மலர்ந்துள்ள புத்தாண்டில் சுற்றாடல் பாதுகாப்பிற்காக அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் தமது உபயோகத்திற்கு தேவையானவற்றை வீட்டுத்தோட்டத்தில் வளர்க்க வேண்டும் என்பதையும் அரச உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் ஜனாதிபதி செயலகத்தின் பணிக்குழாமினருக்கு பழ மரக்கன்றுகளை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் 02ம் திகதி முற்பகல் இடம்பெற்றது.

இந்நிகழ்வை அடையாளப்படுத்தும் வகையில் ஜனாதிபதி அவர்களினால் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன உள்ளிட்ட சில அதிகாரிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
அதன்பின்னர் ஜனாதிபதியின் செயலாளரினால் ஏனைய அதிகாரிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.