இதன் முன் தோற்றம் எதென்சில் உள்ள எக்ரோபொலிஷ் மலையில் “எதினா” என்ற கிரேக்க தேவதைக்காக உருவாக்கப்பட்டுள்ள பிரதான தேவாலயமான ”பாதினன்” கட்டிடத் தொகுதிக்கு ஒத்ததாக காணப்படுகின்றது

ஹேபட் ஸ்டென்லி ஆளுநர் மூலம் 1930 ஜனவரி மாதம் 29ஆம் திகதி அரசியலமைப்பு சபையாக இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு, மறுசீரமைப்பு மற்றும் சட்டத்துறையில் பின்னர் இடம்பெற்ற பெயர் மாற்றத்துடன் இது அரச மந்திரிகள் சபை (1931 -1947) உப மந்திரி சபை (1947 – 1972) தேசிய அரசாங்க சபை (1972 – 1978) மற்றும் இலங்கை பாராளுமன்றம் (1978 – 1982) என்ற பெயர்களின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. பாராளுமன்றம் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர் இப்புராதன கட்டிடம் 1983 செப்டெம்பர் மாதம் 08ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகமாக பெயரிடப்பட்டது.

நுண்நிதி நிறுவனங்களின் அதிக வட்டி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை அதிலிருந்து விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்கமைவாக வழங்கப்படும் குறைந்த வட்டியிலான கடன் தொகையை 40 ஆயிரம் ரூபாவிலிருந்து 60 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

விசேடமாக வடக்கு மற்றும் வடமத்திய மாகாண மக்கள் எதிர்கொண்டுள்ள இந்த அழுத்தத்தில் இருந்து அவர்களை விடுவிப்பதற்காக கூட்டுறவு கிராமிய வங்கிகள் மற்றும் சிக்கன கடன் சங்கங்கள் மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

தற்போது வழங்கப்படும் இந்த குறைந்த வட்டியிலான கடன் தொகையின் எல்லையை அதிகரிக்குமாறு பல்வேறு தரப்புகளும் நிதியமைச்சிடம் வேண்டுகோள் விடுத்திருந்தன. 6 மாவட்ட செயலகங்கள் ஊடாக தற்போது நடைமுறைப்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டம் தொடர்பில் மாவட்ட செயலாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், மற்றும் பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளுக்கு செவிசாய்த்து இதனை மேலும் ஒழுங்குபடுத்துவதற்கு பிரதமர் தீர்மானித்துள்ளார். 

குறிப்பாக வடமாகாணத்திற்கென 292 மில்லியன் ரூபாவையும், வடமத்திய மாகாணத்திற்காக 250 மில்லியன் ரூபாவையும் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வடமத்திய மாகாணத்தில், நுண்நிதி கடன் நெருக்கடியினால் 14 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதியமைச்சர் என்ற வகையில் மேற்கொண்டுள்ள இந்தத் தீர்மானம் காரணமாக, மேலும் பெரும் எண்ணிக்கையான மக்கள் கடன் பெறுவதற்கு தகுதிபெறவுள்ளனர். இது தவிர வருடாந்த வட்டி வீதத்தை 14 சதவீதத்திலிருந்து 9 சதவீதம் வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த செயற்திட்டத்தின் முன்னேற்ற அறிக்கையை மூன்று மாதத்திற்கு ஒரு முறை திறைசேரிக்கு அனுப்புவதற்காக மாவட்ட நடவடிக்கைக் குழுவொன்றும் அமைக்கப்படும். கிராமிய மக்களை கடன் சுமையிலிருந்து விடுவிக்கும் பொறுப்பு இந்தக் குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் புகைப்படம் அல்லது கையினால் வரையப்பட்ட அவரின் உருவப்படங்களை பொது இடங்களில் காட்சிப்படுத்துவதனை தவிர்க்குமாறு குறித்த தரப்பினரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் வரையப்பட்ட உருவப்படம், ஓவியங்கள் (Portrait) மற்றும் புகைப்படங்களை கண்காணிப்பின்றி பாதையோரங்களில், பொது விழாக்கள் நடைபெறும் இடங்களில் காட்சிப்படுத்தப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

