சமீபத்திய செய்தி

 வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் ஐந்தாவது அமர்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் 17ம் திகதி பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இச்செயலணியின் இதற்கு முன்னரான நான்கு அமர்வுகளின்போது வட, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள், அவற்றின் சாதகத்தன்மைகள் தொடர்பாகவும் அத்தீர்மானங்களை நிறைவேற்றுவதில் காணப்படுகின்ற தடைகள் பற்றியும் அவற்றைத் தாண்டி மக்களுக்கு சிறந்த பலனைப் பெற்றுக்கொடுக்கக்கூடிய விதத்தில் குறித்த அபிவிருத்தி பணிகளை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்பது பற்றியும் இங்கு விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது.
குறிப்பாக வட, கிழக்கு பிரதேசங்களின் நில விடுவிப்பு, பாதைகள் மற்றும் பாடசாலைகள் விடுவிப்பு, ஆனையிறவு உப்பளம், குறிஞ்சைத்தீவு உப்பளம், அச்சுவேலி கைத்தொழில் பேட்டை, வாழைச்சேனை கடதாசித் தொழிற்சாலை, பரந்தன் இரசாயன தொழிற்சாலை, முல்லைத்தீவு ஓட்டுத் தொழிற்சாலை, வட, கிழக்கு பிரதேசங்களின் குடிநீர் வசதிகளை ஏற்படுத்துவதற்கான செயற்திட்டங்கள், படையினரால் நடாத்தப்படும் முன்பள்ளிகளின் சமூக தாக்கங்கள், கேப்பாபிலவு காணி விவகாரம், வட்டகச்சி விவசாயப் பண்ணை விடுவிப்பு, ஒலுவில் மீன்பிடித் துறைமுக அபிவிருத்தி உள்ளிட்ட மேலும் பல முக்கிய விடயங்கள் பற்றி இதன்போது விரிவாக கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், அத்துறை சார்ந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்க வேண்டிய துரித நடவடிக்கைகள் பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் கலந்துகொண்ட எதிர்க்கட்சி தலைவர் ஆர். சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன், செல்வம் அடைக்கலநாதன், எஸ்.ஸ்ரீதரன், சீனித்தம்பி யோகேஸ்வரன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, கே.கோடீஸ்வரன், அங்கஜன் ராமநாதன், டக்ளஸ் தேவானந்தா, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் காணப்படும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் பற்றியும் அதன்போது எழுகின்ற தடைகள் பற்றியும் விரிவாக சுட்டிக்காட்டினார்கள்.
அக்கருத்துக்களை மிகுந்த ஆர்வத்துடன் செவிமடுத்த ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள், இனங்காணப்பட்டிருக்கின்ற பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வுகளை பெற்றுத்தரக்கூடிய வகையில் அவற்றை புதிய அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தின் கீழ் தேவையான நிதி ஒதுக்கீட்டினை செய்வதாகவும் தெரிவித்ததுடன், தனியார் முதலீட்டாளர்கள் மூலமாகவோ அல்லது அரச-தனியார் கூட்டு முதலீட்டு மூலமாகவோ தற்போது வட, கிழக்கு பிரதேசங்களில் செயலிழந்திருக்கும் தொழிற்சாலைகளை மீண்டும் இயங்க வைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
அத்தோடு தனியாருக்கு சொந்தமான காணிகளில் அரச படைகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் விவசாய செயற்பாடுகள் மேலும் தொடரப்படுவதை அனுமதிக்க முடியாது என்பதனால் அத்தகைய காணிகளை விடுவிப்பதற்கான துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் இங்கு வலியுறுத்தினார்.
வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம, யாழ் இராணுவ கட்டளைத்தளபதி தர்ஷன ஹெட்டியாரச்சி, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனெவிரத்ன, அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்களின் அரச அதிபர்கள் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

 2018 அரச நத்தார் பண்டிகை “யேசு பாலனின் பிறப்பும் நத்தார் கொண்டாட்டமும்“ எனும் தொனிப்பொருளின் கீழ் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் 16ம் திகதி பிற்பகல் மன்னார் நகர சபை விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

