சமீபத்திய செய்தி

இலங்கை கடற்படையின் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்காக சீனக் குடியரசினால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட பீ-625 கப்பல் (22) பிற்பகல் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறங்குதுறை வளாகத்தில் முப்படைகளின் தளபதி, ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் “பராக்கிரமபாகு” எனும் பெயரில் இலங்கை கடற்படையின் கப்பலாக அதிகாரப்படுத்தப்பட்டது.

புதிய கப்பலின் கட்டளையிடும் அதிகாரி கெப்டன் நலீந்திர ஜயசிங்கவிடம் கப்பலை கையளிப்பதற்கான சான்றுப்பத்திரங்களை ஜனாதிபதி அவர்கள் வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து “பராக்கிரமபாகு” எனும் பெயரில் இலங்கை கடற்படைக் கப்பலாக அதிகாரப்படுத்தப்பட்ட கப்பலின் பெயர்ப்பலகையையும் உத்தியோகபூர்வ இலட்சினையையும் சர்வ மத தலைவர்களின் ஆசிர்வாதத்துடன் ஜனாதிபதி அவர்கள் திரைநீக்கம் செய்து வைத்தார்.

ஜனாதிபதி அவர்கள் இக்கப்பலைப் பார்வையிட்டதோடு, கடற்படைத் தளபதியினால் கப்பலின் செயற்பாடுகள் மற்றும் தயாரிப்பு குறித்து தெளிவுபடுத்தப்பட்டது.

1994ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த கப்பல் 112 மீற்றர் நீளத்தையும் 12.4 மீற்றர் அகலத்தையும் கொண்டதுடன், அதன் கொள்ளளவு 2,300 தொன்களாகும். 18 அதிகாரிகள் உள்ளிட்ட 110 பேர் இக்கப்பலில் சேவையாற்றுகின்றனர். இக்கப்பல் இலங்கை கடற்படையின் கப்பலாக அதிகாரப்படுத்தப்பட்டதன் பின்னர் இலங்கையின் ஆழ்கடல் பிரதேசத்தில் தேடுதல், மீட்பு நடவடிக்கைகள், கடல் வளங்களை பாதுகாத்தல் மற்றும் கடற்படை செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும் கப்பல் மற்றும் இயந்திரங்களுக்கு உதவியளிப்பதற்காக பயன்படுத்தப்படவுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் மற்றும் முன்னாள் இராணுவ தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு துறை பிரதானிகளும் இலங்கைக்கான மக்கள் சீனக் குடியரசின் தூதுவர் செங் சுவான் உள்ளிட்ட அதிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நாட்டின் விளையாட்டுத் துறைக்காக ஏற்பாடு செய்யப்படும் உயர் விளையாட்டு விருது விழாவான “ஜனாதிபதி விளையாட்டு விருது விழா”

அமெரிக்காவில் இடம்பெறும் உலக சாரணர் ஜம்போரியில் பங்குபற்றும் இலங்கை சாரணர் அணிக்கு உத்தியோகபூர்வமாக தேசியக்

சில சம்பவங்களை வைத்துக்கொண்டு மக்களை தூண்டிவிடும் செயற்பாட்டை முன்னெடுக்காது, மக்கள் சுதந்திரமாக

நாடு முழுவதும் 18 வயதிற்கு குறைந்த சுமார் ஒரு இலட்சத்து பதினைந்தாயிரம் சிறுவர்கள் போதைப்பொருளுக்கு

தேசிய பாதுகாப்பு தொடர்பான தொழில்சார் ஆலோசனை குழுவொன்றை அமைக்க ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஆசிய கரையோர பாதுகாப்பு துறை தலைவர்கள் பங்குகொள்ளும் 15 ஆவது செயற்குழுக்கூட்டத் தொடர் நேற்று கொழும்பில் ஆரம்பமானது.

தேசிய மாணவ சிப்பாய்கள் படையணியின் மாகாணங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டுப்போட்டி நிகழ்வு

நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக சவால்களுக்கு மத்தியில் நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் உள்ள

இந்த வருடம் இடம்பெற்ற சர்வதேச திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி விருது விழாவில் விருது பெற்ற திரைப்படக்

நாட்டையும் மக்களையும் அழிவுக்குள்ளாக்கி வரும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்காக கடந்த

ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவான 'நாட்டிற்காக ஒன்றிணைவோம்' எனும் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று மொனராகலையில் ஆரம்பமாகிறது.

Latest News right

எமது பல்கலைக்கழகங்களின் தரம், நற்பெயர் மீண்டும் உலகின் முன் உறுதிப்படுத்தல் அவசியம் அதன் மூலம் வெளிநாட்டு மாணவர்களையும் ஈர்க்க முடியும் - ஜனாதிபதி

ஜூன் 12, 2023
Default Image
இலங்கைப் பல்கலைக்கழகங்கள் அன்று ஆசிய பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதன்மையான இடத்தில்…

தொழில்சார் சட்டத்தரணியாக 50 வருடங்களை நிறைவு செய்த ஜனாதிபதிக்கு “அபிநந்தன” விருது வழங்கி கௌரவிப்பு

மார் 13, 2023
தொழில்சார் சட்டத்துறையில் 50 வருடங்கள் பணியாற்றிய இலங்கை சட்டத்தரணிகள் சங்க…

2023.01.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

ஜன 23, 2023
2023.01.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் (அரசாங்க தகவல்…

சீன கடனை செலுத்த 2 ஆண்டுகள் நிவாரணம் - எக்ஸிம் வங்கி ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

ஜன 23, 2023
இலங்கைக்கு வழங்கிய கடனை மீளச் செலுத்துவதற்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கத் தயார் என…

"சீதாவக்க ஒடிஸி" பயணம் தொடங்குகிறது.

ஜன 15, 2023
சீதாவக்க நகருக்குச் செல்ல ஒரு புதிய வழியைத் திறந்து "சீதாவக்க ஒடிஸி" தனது பயணத்தை…

“அஸிதிஸி” வெகுசன ஊடக புலமைப்பரிசில் வழங்கல் – 2021/2022

டிச 20, 2022
அனைத்து ஊடகவியலாளர்களையும் அறிவு, திறன் மற்றும் அணுகுமுறைகளுடன் தொழில்முறை வெகுசன ஊடகத்…

"வரவுசெலவுத்திட்ட உரை – 2023" இலங்கை, புதியதோர் எதிர்காலத்தை நோக்கி....

நவ 14, 2022
வரவு செலவுத்திட்ட உரை – 2023 இலங்கை, புதியதோர் எதிர்காலத்தை நோக்கி.... ​ கௌரவ சபாநாயகர்…

2022 புக்கர் விருது இலங்கையருக்கு ஷெஹான் கருணாதிலக்க விருதை வென்றார்

அக் 19, 2022
2022 ஆம் ஆண்டின் புக்கர் பரிசை இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக்க வென்றுள்ளார். கடந்த…