ஆகஸ்ட் 05ஆம் திகதி பொதுத் தேர்தலின் பின்னர் புதிய பாராளுமன்றம் 2020 ஆகஸ்ட் 20ஆம் திகதி கூட்டப்படவுள்ளது.

அரசியலமைப்பின் மூலமும் பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் மூலமும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் இந்த தீர்மானம் பெறப்பட்டுள்ளது. இது பற்றி அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று நல்லிரவு வெளியிடப்பட்டுள்ளது.