சமீபத்திய செய்தி

கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை உடனடியாக ஒழிப்பதற்கு தேவையான வைத்திய நிபுணர்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கும் பல்வேறு துறைகளை சேர்ந்த வைத்திய நிபுணர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று (09) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்ப்பதற்கு அரசாங்கமும் பாதுகாப்புத் துறையும் சுகாதார துறையும் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் குறித்து வரிவாக கலந்துரையாடப்பட்டது.

தற்போது வைரஸ் தொற்றுடையவர்களுடன் நெருங்கிப் பழகிய குழுக்கள் அதற்கப்பாலும் இரு கட்டங்கள் முன்னோக்கி தொடர்புகளை கொண்டிருந்தவர்களை இனம்கண்டு பரிசோதிக்க வேண்டியதன் அவசியத்தை வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.

வைரஸை இனம்காண்பதற்கு தேவையான பரிசோதனை கருவி தொகுதி போதுமானளவு இருந்த போதும் எந்தவொரு நிலைமைக்கும் முகம்கொடுக்கக்கூடிய வகையில் அவற்றை தருவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

உலகின் ஏனைய நாடுகளை பார்க்கிலும் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி அவர்கள் முன்னெடுத்த நோய்த்தடுப்பு நிகழ்ச்சித்திட்டங்களை வைத்திய நிபுணர்கள் பாராட்டினர். அந்த நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்தும் பலப்படுத்துவது வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு மிகவும் முக்கியமானதாகும் என்றும் வைத்தியர்கள் குறிப்பிட்டனர்.

வைரஸ் பரவாத பிரதேசங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வைத்தியர்கள் வலியுறுத்தினர். அப்பிரதேசங்களுக்கு வைரஸ் பரவியுள்ள பிரதேசங்களில் இருந்த செல்வதை நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

அனைவரும் முடியுமானளவு வீடுகளில் இருப்பது முதலாவது நடவடிக்கை என்ற வகையில் மிகவும் முக்கியமானது என வைத்தியர்கள் குறிப்பிட்டனர். வீட்டிலிருந்து வெளியேறும் போது முகக் கவசங்களை அணிதல், முகத்தை தொடுவதை தவிர்த்தல், எப்போதும் ஒரு மீற்றர் தூரத்தை பேணுதல் மற்றும் கைகளை நன்றாக கழுவிக்கொள்தல் ஐந்து முக்கிய பாதுகாப்பு நடைமுறைகளாகும்.

நிபுணர்கள், பல்கலைக்கழகங்கள், தொழிநுட்ப நிறுவனங்கள், தனிப்பட்ட குழுக்கள் கொவிட் 19 தொடர்பான பல்வேறு கண்டுபிடிப்புகளை மேற்கொண்டுள்ளனர். அக்கண்டுபிடிப்புகளை உடனடியாக துறைசார்ந்த மட்டத்தில் ஆராய்ச்சிக்கு உட்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

கொரோனா வைரஸ் விரைவாக தொற்றக்கூடியவர்கள் குறித்தும், அவர்களை அதிலிருந்து விடுவிப்பதற்கு பின்பற்றப்படவேண்டிய முறைமைகள் என்னவென்றும் ஜனாதிபதி அவர்கள் வினவினார்.

நீரிழிவு, சுவாசம் மற்றும் இருதயம் சம்பந்தமான நோய்கள் உள்ளவர்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்பதுடன், அவர்கள் உரிய மருந்துகளை உரிய முறையில் எடுக்க வேண்டும் என்றும் வைத்தியர்கள் குறிப்பிட்டனர். அதேபோன்று புகைப்பதை முற்றாக தவிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். அனைவரும் எல்லா சந்தர்ப்பங்களிலும் தொண்டைப் பகுதியை ஈரலிப்பாக வைத்திருப்பதற்காக நீராகாரங்களை பருக வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர, ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா, பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன, முன்னாள் ஆளுநர் சீதா அரம்பேபொல, சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க, வைத்திய நிபணர்களான வஜிர சேனாரத்ன, ஆனந்த விஜேவிக்ரம, பேராசிரியர் சரத் ஜயசிங்க, பேராசிரியர் அர்ஜுன டி சில்வா, வைத்தியர் எம்.சீ. வீரசிங்க, பேராசிரியர் நீலக மலவிகே, பிரசாத் கடுலந்த, பேராசிரியர் வஜிர திஸாநாயக, பேராசிரியர் ரங்ஜனீ கமகே, குமுதுனீ ரணதுங்க, அமித பெர்னாண்டோ, இந்திக லெனரோல் மற்றும் ஜுட் சமன்த ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

கொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் இன்று காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் பிற்பகல் 02.00 மணிக்கு மீண்டும் அமுல் படுத்தப்பட்டது. இம்மாவட்டங்களில் மீண்டும் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 09 வியாழன் காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டு அன்றைய தினம் பிற்பகல் 04 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும்.

இன்று ஏப்ரல் 06 ஆம் திகதி திங்கள் முதல் 10 ஆம் திகதி வெள்ளி வரையான வேலை நாட்கள் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கு வீடுகளில் இருந்து வேலை செய்யும் காலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் வேறு பொருட்களை வீடுகளில் இருந்தே பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தொடர்ச்சியாக வழங்களை மேற்கொள்ள அரசாங்கம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

எந்த மாவட்டத்திலாயினும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் சிறு தேயிலை தோட்டங்கள், ஏற்றுமதி பயிர்கள் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட மக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு உதவும் நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே என்பதால் அந்த நடைமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் பொறுப்புடன் பின்பற்றுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

கொழும்பு, கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாகவே கருதப்படும். எவரும் இந்த கிராமங்களுக்கு உள்வருவதோ அல்லது வெளியேறுவதோ மறு அறிவித்தல் வரை முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து அரசாங்கத்திற்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையே கலந்துரையாடலொன்று இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினதும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினதும் தலைமையில் இடம்பெற்றது.

கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை தவிர்ப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் திட்டமிட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து ஜனாதிபதி அவர்கள் விரிவாக விளக்கினார்.

கொரோனா வைரஸ் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது முதல் அரசாங்கம் என்ற வகையில் பொறுப்புடன் செயற்பட்ட விதம் குறித்து ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். ஏனைய நாடுகளையும் விஞ்சும் வகையில் மக்களின் பாதுகாப்புக்காக உடனடி நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொண்டதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தது முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அன்றாட நடவடிக்கைகளை பேணிய வகையில் மக்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். இதன் காரணமாக கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு முடியுமானது. சுகாதாரத் துறை, பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அரச மற்றும் தனியார் பொறிமுறைகளுடன் நிபுணர்களின் ஆலோசனைகளின் பிரகாரம் எப்போதும் செயற்பட்டதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகள், அவர்களுடன் பழகியவர்களை இனம்கண்டு வைத்திய நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் பரிசோதனைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டது. அதன் மூலம் தொற்றுக்குள்ளானவர்களை ஏலவே அறிந்துகொள்வதற்கு முடியுமாக இருந்ததாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

40 மத்திய நிலையங்களில் நோய்த்தடுப்புக்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. நோயாளிகள் இனம்காணப்பட்ட பிரதேசங்களில் பொதுச் சுகாதார அதிகாரிகளின் உதவியுடன் வைரஸ் பரவுவதை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நோயாளிகளை கண்காணித்தல் மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளுக்கு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் வழங்கி வரும் ஒத்துழைப்புகளுக்கு ஜனாதிபதி பாராட்டு தெரிவித்தார்.

அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகளுக்கு ஜக்கிய மக்கள் சக்தியினர் தமது பாராட்டுக்களை தெரிவித்ததுடன், அரசியல் மற்றும் வேறு பேதங்களின்றி நிகழ்ச்சித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று இரு தரப்பினரும் கருத்துத் தெரிவித்தனர்.

அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்களில் எவருக்கேனும் அநீதிகள் அல்லது குறைபாடுகள் ஏற்பட்டிருக்குமானால் அது தொடர்பில் உடனடியாக செயற்படுவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

நாளாந்த சம்பள அடிப்படையில் நிர்மாணத் துறை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்வதற்காக வருகை தந்து கிராமங்களுக்கு செல்ல முடியாதிருக்கின்றவர்களுக்கு குறித்த தொழில் வழங்குனர்களுக்கு கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அவர்களும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் கேட்டுக்கொண்டனர்.

தொற்றாத நோய்கள் உள்ளிட்ட சுகாதார சேவைகளுக்கு தேவையான பல்வேறு மருந்துப் பொருட்கள் அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் இந்தியாவிலிருந்து நாளை (07) நாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளது.

முழு உலகமும் முகம்கொடுத்துள்ள பொருளாதார, சமூக நிலைமைகளை கருத்திற் கொண்டு எமது நாட்டுக்கு பொருத்தமான பொருளாதார முறைமையொன்று தற்போது திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் விளக்கினார். வீழ்ச்சியடைந்துள்ள ஆடை மற்றும் சுற்றுலா கைத்தொழிலை கட்டியெழுப்புவது சம்பந்தமாக நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்றுவருவதாகவும், சந்தர்ப்பம் கிடைத்தவுடன் அவர்களின் ஆலோசனையின் பேரில் அரசாங்கம் செற்படும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

சமூர்த்தி உதவி பெறுபவர்களுக்கு மேலதிகமாக முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளிகள் உள்ளிட்ட 7 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவு எவ்வித பேதமுமின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எவருக்கேனும் அது கிடைக்காவிடின் கிராம சேவகரின் ஊடாக அதனைப் பெற்றுக்கொள்ள வழி செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

சுகாதார மற்றும் பல்வேறு துறைகளின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் அரசாங்கமும் ஐக்கிய மக்கள் சக்தியினரும் கவனம் செலுத்தினர்.

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர்களான தினேஷ் குணவர்த்தன, நிமல் சறிபால டி சில்வா, விமல் வீரவங்ச, டலஸ் அழகப்பெரும, பந்துல குணவர்த்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரும் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநித்துவப்படுத்தி அதன் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி ஜயசுந்தர ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

கொவிட் 19 தொற்றுபரவலுடன்உருவாகியுள்ளபொருளாதாரநிலைமைகள்குறித்துமீளாய்வுசெய்வதற்காகஜனாதிபதிகோட்டாபயராஜபக்ஷஅவர்கள்நேற்று (31) இலங்கைமத்தியவங்கியின்முக்கியஅதிகாரிகளைசந்தித்தார்.

மத்தியவங்கியின்ஆளுநர்பிரதிஆளுநர்கள்வங்கிநடவடிக்கைகளைகண்காணிப்பதற்குபொறுப்பானஉதவிஆளுநர்மற்றும்தொடர்பாடல்தொழிநுட்பபணிப்பாளர்ஆகியோர்இச்சந்திப்பில்கலந்துகொண்டனர்.

