சமீபத்திய செய்தி

 2019ஆம் ஆண்டுக்கானவரவுசெலவுதிட்டத்தை தயாரிப்பது தொடர்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது தீர்மானம் மேற்கொள்ளட்டுள்ளது.

இதுதொடர்பான விபரம் பின்வருமாறு:
2019ஆம் ஆண்டுக்கானஒதுக்Pட்டுதிருத்தசட்டம் 2018ஆம் ஆண்டுஅக்டோபர்மாதம் 9ஆம் திகதிபாராளுமன்றத்தில. சமர்ப்பிக்கப்பட்டதுடன் பாராளுமன்றத்தின் அமர்வு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து அந்ததிருத்தசட்டத்திற்கான பாராளுமன்ற அனுமதியைபெற்றுக்கொள்ளமுடியாமல் போனது. அரசியல் யாப்புக்கு அமைவாக புதிய ஒதுக்கீட்டுதிருத்தசட்டத்தைமீண்டும் சமர்ப்பிப்பதற்கு அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் வரையில் 2019ஆம் ஆண்டில் முதல் 4 மாதக்காலப் பகுதிக்கென அரசாங்கத்தின் செலவை உள்ளடக்கியவகையில் இடைக்கால கணக்குஅறி;க்கை 2018 டிசம்பர் மாதம் 21ஆம் திகதிபாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட. அன்றையதினம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கமைவ இடைக்காலகணக்கறிக்கை மூலம் உள்ளடக்கிய அடுத்த 2019ஆம் ஆண்டின் முதல் 4 மாதக்காலத்திற்கான செலவுகளை உள்ளடக்கிய 2019ஆம் ஆண்டுக்கான புதிய ஒதுக்கீட்டுதிருத்தசட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவேண்டும்.
இதற்கமைவாக 2019ஆம் ஆண்டுக்கான தேசிய வரவுசெலவு திட்டம் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுவருனிறது. தற்போதையஅரசாங்கத்தின்நிதி ஒருங்கிணைப்புவேலைத்திட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில் மற்றும் 2021ஆம் ஆண்டளவில் முன்னெடுப்பதற்கு திட்மிடப்பட்டுள்ள கீழ் கண்ட மத்தியகால அரசநிதி இலக்கைஅடையம் வகையில் ஒழுங்குபடுத்துவதற்காக நிதி மற்றும் ஊடகத்துறைஅமைச்சர் மங்களசமரவீரஅவர்கள் சமர்ப்பித்தபரிந்துரைக்குஅமைச்சரவைஅங்கிகாரம் வழங்கியுள்ளது.
1. அரசவருமானத்தைதேசியஉற்பத்தியில் 15 சதவீதத்திற்கும் மேலாகஅதிகரித்தல்
2. அரசாங்கத்தின் மீண்டுவரும்செலவைதேசியஉற்பத்தியில் 15 சதவீதமாகவரையறுத்தல்
3. அரசாங்கத்தின் முதலீட்டைமொத்ததேசியஉற்பத்தியில் 5.5 சதவீதமாகமுன்னெடுத்தல்
4. வரவுசெலவுதிட்டத்தில் துண்டுவிழும் தொகையைதேசியஉற்பத்தியில் 3.5 சதவீதமாகவரையறுத்தல்
5. திருப்பிசெலுத்தப்படாதஅரசகடனைமொத்தஉற்பத்தியில் 70 சதவீதத்திலும் பார்க்ககுறைவாகமுன்னெடுத்தல்

 மலர்ந்துள்ள புத்தாண்டில் சுற்றாடல் பாதுகாப்பிற்காக அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் தமது உபயோகத்திற்கு தேவையானவற்றை வீட்டுத்தோட்டத்தில் வளர்க்க வேண்டும் என்பதையும் அரச உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் ஜனாதிபதி செயலகத்தின் பணிக்குழாமினருக்கு பழ மரக்கன்றுகளை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் 02ம் திகதி முற்பகல் இடம்பெற்றது.