கரோல் பாடல்கள் உள்ளிட்ட பல சிறப்பம்சங்களுடன் அரச நத்தார் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டதுடன், 2018 அரச நத்தார் பண்டிகையை முன்னிட்டு இடம்பெற்ற போட்டிகளின் வெற்றியாளர்களுக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் ஜனாதிபதி அவர்களினால் வழங்கப்பட்டன.
இலங்கைக்கான வத்திகான் தூதுவர் அதிவண.பியேரே நுயென் வேன் வோட் ஆயர், இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றத்தின் தலைவர் அதிவண.வின்சன்ட் பெர்ணான்டோ ஆயர், மன்னார் மறை மாவட்ட ஆயர் அதிவண.எம்மானுவேல் பெர்ணான்டோ ஆயர் உள்ளிட்ட திருத்தந்தையர்கள், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மற்றும் பிரதேச மக்கள் பிரதிநிதிகள், அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இலங்கை தேசிய வர்த்தக சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2018 தேசிய வர்த்தக நடவடிக்கைகளுக்கான விருது விழாவில் அரச உற்பத்தி துறைக்காக வழங்கப்படும் தங்க விருதினை இம்முறையும் அரச மரக்கூட்டுத்தாபனம் பெற்றுக்கொண்டுள்ளதுடன், அத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் அந்த விருதை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

மூன்றாவது முறையாகவும் அரச மரக்கூட்டுத்தாபனம் இவ்விருதை பெற்றுள்ளதுடன், கூட்டுத்தாபனத்தின் பணிகள் தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
அரச மரக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் சாந்த பண்டாரவினால் இவ்விருது ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டதுடன், பதில் பணிப்பாளர் எம்.வை.டி.பவர குமார உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 நவீன விவசாய கலாசாரமொன்றை உருவாக்கும் நோக்குடன் விவசாயத் துறை அமைச்சு ஏற்பாடு செய்துள்ள “Harvest 2018” நவீன விவசாய கண்காட்சி 11ம் திகதி முற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

11முதல் 16ஆம் திகதி வரை காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை இந்த கண்காட்சி பொது மக்களுக்காக இலவசமாக நடாத்தப்படுவதுடன், கண்காட்சி கூடங்கள் உணவு, பழவகைகள், மரக்கறி வகைகள் விற்பனைப் பிரிவுகளையும் உள்ளடக்கியுள்ளது.
உள்நாட்டு, வெளிநாட்டு விவசாய துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு நிறுவனங்கள் இக்கண்காட்சியில் கலந்துகொண்டுள்ளதுடன், விவசாயத் துறையின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்தப்படும் நவீன விவசாய தொழிநுட்ப முறைமையை இலங்கை விவசாய சமூகத்திற்கு அறிமுகப்படுத்துவதும் எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறி மற்றும் பழவகைகளுக்கு சர்வதேச சந்தையில் அதிக கேள்வியை ஏற்படுத்துவதும் இக்கண்காட்சியின் நோக்கமாகும்.
கண்காட்சியை பார்வையிட்ட ஜனாதிபதி அவர்கள், பணிக்குழாமினருடன் சுமுகமாக கலந்துரையாடினார்.
மஹிந்த அமரவீர, துமிந்த திசாநாயக்க மற்றும் விவசாயத் துறை அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன்சந்திர உள்ளிட்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நாட்டின் விவசாய சமூகத்திற்காக அரச தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களது மற்றுமொரு எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட இரணைமடு நீர்த்தேக்கம் 07ம் திகதி முற்பகல் ஜனாதிபதி அவர்களினால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.