கொவிட் 19 பரவலுக்குமத்தியில்நிதிதிரவத்தன்மையைபேணுதல்மற்றும்நிதிவசதிகளுக்கானஏற்பாடுகள்குறித்தவழிநடத்தல்முகாமைத்துவத்திற்காகஇலங்கைமத்தியவங்கிமுன்னெடுத்துள்ளநடவடிக்கைகள்குறித்துஇதன்போதுஆராயப்பட்டது.

அந்நியச்செலாவணிவரவுசெலவுத்திட்டம்மற்றும்வெளிகையிருப்புமுகாமைத்துவத்துடன்தொடர்புடையவிடயங்கள்குறித்துகவனம்செலுத்தியஜனாதிபதிஅவர்கள்இலங்கையின்பிணைமுறிகளில்முதலீடுசெய்வோரிடம்அதிகபட்சநம்பிக்கையைகட்டியெழுப்புவதற்கானநடவடிக்கைகளைஎடுக்குமாறுவங்கிஅதிகாரிகளிடம்குறிப்பிட்டார்.

அனைத்துவங்கிகளையும்திறந்துவைக்குமாறுமத்தியவங்கிக்குஅறிவித்தஜனாதிபதிஅவர்கள்கொவிட் 19 பிரச்சினைக்குபின்னரானகாலத்திற்குறியபொருளாதாரமூலோபாயங்களைவகுக்குமாறும்பணிப்புரைவழங்கினார்.

திறைசேறிசெயலாளரும்கலந்துரையாடலில்பங்குபற்றினார்.

மொஹான் சமரநாயக்க

பணிப்பாளர் நாயகம்

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2020.04.0

சுற்றுலாத்துறைஏற்றுமதிவெளிநாடுகளில்தொழில்செய்கின்றவர்களிடமிருந்துகிடைக்கும்வருமானம்மற்றும்கடன்பங்குச்சந்தையில்வெளிநாட்டுமுதலீடுகளில்தங்கியுள்ளபொருளாதாரங்களைகொண்டுள்ளஇலங்கைபோன்றஇடர்நிலைக்குஉள்ளாகியுள்ளஅபிவிருத்தியடைந்துவரும்நாடுகளுக்குஉதவுமாறுஜனாதிபதிகோட்டாபயராஜபக்ஷஅவர்கள்சர்வதேசநிதிநிறுவனங்களிடம்கேட்டுக்கொண்டுள்ளார்.

உலகசுகாதாரநிறுவனத்தின்பணிப்பாளர்நாயகத்துடன்தொலைபேசியில்உரையாடியஜனாதிபதிஅவர்கள்கடன்தவணைஉரிமையைபெற்றுக்கொள்வதற்குசர்வதேசநாணயநிதியத்தின்முகாமைத்துவபணிப்பாளர்உலகவங்கியின்தலைவர்ஆசியஅபிவிருத்திவங்கியின்தலைவர்மற்றும்இருதரப்புகடன்வழங்கும்முன்னணிநாடுகளின்தலைவர்களின்இணக்கத்தைபெற்றுக்கொள்ளுமாறுகுறிப்பிட்டார்.

twetter who

 
 

புதிய கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் மற்றும் இடர் நிலைமைக்குள்ளான குடும்பங்கள் மற்றும் நபர்களுக்கு மேலும் பல பண மற்றும் பொருள் நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளன.

ஒரே தடவையில் வழங்கப்படும் கொடுப்;பனவாக 5000ரூபாவை வழங்குவதன் மூலம் அவர்கள் முகம்கொடுத்துள்ள பொருளாதார கஷ்டங்கள் தணியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அத்தியாவசிய சேவைகளை வழமையான ஒழுங்கில் பேணுவதற்காக தாபிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணிக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி அவர்களினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிவாரணங்கள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்தும் விதம் குறித்து விளக்கும் சுற்றுநிருபமொன்று ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி. ஜயசுந்தர அவர்களின் கையொப்பத்துடன் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதுநிதிபொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சு மற்றும் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் அமைச்சுக்களின் செயலாளர்கள்அனைத்து மாவட்டபிரதேச செயலாளர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. புதிய கொரோனா வைரஸை இலங்கையிலிருந்து ஒழிக்கும் முன்னுரிமை நிகழ்ச்சித்திட்டம் நிறைவுற்றதாக அறிவிக்கும் வரை இந்த நிவாரணங்கள் தொடர்ச்சியாக அமுலில் இருக்கும்.

புதிய கொரோனா வைரஸை இலங்கையிலிருந்து ஒழிப்பதற்கான முன்னுரிமை நிகழ்ச்சித்திட்டத்;தின் அத்தியாவசிய அம்சமாக இருப்பது அனைத்து மக்களினதும் இயல்பு வாழ்க்கையை தொடர்ச்சியாக பேணுவதாகும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் தனது சுற்றுநிருத்தில் குறிப்பிட்டுள்ளார். வைரஸ் தொற்று பரவுவதற்கு மத்தியில் பாதிக்கப்பட்டுள்ள நாளாந்த பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த மக்கள் பிரிவினரை பிரதான கட்டமைப்புக்குள் இணைத்துக்கொள்வது அவசியம் செய்ய வேண்டிய ஒன்றாகும் என ஜனாதிபதி செயலணியினால் இனம் காணப்பட்டுள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களை நிவாரண விலைக்கு வீடுகளுக்கு வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்துமாறு ஜனாதிபதி அவர்கள் தனக்கு பணித்திருப்பதாக கலாநிதி ஜயசுந்தர அவர்கள் தனது சுற்றுநிருபத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் இன்று வெளியிட்டுள்ள சுற்றுநிருபத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள நிவாரணங்கள் மற்றும் அவற்றை பெற்றுக்கொள்வதற்கு தகைமையுள்ளவர்கள் கீழ்வருமாறு,