தமது உருவத்தை வரையும் நபர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஜனாதிபதி, அதேவேளை அவ்வாறு செய்வதினை தவிர்த்துக்கொள்ளுமாறு குறித்த தரப்பினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தனிநபர் பிரபல்யத்தை தான் விரும்பவில்லையென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம்  கையளிக்கப்பட்டது. 

இதுதொடர்பான நிகழ்வு இன்று (02) ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்றது முதலாவது இடைக்கால அறிக்கை 2019 டிசம்பர் 20ஆம் திகதி கையளிக்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்தல் மற்றும் தேவையான நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் 2019 செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி இவ் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மேலதிக விசாரணைகளை தொடர்ந்து தயாரிக்கப்படும்.

ஆணைக்குழுவின் தலைவர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஜனக் டி சில்வா ஏனைய உறுப்பினர்களான மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர்களான நிஹால் சுனில் ராஜபக்ஷ மற்றும் ஏ.எல்.பந்துலகுமார அத்தபத்து, நீதி அமைச்சின் முன்னாள் செயலாளர் டப்ளியு.எம்.எம்.ஆர்.அதிகாரி, ஆணைக்குழுவின் செயலாளர் எச்.எம்.பி.பீ.ஹேரத் ஆகியோரும் இங்கு பிரசன்னமாகியிருந்தனர்.

Latest News right

நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் மகுதாராம ஆலயம் மியன்மார் -இலங்கை சமய உறவின் சின்னம் - அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன

ஆக 22, 2024
Default Image
நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் மகுதாராம ஆலயம் மியன்மார் -இலங்கை சமய, கலாசார மற்றும்…

இறுதி ரந்தோலி ஊர்வலத்தை பார்வையிட ஜனாதிபதி இணைந்து கொண்டார்

ஆக 20, 2024
Default Image
கண்டி வரலாற்று சிறப்பு மிக்க தலதா மாளிகையில் வருடாந்த எசல பெரஹரா திருவிழாவின் இறுதி…

அரச ஊழியர்களின் பாரிய சம்பள அதிகரிப்புக்கு எதிரான பிரச்சாரங்களுக்கு அரசாங்கம் பதிலடி கொடுக்கிறது - அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன

ஆக 18, 2024
Default Image
“அனைத்து அரசு ஊழியர்களுக்கும் மூன்றாண்டுகளுக்கு 25000 உதவித்தொகை. குறைந்தபட்சம் சிறு…

ஊடக விதிமுறைகள் சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும் – பிரதித் தேர்தல் ஆணையாளர்

ஆக 09, 2024
Default Image
தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிட்டுள்ள ஊடக வழிகாட்டுதல்கள் சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும்…

தேர்தல் காரணமாக IMF கடன் ஒப்பந்தத்தில் மாற்றம் இல்லை - அமைச்சரவை பேச்சாளர்

ஆக 06, 2024
Default Image
தேர்தல் அல்லது ஏனைய விடயங்கள் காரணமாக 2027 ஆம் ஆண்டு வரையில் சர்வதேச நாணய நிதியத்துடன்…

மறைந்த வணக்கத்துக்குரிய கலபொட ஞானிஸ்ஸர நாயக்கருக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்.

ஆக 05, 2024
Default Image
சிறந்த சங்கப் பிதாமகராக இருந்து காலமான கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையின் தலைவர்…

மறைந்த வணக்கத்துக்குரிய கலபொட ஞானிஸ்ஸர நாயக்கருக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்.

ஆக 05, 2024
Default Image
மறைந்த கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையின் தலைவர் கலபொட ஞானிஸ்ஸர நாயக்கருக்கு…