நாட்டின் விவசாய சமூகத்தின் நீர்ப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்கு தனது அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் முக்கிய இடம் வழங்கியிருக்கும் ஜனாதிபதி அவர்களின் முழுமையான வழிகாட்டலின் கீழ் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நிர்மாணப் பணிகளுடன் இணைந்ததாக ஆரம்பிக்கப்பட்ட நீர்ப்பாசன செயற்திட்டங்களில் இரண்டாவது கட்டமாக வடக்கின் பாரிய நீர்த்தேக்கமான கிளிநொச்சி, இரணைமடு நீர்த்தேக்கத்தின் புனர்நிர்மாணப் பணிகள் 2015ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்நீர்த்தேக்கத்தில் புனர்நிர்மாணப் பணிகள் இடம்பெற்றமை இதுவே முதற் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
புனரமைப்பு செய்யப்பட்டுள்ள இந்த இரணைமடு நீர்த்தேக்கத்தின் மூலம் 9,180 குடும்பங்கள் பயன்பெறுவதுடன், 21,000 ஏக்கர் விவசாய நிலத்தில் இரண்டு போகங்களின் போதும் எவ்வித பிரச்சினையுமின்றி பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரதேசத்தின் குடிநீர் பிரச்சினைக்கும் தீர்வு கிடைத்துள்ளது. 2,000 மில்லியன் ரூபாவுக்கும் அதிக செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த புனர்நிர்மாணப் பணிகளுக்கு உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் நிதி ஏற்பாடுகளை வழங்கியுள்ளன.
இந்நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு இதற்கு முன்னர் 131 மில்லியன் கனமீற்றர்களாக இருந்ததுடன், புனர்நிர்மாணம் செய்யப்பட்டதன் பின்னர் இதன் நீர் கொள்ளளவு 148 மில்லியன் கனமீற்றர்களாகும். கிளிநொச்சி மக்களுக்கு மேலதிகமாக இந்நீர்த்தேக்கத்தின் நீரை எதிர்காலத்தில் யாழ்ப்பாண மக்களின் தேவைக்காகவும் கொண்டு செல்வது ஜனாதிபதி அவர்களின் எதிர்பார்ப்பாகும்.
நீர்த்தேக்கம் புனரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து முதன் முறையாக 07ம் திகதி முற்பகல் நீர் மட்டம் வான் கதவு மட்டத்தை அடைந்ததுடன், நீர்த்தேக்க வளாகத்திற்கு சென்ற ஜனாதிபதி அவர்கள் நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளை திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து நீர்த்தேக்க வளாகத்தை பார்வையிட்ட ஜனாதிபதி அவர்கள், இரணைமடு நீர்த்தேக்கம் திறந்து வைக்கப்பட்டதை வடக்கு நல்லிணக்கத்தை பலப்படுத்துவதற்கு மேற்கொண்ட ஒரு பாரிய யுகப் பணியாகவே தான் கருதுவதாக தெரிவித்தார். வடக்கு மக்களின் வாழ்க்கைக்கு வளம் சேர்க்கின்ற அதேநேரம், நாட்டின் தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு இதன் மூலம் பாரிய பலம் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, பாராளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசிங்க, சரத் அமுனுகம, அங்கஜன் ராமநாதன் ஆகியோர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் செயற்திட்டத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள், அரசாங்க அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள் கிளிநொச்சி சாந்தபுரம் பிரதேசத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். ஜனாதிபதி அவர்களிள் வருகையை அறிந்து பிரதேச மக்கள் பெரும் எண்ணிக்கையானவர்கள் அவ்விடத்தில் ஒன்று கூடியதுடன், அவர்கள் ஜனாதிபதி அவர்களை மிகுந்த கௌரவத்துடன் வரவேற்றனர்.
அம்மக்களின் குறை, நிறைகளை கேட்டறிந்த ஜனாதிபதி அவர்கள் அம்மக்களுடன் சுமுகமாக கலந்துரையாடினார். தமது நீண்டகால அபிவிருத்தி பிரச்சினைகளை தீர்த்து தமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக நல்ல எதிர்பார்ப்பை வைக்கக்கூடிய அபிவிருத்தியை ஏற்படுத்தி தந்தமைக்காக அவர்கள் ஜனாதிபதி அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்
மேலும் பிரதேசத்தின் பல்வேறு அபிவிருத்தி பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி அவர்களிடம் முன்வைக்கப்பட்டதுடன், சாந்தபுரம் வித்தியாலயத்தின் சில குறைபாடுகள் பற்றி பாடசாலை அதிபர் ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கினார். அப்பிரச்சினைகளை உடனடியாக கண்டறிந்து தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் வட மாகாண ஆளுநருக்கு பணிப்புரை விடுத்தார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் 25 வருட நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “வெதச 2018” மருத்துவ கண்காட்சி ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (04) முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.