  1. முதியோருக்கான கொடுப்பனவு பெறும் 416764பேருக்கும் முதியவர்களாக இனம்காணப்பட்டஆவணப்படுத்தப்பட்டுள்ள 142345பேருக்கும் ரூபா 5000கொடுப்பனவு வழங்கப்படும்.
  2. அங்கவீனர்களுக்கான கொடுப்பனவு பெறும் 84071பேருக்கும் அங்கவீனர்கள் என அடையாளம் காணப்பட்டுஆவணப்படுத்தப்பட்டுள்ள 35229பேருக்கும் ரூபா 5000கொடுப்பனவு உரித்தாகும்.
  3. விவசாய காப்புறுதி முறைமையின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ள 160675விவசாயிகளுக்கும் ரூபா 5000கொடுப்பனவு உரித்தாகும்.
  4. சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவு பெறும் 25320பேருக்கும்மேலும் ஆவணப்படுத்தப்பட்டுள்ள 13850பேருக்கும் ரூபா 5000கொடுப்பனவு வழங்கப்படும்.
  5. கர்ப்பிணி தாய்மார் மற்றும் மந்த போசனையுடைய பிள்ளைகளுக்கான திரிபோஷ மற்றும் வேறு போசனை பொருட்கள் வீடுகளுக்கு நேரடியாக வழங்கப்படும்.
  6. சமூர்த்தி கொடுப்பனவு பெறும் 1798655பேருக்கும் மேலும் ஆவணப்படுத்தப்பட்டுள்ள 600339குடும்பங்களுக்கும் ரூபா 5000கொடுப்பனவு சமூர்த்தி வங்கிகள்சமூர்த்தி அதிகார சபையின் ஊடாக வழங்கப்படும்.
  7. ஓய்வுபெற்ற அரச ஊழியர்கள் 645179பேருக்கு ஓய்வூதிய சம்பளம் வளங்கப்படும்.
  8. 1500000அரச ஊழியர்களுக்கு ஏப்ரல் மாத சம்பளம் வழங்கப்படுவதுடன் சம்பளத்திலிருந்து கடன் தொகை அரவிடப்படுவது மீண்டும் அறிவிக்கும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
  9. முச்சக்கர வண்டிகள்ட்ரக் வண்டிகள்பாடசாலை பஸ் மற்றும் வேன்கள் மற்றும் சுயதொழிலுக்காக பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கில்கள் உரிமையாளர்கள் உள்ளிட்ட சுய தொழில்களில் ஈடுபட்டுள்ள 1500000பேருக்கு வரி தவணைக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
  10. உருவாகியுள்ள நிலைமைகளுக்கு மத்தியில் பொருளாதார அசௌகரியங்கள் காரணமாக ஊழியர்களுக்கான சம்பளம் வழங்க முடியாத தனியார் வர்த்தகங்களுக்கும் நிவாரணங்கள் உரித்தாகும்.

மேற்படி வகைப்படுத்தலுக்கு உட்படாதஆனால் இடர் நிலைமைக்கு முகம்கொடுத்துள்ளதாக இனம் காணப்படுபவர்களுக்கும் சமமான நிவாரணங்கள் வழங்கப்படும். அதனை பொதுச் சுகாதார பரிசோதகர்கள்சமூக சேவை அபிவிருத்திசமூர்த்தி அபிவிருத்திவிவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி மற்றும் குடும்ப சுகாதார சேவைகள் அதிகாரிகளினதும் மாவட்ட செயலாளர்களினதும் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்படும்.

மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள் அத்தியாவசிய பொருட்களை ஆட்களுக்கு நேரடியாக பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியின் செயலாளரின் சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறையில் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும் வகையில் இடைத்தரகர்கள் இன்றி சதொசகூட்டுறவு விற்பனை நிலையங்கள் மற்றும் தனியார் விற்பனை வலையமைப்புகளை பங்குதாரர்களாக்கி கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று குறித்த அதிகாரிகள் ஜனாதிபதி பணிக்குழாமின் அறிவுறுத்தல்கள்வழிகாட்டல்களின் கீழ் செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

மொஹான் சமரநாயக்க

பணிப்பாளர் நாயகம்

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2020.03.30

உணவுப்பொருட்களை வாகளங்களில் எடுத்துச்செல்லும் போது ஏற்படும் சிரமங்களையும் இடையூறுகளையும் தடுக்குமாறு  பொலிஸ்மா அதிபருக்குப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
 
விவசாயிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படும் உணவுப் பொருட்கள் சிரமங்களின்றிச் சந்தையைச் சென்றடைவதன் மூலமாக, பாவனையாளர்களுக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் ஒழுங்காகவும் தடைகளின்றி சென்றடைய அடைய வேண்டுமென்பதை உறுதிப்படுத்துவதற்காகவே, பொலிஸ்மா அதிபருக்கு இப்பணிப்புரையை பிரதமர் விடுத்துள்ளார்.