இந்நிகழ்வை அடையாளப்படுத்தும் வகையில் ஜனாதிபதி அவர்களினால் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன உள்ளிட்ட சில அதிகாரிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
அதன்பின்னர் ஜனாதிபதியின் செயலாளரினால் ஏனைய அதிகாரிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

 மக்களின் வறுமை நிலையை ஒழிப்பதனை முதன்மை நோக்காகக்கொண்டு புதிய வருடத்திற்கான அபிவிருத்தி திட்டங்களை தயாரிக்குமாறு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

போதைப்பொருட்கள் போன்ற சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் சகல சக்திகளையும் இல்லாதொழித்தல் தொடர்பில் விசேட கவனத்துடன் செயற்படும் அதேவேளை, அதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விசேட வேலைத்திட்டத்தினை பலப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.
01ம் திகதி முற்பகல் பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற “எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.
“எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் 2018ஆம் ஆண்டின் முன்னேற்றம் தொடர்பாகவும் 2019ஆம் ஆண்டிற்கான புதிய திட்டங்கள் தொடர்பாகவும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது. பல வருடங்களாக அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாதிருந்த பொலன்னறுவை மாவட்டத்தின் அபிவிருத்திக்காக 2018ஆம் ஆண்டில் 9,615 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன், இந்த மொத்த நிதியும் முற்றுமுழுதாகவே மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக செலவிடப்பட்டுள்ளமையை மாவட்ட செயலாளர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
வறுமை, போதைப்பொருள் பாவனை ஆகியவற்றை ஒழிப்பதற்காக மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் அரச நிறுவனங்களில் நிலவும் மனிதவள தட்டுப்பாட்டிற்கு தீர்வு காணல் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது. புதிய பஸ்தரிப்பு நிலையமொன்றை நிர்மாணித்தல், கழிவு முகாமைத்துவ செயற்திட்டம் உள்ளிட்ட பொலன்னறுவை மாவட்டத்தின் அபிவிருத்தி செயற்பாடுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
நிலவும் சாதகமான காலநிலை காரணமாக விவசாய நடவடிக்கைகள் செழிப்படைந்துள்ளமையினால், மாவட்டத்தின் விவசாய அபிவிருத்திக்காக “எழுச்சிபெறும் பொலன்னறுவை” செயற்திட்டத்தினால் விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவும் ஜனாதிபதி அவர்கள் ஆலோசனை வழங்கினார்.
மரநடுகை செயற்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாகவும் கவனம் செலுத்தியதுடன், மாகாண கல்வி காரியாலயம், மாவட்ட செயலகம் ஆகியன ஒன்றிணைந்து பாடசாலை மாணவர்களுக்கு மரக்கன்றுகளை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டமொன்றினை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி அவர்கள் இதன்போது ஆலோசனை வழங்கினார்.
பொலன்னறுவை பொத்குல் விகாரை வளாகத்தில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள எட்டு வியாபாரிகளுக்கான வியாபார கூடங்களையும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது வழங்கிவைத்தார்.
பொலன்னறுவை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதனிடையே பொலன்னறுவை மாவட்டத்தின் 2019ஆம் ஆண்டிற்குரிய புதிய அபிவிருத்தி முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (01) முற்பகல் பொலன்னறுவை சந்ர மண்டபத்தில் இடம்பெற்றது. அரசியல் கட்சி பேதமின்றி சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் இக்கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
பொலன்னறுவை மாவட்டத்தில் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், புதிய அபிவிருத்தி முன்மொழிவுகளை ஜனவரி 10ஆம் திகதிக்கு முன்னர் பொலன்னறுவையில் உள்ள தனது அலுவலகத்தில் கையளிக்குமாறு ஜனாதிபதி அவர்கள் சகல உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கும் பணிப்புரை விடுத்தார். அச்செயற்திட்டங்களில் முன்னுரிமையளிக்கப்பட வேண்டிய செயற்திட்டம் எதுவென கண்டறிந்து துரிதமாக அதனை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். மக்களுக்குத் தேவையான அபிவிருத்தி செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக கட்சி, நிற பேதமின்றி ஒத்துழைப்பு வழங்குமாறும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது அனைவரிடமும் கேட்டுக்கொண்டார்.