அரச துறையினரின் சம்பளம் தொடர்பில் மீளாய்வு செய்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக ஜனாதிபதி அவர்களால் நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழுவின் அறிக்கை 28ம் திகதி முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

ஊவா வெல்லஸ்ஸ சுதந்திரப் போராட்ட 200 வருட பூர்த்தியை முன்னிட்டு தாயகத்தின் விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்த மாவீரர் கெப்படிபொல உள்ளிட்ட 10,000 வீரர்களுக்காக சாந்தி மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புண்ணிய நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் 25ம் திகதி பிற்பகல் கொழும்பு 07, சேருவில பௌத்த நிலையத்தில் இடம்பெற்றது.

கடந்த இரண்டு மாத நிகழ்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி பாராட்டு

நாடு முழுவதிலும் 5 இலட்சம் பலாக்கன்று நடும் தேசிய வேலைத்திட்டம் இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஆரம்பமானது. 

வெகுசன ஊடகம் மற்றும் டிஜிடல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி திரு.

பக்கம் 40 / 40

Latest News right

நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் மகுதாராம ஆலயம் மியன்மார் -இலங்கை சமய உறவின் சின்னம் - அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன

ஆக 22, 2024
Default Image
நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் மகுதாராம ஆலயம் மியன்மார் -இலங்கை சமய, கலாசார மற்றும்…

இறுதி ரந்தோலி ஊர்வலத்தை பார்வையிட ஜனாதிபதி இணைந்து கொண்டார்

ஆக 20, 2024
Default Image
கண்டி வரலாற்று சிறப்பு மிக்க தலதா மாளிகையில் வருடாந்த எசல பெரஹரா திருவிழாவின் இறுதி…

அரச ஊழியர்களின் பாரிய சம்பள அதிகரிப்புக்கு எதிரான பிரச்சாரங்களுக்கு அரசாங்கம் பதிலடி கொடுக்கிறது - அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன

ஆக 18, 2024
Default Image
“அனைத்து அரசு ஊழியர்களுக்கும் மூன்றாண்டுகளுக்கு 25000 உதவித்தொகை. குறைந்தபட்சம் சிறு…

ஊடக விதிமுறைகள் சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும் – பிரதித் தேர்தல் ஆணையாளர்

ஆக 09, 2024
Default Image
தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிட்டுள்ள ஊடக வழிகாட்டுதல்கள் சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும்…

தேர்தல் காரணமாக IMF கடன் ஒப்பந்தத்தில் மாற்றம் இல்லை - அமைச்சரவை பேச்சாளர்

ஆக 06, 2024
Default Image
தேர்தல் அல்லது ஏனைய விடயங்கள் காரணமாக 2027 ஆம் ஆண்டு வரையில் சர்வதேச நாணய நிதியத்துடன்…

மறைந்த வணக்கத்துக்குரிய கலபொட ஞானிஸ்ஸர நாயக்கருக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்.

ஆக 05, 2024
Default Image
சிறந்த சங்கப் பிதாமகராக இருந்து காலமான கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையின் தலைவர்…

மறைந்த வணக்கத்துக்குரிய கலபொட ஞானிஸ்ஸர நாயக்கருக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்.

ஆக 05, 2024
Default Image
மறைந்த கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையின் தலைவர் கலபொட ஞானிஸ்ஸர நாயக்கருக்கு…