இக் கண்காட்சியின் அடிப்படை நோக்கம் சிறந்த உடல், உள, சமூக, சுகாதாரம் பற்றி மக்களுக்கு அறிவூட்டுவதாகும். இக்கண்காட்சி இன்று முதல் டிசம்பர் மாதம் 08ஆம் திகதி வரை நடைபெறும். இத்தினங்களில் காலத்திற்கேற்ற கருப்பொருட்களின் கீழ் கலந்துரையாடல்கள், உரைகள் உள்ளிட்ட சுகாதார தொடர்பாடல் நிகழ்ச்சித்திட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் உள ஆரோக்கியம் பற்றி விசேட உளவள குழுக்களின் மூலம் நிகழ்ச்சித் தொடர்களும் நடைபெறும். மேலும் இந்த கண்காட்சியில் பங்குபற்றுகின்றவர்களில் தெரிவு செய்யப்படுகின்றவர்களுக்கு இலவசமாக பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளதுடன், குறிப்பாக தற்போது பரவி வரும் தொற்றாத நோய்களை தவிர்ப்பது பற்றி இக்கண்காட்சியில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு 25 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஜனாதிபதி அவர்களினால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, மருத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் சுரங்கி யசவர்தன ஆகியோர் உள்ளிட்ட பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.