 கடந்த ஆண்டின் சவால்களை முறியடித்து மக்கள் இறையாண்மையை உறுதிப்படுத்தியவாறு புத்தாண்டை வரவேற்க முடிகின்றமை இலங்கையர் பெற்ற வெற்றியாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தி பின்வருமாறு:

pm wish tam

இலங்கை கடற்படையின் 23ஆவது தளபதியாக ரியர் அட்மிரல் கே.கே.டி.பி.எச். டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இன்று (31) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.

இதன்படி ரியர் அட்மிரல் கே.கே.டி.பி.எச் டி சில்வா 2019 ஜனவரி 01ஆம் திகதி முதல் புதிய கடற்படைத் தளபதியாக தனது பணிகளை மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் பணிப்புரைக்கமைய தான் உள்ளிட்ட அனைத்து பிரதேச செயலாளர்களும் எந்தவொரு அனர்த்த நிலைமைக்கும் முகங்கொடுக்க தயாராக இருப்பதாகவும் சுமார் 2000 பேருக்கு நலன்புரி முகாம் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளம் வடிந்தோடியிருந்தாலும் இன்று (26) காலை முதல் ஏற்பட்டுள்ள கனமழையின் காரணமாக மக்கள் மீண்டும் நலன்புரி நிலையங்களுக்கு வருகை தந்தவண்ணம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் 18,000 குடும்பங்கள் அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளதுடன், அவர்கள் அனைவருக்கும் சமைத்த உணவுகள் உள்ளிட்ட ஏனைய உணவுப் பொருட்கள், சுகாதார வசதிகள், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
எந்தவித குறைபாடுகளும் ஏற்படாதவண்ணம் தேவையான வசதிகளை மக்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளதுடன், அதற்கமைய மாவட்டத்தில் 17 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ள மக்கள் தொடர்பில் கவனம் செலுத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.
சேதமடைந்த வீடுகளை திருத்துவதற்கான நிதி வழங்கும் நடவடிக்கைகளின் முதலாம் கட்டமாக ஒரு குடும்பத்திற்கு 10,000 ரூபா வீதம் வழங்கவுள்ளதுடன், ஏற்பட்டுள்ள சேதத்தை மதிப்பீடு செய்ததன் பின்னர் 250,000 ரூபாய் வரையான தொகையை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகள், விற்பனை நிலையங்கள், கிணறுகள் மற்றும் கழிவறைகளை சுத்திகரிப்பதற்கான செயற்திட்டமொன்றை ஜனாதிபதி அவர்களின் பணிப்புரைக்கமைய அரச நிறுவனங்களை ஒன்றிணைத்து செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 8,000 ஏக்கர் வயல் நிலங்களுக்கு நட்டஈடு வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதுடன், அதன்போது ஏக்கருக்கு 40,000 ரூபா வீதம் நட்டஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வீடுகள் பாதிக்கப்படாதவர்களுக்கு அவர்கள் மீண்டும் தமது வீடுகளில் குடியேறும் போது உணவு தயாரிப்பதற்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன.
இராணுவத்தினரால் அனர்த்தத்திற்கு முகங்கொடுத்தவர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டு வருவதுடன், அவர்களை ஆபத்தான இடங்களிலிருந்து நீக்கி மீள் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
57 பிரிவுகளில் ஏற்பட்டிருக்கும் வெள்ள அனர்த்த நலன்புரி நடவடிக்கைகளுக்காக 300 – 400 இராணுவத்தினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கை கப்பற் படையினரும் 06 குழுக்களாக நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், இராணுவத்தினரால் முல்லைத்தீவு பிரதேசத்தில் வெள்ளத்தினால் நிர்க்கதியான சுமார் 1000க்கும் மேற்பட்டோர் தற்போது மீட்க்கப்பட்டுள்ளதுடன், இலங்கை விமானப் படையினர் அவதானிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன், ஆபத்தான பிரதேசங்களில் பணியாற்றிவரும் தரைப்படையினருக்கு உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.

