ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (17) பிற்பகல் கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

நாட்டில் பதிவு செய்யப்பட்ட 65 விளையாட்டுக் கழகங்களுக்கிடையே திறமை வாய்ந்த விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு தேசிய ரீதியாக விருதுகள் வழங்கும் விழாவான இவ்விருது விழா மிகவும் கோலாகலமாக இடம்பெற்றதுடன், 2017 ஜனவரி முதல் 2018 டிசம்பர் வரை பல்வேறு துறைகளில் திறமைகளை வெளிப்படுத்திய 50க்கும் மேற்பட்ட விளையாட்டுத் துறை சார்ந்தவர்களுக்கு இதன்போது ஜனாதிபதி அவர்களினால் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.

சிறந்த விளையாட்டு வீரருக்கான விருது பொதுநலவாய விளையாட்டு போட்டியில் பளுதூக்கும் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற இந்திக திசாநாயக்கவுக்கும் சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான விருது அவ்விளையாட்டு போட்டியில் குத்துச் சண்டைப் போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்ற அனுஷா கொடித்துவக்குவுக்கும் கிடைத்தது.

மூன்றாவது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விருது விழாவில் இலங்கைக்காக விளையாட்டுத் துறையில் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றிகளை பெற்றவர்களுக்கும் விளையாட்டுக்காக பல்வேறு துறைகளின் ஊடாக சிறந்த பணிகளை மேற்கொண்டவர்களுக்கும் வாழ்நாள் விருதாக ஜனாதிபதி அவர்களினால் கௌரவ விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.

அந்த வகையில் விளையாட்டு அபிவிருத்திக்காக பங்களிப்புச் செய்தவர்களுக்கு “கிரீடா பிரபா, கிரீடா பூஷன, கிரீடா தேஷாந்தர, கிரீடா ரத்ன ஆகிய விருதுகள் ஜனாதிபதி அவர்களினால் வழங்கப்பட்டன.

விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, விளையாட்டுத் துறை கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மனுஷ நாணயக்கார, ஹெக்டர் அப்புஹாமி, ஹர்ஷன ராஜகருணா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.