இப்பணிப்புரையைப் பிரதமர் வழங்கும் போது, தற்போது உணவுப்பொருட்களைக் கொண்டு செல்லும் பொறிமுறையில் உள்ள சிரமங்கள், இடையூறுகள் தொடர்பாக கிடைக்கப்பட்ட தகவல்களைக் கருத்திற்கொண்டிருந்தார்.

அதேபோல், கொரோனாவைரஸ் (கொவிட்-19) தொற்றுப்பரவலை கவனக்குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்த பிரதமர், இத்தொற்றானது உலகம் முழுவதும் பேரழிவுமிகுந்த தொற்றாக வேகமாகப் பரவிவரும் நிலையில், சுகாதார அறிவுரைகளைப் பின்பற்றுவதன் மூலமாக, இத்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுவரும் நிகழ்ச்சித்திட்டத்துக்கு உதவி வழங்குமாறும் பொதுமக்களிடம் கோரினார்.

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்காக 'இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்' இணைய முகப்பினை ஐ.சி.டி.ஏ. உடன் இணைந்து வெளிநாட்டு உறவுகள் அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது

இதுதொடர்பாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு

ஊடக வெளியீடு

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் நலனுக்காக இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.சி.டி.ஏ) மற்றும் வெளிநாட்டு உறவுகள் அமைச்சு ஆகியன இணைந்து உருவாக்கிய 'இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்' இணைய முகப்பு இன்று (26 மார்ச் 2020) வெளிநாட்டு உறவுகள் அமைச்சில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கான வலைத்தள இணைப்பினை அமைச்சின் வலைத்தளப் பக்கமான www.mfa.gov.lk   முகவரியிலும், மற்றும் www.contactsrilanka.mfa.gov.lk என்ற இணையத்தளத்திலும் அணுகிக் கொள்ளலாம்.

 கோவிட் - 19 நோய் நிலைமையை எதிர்த்துப் போராடுவதற்காகவும், விரைவான மற்றும் திறமையான சேவையை வழங்குவதற்காக டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்காகவும் அனைத்து அரசாங்கப் பங்குதாரர்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளுக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் இந்த இணைய முகப்பு நிறுவப்பட்டது.

கோவிட் - 19 போன்ற அவசர நிலைமைகளில் அணுகிக் கொள்வதற்கும், உதவுவதற்கும் இலங்கை அரசாங்கத்தை அனுமதிக்கும் முகமாக, இந்த இணைய முகப்பின் அடிப்படைச் செயற்பாடுகளில் தானாக முன்வந்து பதிவு செய்து கொள்ளுமாறு வெளிநாட்டில் வாழும் அனைத்து இலங்கையர்களும் அழைக்கப்படுகின்றார்கள். குறித்த நேரத்திற்கான உண்மையான தரவுகளின் அடிப்படையில் விரைவான நடவடிக்கைகளை அமைச்சு முன்னெடுப்பதற்கு இந்தத் தளம் உதவியாக அமையும். வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் ஒற்றை மையப்படுத்தப்பட்ட முனைப்பின் மூலமாக அரசாங்க சேவைகளை அதிகமாக அணுகிக் கொள்வதனை ஊக்குவித்து, வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் அரசாங்கப் பங்குதாரர்களிடையே தொடர்புகளை மேற்கொள்வதற்கும் இந்தத் திறந்த அணுகல் தளம் மேலும் வழியமைப்பதாக அமையும். மேலும், வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் வலையமைப்புடன் இந்த இணைய முகப்பு இணைத்து வைக்கும்.

நீண்ட காலத்திற்கு விரிவுபடுத்தப்படும் இந்த இணைய முகப்பு, அதிகாரபூர்வ தகவல் ஆதாரமாக செயற்பட்டு, அரசாங்கத்தால் வழங்கப்படும் பரந்தளவிலான டிஜிட்டல் சேவைகளை வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் பெற்றுக் கொள்வதற்கு வசதிகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காகவும், சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து அவசரமான காலங்களில் இணையவழி உதவி மையமாக செயற்படுவதற்காகவும் பிரத்தியேக அதிகாரிகள் குழுவொன்று ஏற்கனவே வெளிநாட்டு உறவுகள் அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக் கோரிக்கைகளின் எண்ணிக்கைக்கு அமைவாக, நாடுகளின் மூலமாக பதிவு செய்யும் முறைமையானது, நாட்டிலிருந்து வெளியேறுதல் போன்ற முக்கியமான சூழ்நிலைகளின் போது உறுதியான கொள்கை முடிவுகளை அமைச்சு முன்மொழிவதற்கு அனுமதிக்கும்.

இலகுவான வசதிக்காக, பொதுவான கேள்விகளுக்கான வழிகாட்டியாக செயற்படக்கூடிய, அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளின் பட்டியலையும் இந்த இணைய முகப்பு கொண்டுள்ளது. பயனருக்கு நட்புறவான இந்தத் தளத்தை இணையம் வாயிலாகவும், எந்தவொரு உலாவி அல்லது இடைமுகத்திலும் எளிதாக அடைய முடிவதுடன், பதிவு செய்யப்பட்ட அனைத்து பயனர்களும் கையடக்கத் தொலைபேசியொன்றினூடாகவும் கூட கோரிக்கையொன்றை முன்வைக்க அல்லது உதவிகளைக் கோர முடியும்.

