நவீன தொழில் நுட்ப அறிவுடனான உயர் ஊடகத் துறை போன்றே கௌரவமான ஊடகவியலாளர்களை உருவாக்கும் நோக்கில் இலங்கையில் முதன் முறையாக ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள இலங்கை பட்டய ஊடகவியலாளர் பயிற்சி  நிறுவனத்தை ஸ்தாபித்தல் தொடர்பில் நியமிக்கப்பட்ட செயற்பாட்டுக் குழுக் கூட்டம் இன்று (13)  வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ டளஸ் அழகப்பெரும அவர்களின் தலைமையில் வெகுசன ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


இந்த நிறுவனத்தை ஸ்தாபிப்பது தொடர்பில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உட்பட அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும், தேவையான நிதி தொடர்பாகவும்  கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 

பல்கலைக்கழக பாடத்திட்டத்திற்கு அப்பால் சென்று உயர் மட்ட ஊடக கல்வியறிவு கொண்ட கௌரவமான ஊடக வல்லுனர்களை உருவாக்குவது,  ஊடகத்துறை தொடர்பாக உயர்தர கற்கை நெறிகளைக் கொண்ட ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமாக தொழில்ரீதியிலான திறமையை இந்த நிறுவனம் எவ்வாறு வழங்குவது  குறித்து அமைச்சர் மற்றும் குழுவுடன் தொடர்ந்து கலந்துரையாடப்பட்டது. 

 

இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத், வெகுசன ஊடக மற்றும் தகவல் அமைச்சின் செயலாளர் அனுஷ பல்பிட்ட, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க, மேலதிக தகவல் பணிப்பாளர் நாயகம் (ஊடகம்) மிலிந்த ராஜபக்ஷ மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.