விஞ்ஞான, தொழிநுட்ப துறையில் திறமையானவர்களை பாராட்டும் தேசிய விருது விழா ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் 19ம் திகதி பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

நாட்டின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு விஞ்ஞான, தொழிநுட்ப அறிவினை பயன்படுத்துவதனூடாக பங்களிப்பு வழங்கிய விஞ்ஞானிகள், தொழிநுட்பவியலாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்க்கு தேசிய விருது வழங்கி கௌரவிப்பதற்காக தேசிய விஞ்ஞான மன்றத்தினால் இந்த விருது விழா வருடந்தோறும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
2016 மற்றும் 2018 வருடங்களில் தகுதி பெற்றவர்களுக்கான தேசிய விருது வழங்கும் நிகழ்வு ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்றது.
தேசிய விஞ்ஞான மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆனந்த ஜயவர்தனவினால் விருது விழாவின் தலைமை உரை ஆற்றப்பட்டது.
தேசிய விஞ்ஞான மன்றத்தின் தலைவர் பேராசிரியர் சிரிமலீ பெர்ணான்டோ உள்ளிட்ட உறுப்பினர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.