இந்த இணைய முகப்பினூடாக வழங்கப்பட்ட தரவுகள் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் தனியுரிமையை உறுதி செய்வதற்காக பாதுகாக்கப்படுவதுடன், பயனர்களின் அனுமதியின்றி பகிரப்பட மாட்டாது.

இணைய முகப்பின் அம்சங்களை படிமுறைகளாக விரிவாக்குவதற்கும், 'இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்' இணைய முகப்பினூடாக வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கான விரிவான இணையவழியான சேவைத் தளத்தை உருவாக்குவதற்கும் வெளிநாட்டு உறவுகள் அமைச்சுடன் இணைந்து ஐ.சி.டி.ஏ. நெருக்கமாக செயற்படும்

 

தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிக்கும் மத்திய நிலையங்களில் தங்கியிருந்த 144 பேர் தமது சொந்த இடங்களுக்கு திரும்பியிருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினென் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த 14 நாட்களில் தனிமைப்படுத்தப்பட்டுஇ கண்காணிக்கப்பட்ட 163 பேரும் வீடு திரும்பியுள்ளார்கள். நாடளாவிய ரீதியில் உள்ள 46 தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களில் மூவாயிரத்து 86 பேர் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மெலும் கூறினார்.;.

மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்;க்கும் வகையில் வீடுகளுக்கே அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிக்கும் விசேட நிகழ்ச்சித்;திட்டம் ஆரம்பம்

Ø  விவசாயிகளையும் தேசிய பொருளாதாரத்தையும் பலப்படுத்தும் வகையில் நிகழ்ச்சித்திட்டம் நடைமுறை

Ø  அரிசி மற்றும் மரக்கறிகளை நாடளாவிய ரீதியில் பகிர்ந்தளிக்க முறையான பொறிமுறை

Ø  தட்டுப்பாடின்றி மீன்முட்டை மற்றும் கோழி இறைச்சி

Ø  கூட்டுறவு சங்கமும் சுப்பர் மார்க்கட்டுகளும் இணைந்து உணவுப் பொருட்கள் விநியோகம்

Ø  நோயாளிகளுக்கு மருந்துப்பொருட்களை விநியோகிக்க விசேட நிகழ்ச்சித்திட்டம்

Ø  அனைத்துப் பிரதேசங்களிலும் 24 மணி நேரம் திறந்திருக்கும் எரிபொருள் நிரப்பும் நிலையம்

Ø  வர்த்தக வங்கிகள் அத்தியாவசிய சேவைப் பிரிவிற்குள்

நாட்டில் கொரோனா வைரஸ் (கொவிட் -19) பரவுவதை தவிர்ப்பதற்கு மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிக்கும் பொறிமுறையொன்று தாபிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு மற்றும் சிறப்பங்காடிகள் இணைந்து பிரதேச பொறிமுறையொன்றின் மூலம் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக கொரோனா வைரஸை இலங்கையிலிருந்து ஒழிப்பதில் மக்கள் வாழ்க்கையை இயல்புநிலையில் பேணுவதற்காக தேவையான சேவைகளை தொடர்ச்சியாக வழங்குதல்நெறிப்படுத்தல் மற்றும் ஒருங்கிணைப்பை மேற்கொள்வதற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.

அனைத்து நடைமுறைகளும் கொரோனா ஒழிப்புக்கு சுகாதாரத் துறை முன்னெடுத்து வரும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைவானதாக இருக்க வேண்டும். மக்கள் வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் அத்தியாவசிய சேவைகளை பேணுவது முக்கியமானதாகும். விவசாயிகள்,தேசிய பொருளாதாரத்தை பாதுகாக்கும் வகையில் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களை மக்களுக்கு பகிர்ந்தளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இன்று (25) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்கள்,வங்கித் தலைவர்கள்,அத்தியாவசிய உணவுப் பொருட்களுடன் தொடர்புபட்ட அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது பல்வேறு தீர்மானங்களை மேற்கொண்டதாக பசில் ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார்.

அரிசி,தேங்காய்,மரக்கறி,முட்டைகோழி இறைச்சி போன்றவற்றை தட்டுப்பாடின்றி வழங்கக் கூடிய நிலை உள்ளது. இவற்றை விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களிடமிருந்து உரிய முறையில் கொள்வனவு செய்து கூட்டுறவு மற்றும் சிறப்பங்காடி விற்பனை நிலையங்களுடன் இணைந்து அத்தியாவசிய உணவுப் பொதியொன்றினை தயார் செய்து பிரதேச பொறிமுறையின் மூலம் முறையாக பகிர்ந்தளிக்க முடியும் என பசில் ராஜபக்ஷ அவர்கள் சுட்டிக்காட்டினார். அவற்றை அந்தந்த மக்கள் பிரிவினர் எதிர்பார்க்கும் வகையில் பல்வேறு விலைகளில் தயாரித்து வழங்க முடியும். இந்த நடைமுறையை நெறிப்படுத்துவதற்கு இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவியும் பெறப்படும்.

அரசாங்க வைத்தியசாலைகளில் பதிவுசெய்து தொடர்ச்சியாக மருந்துகளை கொள்வனவு செய்யும் நோயாளிகளுக்கு உரிய மருந்து பட்டியல்களின் படி வீடுகளுக்கே மருந்துகளை விநியோகிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதேச செயலாளர்கள்,பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பாதுகாப்புத் துறையின் பங்களிப்பு இதற்கு பெற்றுக்கொள்ளப்படும்.

