கொரோனா வைரஸ் பற்றி அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களின் பணிக்குழாமினருக்கு அறிவூட்டும் நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதலாவது நிகழ்ச்சி இன்று (12) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. நோயை அறிந்துகொள்ளுதல், அதிலிருந்து தவிர்த்துகொள்ளுதல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து வைத்தியர் தேசாந்த திசாநாயக்க பணிக்குழாமினருக்கு தெளிவுபடுத்தினார்.

இதற்கேற்ப அரச, தனியார்துறை நிறுவனங்கள் தொடர்ச்சியாக இந்நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளன.

நிறுவன ஊழியர்கள் தாம் பெற்றுக்கொள்ளும் அறிவை தமது குடும்ப உறுப்பினர்களுக்கும் சமூகத்திற்கும் வழங்குவார்களென எதிர்பார்க்கப்படுகின்றது. இவ் வைரஸ் தொற்று தேசிய பிரச்சினையாக மாறுவதை தவிர்ப்பதே இந்நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும்.

ஜனாதிபதி அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) திரு.கே.பி.எகொடவெல உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.