 கனமழை, வெள்ளப் பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள முல்லைதீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் உரிய துறைகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

வெள்ள அனர்த்தம் முழுமையாக நீங்கும் வரை பாதிக்கப்பட்ட பிரதேச மக்களுக்கு தேவையான வசதிகளை தாமதமின்றி வழங்குமாறும் அதற்கான நிதி ஒதுக்கீடுகளை உடனடியாக மாவட்ட செயலாளர்களுக்கு வழங்குமாறும் அமைச்சரவை செயலாளர்கள் உள்ளிட்ட துறைசார் பிரிவுகளுக்கு பணிப்புரை விடுத்துள்ள ஜனாதிபதி அவர்கள், வட மாகாண ஆளுநர், மாவட்ட செயலாளர்கள், இராணுவ தளபதி மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் ஒன்றிணைந்து நிவாரண வேலைத்திட்டங்களை துரிதமாக செயற்படுத்துமாறும் தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்தில் பெய்த கனமழை காரணமாக முல்லைதீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளதுடன், இதன் காரணமாக பெருக்கெடுத்துள்ள இரணைமடு உள்ளிட்ட சில நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளை திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வெள்ள அனர்த்தத்தின் காரணமாக முல்லைதீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்ட மக்கள் பல்வேறு இன்னலுக்கு முகங்கொடுத்துள்ளதுடன், அம்மாவட்டங்களில் செயற்படும் 40 பாதுகாப்பு முகாம்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேற்கொண்டுள்ளது.

 விஞ்ஞான, தொழிநுட்ப துறையில் திறமையானவர்களை பாராட்டும் தேசிய விருது விழா ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் 19ம் திகதி பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

நாட்டின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு விஞ்ஞான, தொழிநுட்ப அறிவினை பயன்படுத்துவதனூடாக பங்களிப்பு வழங்கிய விஞ்ஞானிகள், தொழிநுட்பவியலாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்க்கு தேசிய விருது வழங்கி கௌரவிப்பதற்காக தேசிய விஞ்ஞான மன்றத்தினால் இந்த விருது விழா வருடந்தோறும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
2016 மற்றும் 2018 வருடங்களில் தகுதி பெற்றவர்களுக்கான தேசிய விருது வழங்கும் நிகழ்வு ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்றது.
தேசிய விஞ்ஞான மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆனந்த ஜயவர்தனவினால் விருது விழாவின் தலைமை உரை ஆற்றப்பட்டது.
தேசிய விஞ்ஞான மன்றத்தின் தலைவர் பேராசிரியர் சிரிமலீ பெர்ணான்டோ உள்ளிட்ட உறுப்பினர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

 புதிய அமைச்சர்கள் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் பதவியேற்றனர்.

அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு :-
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள்
1. பிரதமர் கௌரவ ரணில் விக்ரமசிங்க – தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி திறன் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்
2. கௌரவ ஜோன் அமரதுங்க – சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர்
3. கௌரவ காமினி ஜயவிக்ரம பெரேரா – புத்தசாசனம் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர்
4. கௌரவ மங்கள சமரவீர – நிதி மற்றும் ஊடகத் துறை அமைச்சர்
5. கௌரவ லக்ஷமன் கிரியெல்ல- அரச தொழில் முயற்சி, கண்டி மரபுரிமைகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர்
6. கௌரவ ரவூப் ஹக்கீம் – நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர்
7. கௌரவ திலக் மாரப்பன – வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்
8. கௌரவ ராஜித சேனாரத்ன – சுகாதார, போசணைகள் சுதேச மருத்துவத் துறை அமைச்சர்
9. கௌரவ ரவி கருணாநாயக்க – மின்சக்தி, சக்தி வலு மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர்
10. கௌரவ வஜிர அபேவர்த்தன – உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர்
11. கௌரவ ரிஷாத் பதிறுதீன் – கைத்தொழில், வாணிப அலுவல்கள் நீண்டகாலமாக இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றல், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்
12. கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க – பெருநகரங்கள், மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர்
13. கௌரவ நவீன் திசாநாயக்க – பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்
14. கௌரவ பீ ஹரிசன் – விவசாயம், கிராமிய பொருளாதாரம், பண்ணை வள அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர்
15. கௌரவ கபீர் ஹாசிம் – நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர்
16. கௌரவ ரஞ்சித் மத்தும பண்டார – பொதுநிர்வாக, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்
17. கௌரவ கயந்த கருணாதிலக – காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு
18. கௌரவ சஜித் பிரேமதாச – வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்
19. கௌரவ அர்ஜுன ரணதுங்க – போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சர்
20. கௌரவ பழனி திகாம்பரம் – மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதி மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர்.
21. கௌரவ சந்ராணி பண்டார – மகளிர், சிறுவர் அலுவல்கள், உலர் வலய அபிவிருத்தி அமைச்சர்
22. கௌரவ தலதா அதுகோரள – நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்
23. கௌரவ அகில விராஜ் காரியவசம் – கல்வி அமைச்சர்
24. கௌரவ அப்துல் ஹலீம் முஹம்மட் ஹசீம் – தபால் சேவைகள், முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர்
25. கௌரவ சாகல ரத்நாயக்க – துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர்
26. கௌரவ ஹரீன் பெர்ணான்டோ – தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர்
27. கௌரவ மனோ கணேஷன் – தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர்
28. கௌரவ தயா கமகே – தொழில், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர்
29. கௌரவ மலிக் சமர விக்ரம – அபிவிருத்தி மூலோபாயங்கள், சர்வதேச வர்த்தகம், விஞ்ஞான, தொழிநுட்ப ஆராய்ச்சி அமைச்சர்

Latest News right

நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் மகுதாராம ஆலயம் மியன்மார் -இலங்கை சமய உறவின் சின்னம் - அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன

ஆக 22, 2024
Default Image
நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் மகுதாராம ஆலயம் மியன்மார் -இலங்கை சமய, கலாசார மற்றும்…

இறுதி ரந்தோலி ஊர்வலத்தை பார்வையிட ஜனாதிபதி இணைந்து கொண்டார்

ஆக 20, 2024
Default Image
கண்டி வரலாற்று சிறப்பு மிக்க தலதா மாளிகையில் வருடாந்த எசல பெரஹரா திருவிழாவின் இறுதி…

அரச ஊழியர்களின் பாரிய சம்பள அதிகரிப்புக்கு எதிரான பிரச்சாரங்களுக்கு அரசாங்கம் பதிலடி கொடுக்கிறது - அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன

ஆக 18, 2024
Default Image
“அனைத்து அரசு ஊழியர்களுக்கும் மூன்றாண்டுகளுக்கு 25000 உதவித்தொகை. குறைந்தபட்சம் சிறு…

ஊடக விதிமுறைகள் சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும் – பிரதித் தேர்தல் ஆணையாளர்

ஆக 09, 2024
Default Image
தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிட்டுள்ள ஊடக வழிகாட்டுதல்கள் சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும்…

தேர்தல் காரணமாக IMF கடன் ஒப்பந்தத்தில் மாற்றம் இல்லை - அமைச்சரவை பேச்சாளர்

ஆக 06, 2024
Default Image
தேர்தல் அல்லது ஏனைய விடயங்கள் காரணமாக 2027 ஆம் ஆண்டு வரையில் சர்வதேச நாணய நிதியத்துடன்…

மறைந்த வணக்கத்துக்குரிய கலபொட ஞானிஸ்ஸர நாயக்கருக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்.

ஆக 05, 2024
Default Image
சிறந்த சங்கப் பிதாமகராக இருந்து காலமான கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையின் தலைவர்…

மறைந்த வணக்கத்துக்குரிய கலபொட ஞானிஸ்ஸர நாயக்கருக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்.

ஆக 05, 2024
Default Image
மறைந்த கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையின் தலைவர் கலபொட ஞானிஸ்ஸர நாயக்கருக்கு…