தனியார் பாமசிகளில் மருந்துகளை கொள்வனவு செய்யும் நோயாளிகளுக்கு பிரதேசத்தில் தெரிவுசெய்த சில பாமசிகளின் மூலம் வீடுகளுக்கே பகிர்ந்தளிக்கும் முறைமையொன்றை பின்பற்றுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

வர்த்தக மற்றும் அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு பங்களிக்கும் வகையில் வர்த்தக வங்கிகளை திறந்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவற்றின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி ஓடர்கள் மூலம் வீடுகளுக்கே எரிவாயுவை விநியோகிக்கும் நிகழ்ச்சித்திட்டமொன்றையும் உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு பசில் ராஜபக்ஷ அவர்கள் அந்நிறுவனங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

முழு திட்டத்தினதும் நோக்கம் மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்த்து கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு சுகாதார துறை முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிபெறச் செய்வதாகும்.

பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைக்கு பிரதேச செயலாளர்கள்கிராம சேவை அதிகாரிகள்விவசாய ஆராய்ச்சி அதிகாரிகள்,சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளின் பங்களிப்பு பெறப்படும். தற்போது பல்வேறு நாடுகள் முழுமையாக ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. உருவாகியுள்ள நிலைமையை கருத்திற் கொண்டு அதிக கவனம் செலுத்தி நிலையான உற்பத்தி பொருளாதாரத்தை நாட்டில் கட்டியெழுப்புவது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

விவசாய மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளை தடையின்றி மேற்கொள்வதற்கு தேவையான வசதிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மரக்கறி,நெல்,சோளம்,உழுந்து,பாசிப்பயறு,கௌபி,குரக்கன் பயிரிடுவதற்கு விவசாயிகளை வலுவூட்டுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ,பன்துல குணவர்த்தன,டக்லஸ் தேவானந்தா ஆகியோரும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி. ஜயசுந்தர,நிதியமைச்சின் செயலாளர் எஸ். ஆட்டிகல ஆகியேரும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

மொஹான் சமரநாயக்க

பணிப்பாளர் நாயகம்

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை தடுத்து மக்கள் வாழ்க்கையை பாதுகாப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடைமுறைகள் மற்றும் வழிகாட்டல்களை முழுமையாக பின்பற்றுமாறு அரசாங்கம் அனைத்து மக்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த பாரதூரமான சுகாதார பிரச்சினையை வெற்றிகொள்வதற்காக உள்ள பிரதானமான வழி வைரஸிற்கு ஆட்படுவதை தவிர்ப்பதாகும். அலுவலகங்கள், கடைகள், பஸ் வண்டிகள், புகையிரதங்கள் போன்ற பொது இடங்களில் நடமாடும் போது சமூக இடைவெளியை பேண வேண்டும். ஒரு மீற்றர் தூர இடைவெளியை பேணுவது மிகவும் பொருத்தமான முறையாகும். அதே போன்று வைத்திய நிபுணர்களினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும். வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் அரசாங்கம் கடந்த சில நாட்களாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடந்த வெள்ளி மாலை 6.00 மணி முதல் நாளை, 23 திங்கள் காலை 6.00 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்துள்ளது. கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய வடமாகாணத்தில் உள்ள 05 மாவட்டங்களிலும் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மார்ச் 24 செவ்வாய் காலை 6.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை காலை 6.00 நீக்கப்பட்டு அன்றைய தினம் பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும். நாளை காலை ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் மாவட்டங்களில் உள்ள மக்கள் பெருமளவானோர் அன்றாட தேவைகளை கொள்வனவு செய்வதற்காக சந்தைகளுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. பொருட்களை கொள்வனவு செய்வது அவசியம் என்ற போதும் வைரஸுக்கு ஆட்படுவதை தவிர்ப்பதற்காக சுகாதார அதிகாரிகள் வழங்கியுள்ள அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்றுமாறு அரசாங்கம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. கடைகளுக்கு செல்லும் போதும் கடைகளுக்கு உள்ளேயும் நபர்களுக்கிடையில் ஒரு மீற்றர் தூரத்தை பேண வேண்டும். இருமல் அல்லது தும்மலின் போது அறிவுறுத்தப்பட்டுள்ளவாறு வாயை மூடிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பஸ், புகையிரதம் மற்றும் முச்சக்கர வண்டிகளில் பயணம் செய்யும் போது குறிப்பிட்ட இடைவெளியை பேண வேண்டும். பெற்றோல் மற்றும் எரிவாயுவை கொள்வனவு செய்ய வரும் போதும் இந்த நடைமுறைகளை பின்பற்றுமாறு நினைவூட்டப்படுகிறது. பொருட்களை கொள்வனவு செய்ய வரும் போது ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டும் வருகை தருவதன் மூலம் மக்கள் ஒன்று சேர்வதை குறைக்க முடியும். அது சமூக இடைவெளியை பேண உதவும். அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்கள் போதுமானளவு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை தட்டுப்பாடின்றி நாடளாவிய ரீதியில் பகிர்ந்தளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே தேவையற்ற வகையில் குழப்பமடையத் தேவையில்லை. ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள வேலையில் பயன்படுத்த தேவையான பொருட்களை மட்டுமே கொள்வனவு செய்வது சன நெரிசலில் கழிக்கும் காலத்தை குறைக்க உதவும். ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் வீடுகளில் இருந்து வீட்டு வேலைகளில் ஈடுபடுமாறு கொரோனா ஒழிப்பு செயலணி மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் நாடுகள், அரசியல் மற்றும் பொருளாதார முறைமைகள், கலாசாரம் மற்றும் ஏழை, பணக்காரன் என்ற பேதங்களின்றி தேச எல்லைகளை கடந்து பரவிவருகின்றது. தற்போது சுமார் 180 நாடுகள் பல்வேறு அளவுளில் அதனால் பாதிக்கப்பட்டுள்ளன. வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் முறைமைகளை ஏலவே கண்டறிந்து கடுமையாக பின்பற்றிய நாடுகள் பிரச்சினையை கட்டுப்படுத்துவதில் வெற்றியடைந்துள்ளன. கொரோனா வைரஸ் முதலில் தொற்றிய சீனா அதற்கு நல்ல உதாரணம். உரிய நடைமுறைகளை பின்பற்றாத காரணத்தினால் வளமான நாடான இத்தாலி அதனை கட்டுப்படுத்துவதில் இன்னும் வெற்றியடையவில்லை. கொரோனா வைரஸ் தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்புடன் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு உதவும் பல்வேறு நடவடிக்கைகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பெப்ரவரி 26ம் திகதி கொரோனா ஒழிப்பு விசேட செயலணி தாபிக்கப்பட்டது. அத்தகையதொரு செயலணி தாபிக்கப்பட்ட முதலாவது நாடு இலங்கையாகும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் செயலணி உறுப்பினர்களுடனும் வைரஸ் ஒழிப்புடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களுடனும் தினமும் கலந்துரையாடி தீர்மானங்களை மேற்கொண்டுவருகிறார். தற்போது 17 நோய்த்தடுப்புக் காப்பு மத்திய நிலையங்கள் தாபிக்கப்பட்டுள்ளன. அவை தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் அனைவரும் நோய்த்தடுப்புக் காப்புக்கு உட்படுத்தப்படுகின்றனர். உருவாகியுள்ள பிரச்சினையை குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்த வேண்டாம் என்று செயலணியுடன் கடந்த செவ்வாயன்று இடம்பெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி அவர்கள் கேட்டுக்கொண்டார். நாட்டில் உருவாகியுள்ள நிலைமை பாரதூரமானது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லையென்ற போதிலும் அனைத்து விடயங்களையும் நடைமுறை சாத்தியமான முறையில் ஆராய்ந்து பொருளாதார மற்றும் மக்களின் வாழ்க்கைக்கு பாதிப்பில்லாத வகையிலேயே தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். அரசியல் நோக்கங்களை கொண்டவர்களும் சமூக விரோதிகளும் தற்போதைய சுகாதார பிரச்சினையை பயன்படுத்தி சமூக ஊடகங்கள் மற்றும் வதந்திகளின் ஊடாக போலியான செய்திகளை பரப்பி வருகின்றனர். அவர்களில் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்தகையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மொஹான் சமரநாயக்க பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி ஊடகப் பிரிவு 2020.03.22

