ரூபவாஹினி ஒளிபரப்பினை டிஜிட்டல் மயமாக்கல் செயற்றிட்டத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான கூட்டத்தில் ஊடக அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வெகுசன ஊடக  அமைச்சினால் அமுல்படுத்தப்படும் தொலைக்காட்சி ஒலிபரப்பு டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் தொடர்பான மற்றுமொரு கலந்துரையாடல் ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் பெப்ரவரி முதலாம் திகதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

ஒலிபரப்பாளர் சங்கப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போது, தொலைக்காட்சி டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்திற்கு இணையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள செயற்பாடுகள் குறித்தும், இதில் ஏற்படக்கூடிய தொழில்நுட்ப சவால்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

ஊடக அமைச்சின் செயலாளர் அனுச nபல்பிட்ட அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க மற்றும் ஒலிபரப்பாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.