Latest News right

எமது பல்கலைக்கழகங்களின் தரம், நற்பெயர் மீண்டும் உலகின் முன் உறுதிப்படுத்தல் அவசியம் அதன் மூலம் வெளிநாட்டு மாணவர்களையும் ஈர்க்க முடியும் - ஜனாதிபதி

ஜூன் 12, 2023
Default Image
இலங்கைப் பல்கலைக்கழகங்கள் அன்று ஆசிய பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதன்மையான இடத்தில்…

தொழில்சார் சட்டத்தரணியாக 50 வருடங்களை நிறைவு செய்த ஜனாதிபதிக்கு “அபிநந்தன” விருது வழங்கி கௌரவிப்பு

மார் 13, 2023
தொழில்சார் சட்டத்துறையில் 50 வருடங்கள் பணியாற்றிய இலங்கை சட்டத்தரணிகள் சங்க…

2023.01.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

ஜன 23, 2023
2023.01.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் (அரசாங்க தகவல்…

சீன கடனை செலுத்த 2 ஆண்டுகள் நிவாரணம் - எக்ஸிம் வங்கி ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

ஜன 23, 2023
இலங்கைக்கு வழங்கிய கடனை மீளச் செலுத்துவதற்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கத் தயார் என…

"சீதாவக்க ஒடிஸி" பயணம் தொடங்குகிறது.

ஜன 15, 2023
சீதாவக்க நகருக்குச் செல்ல ஒரு புதிய வழியைத் திறந்து "சீதாவக்க ஒடிஸி" தனது பயணத்தை…

“அஸிதிஸி” வெகுசன ஊடக புலமைப்பரிசில் வழங்கல் – 2021/2022

டிச 20, 2022
அனைத்து ஊடகவியலாளர்களையும் அறிவு, திறன் மற்றும் அணுகுமுறைகளுடன் தொழில்முறை வெகுசன ஊடகத்…

"வரவுசெலவுத்திட்ட உரை – 2023" இலங்கை, புதியதோர் எதிர்காலத்தை நோக்கி....

நவ 14, 2022
வரவு செலவுத்திட்ட உரை – 2023 இலங்கை, புதியதோர் எதிர்காலத்தை நோக்கி.... ​ கௌரவ சபாநாயகர்…

2022 புக்கர் விருது இலங்கையருக்கு ஷெஹான் கருணாதிலக்க விருதை வென்றார்

அக் 19, 2022
2022 ஆம் ஆண்டின் புக்கர் பரிசை இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக்க வென்றுள்ளார். கடந்த…