புதிய அனல் மின்நிலையங்களை ஏற்படுத்துவதில்லை என்று சர்வதேச வலுசக்தி இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தின் முக்கிய உறுப்பினராக செயற்படுகின்றமை பற்றி இலங்கை மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கிளாஸ்கோ நகரில் ஆரம்பமான ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றம் தொடர்பான அரச தலைவர்களின் மாநாட்டில் ஜனாதிபதி உரையாற்றினார். உலகின் இருப்பிற்காக சகல அரச தலைவர்களும் புரிந்துணர்வுடன் செயற்படுவது அவசியமாகும். இரசாயன உரப் பாவனையை வரையறுத்து ஆரோக்கியமான வாழ்க்கையை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக இலங்கை நிலையான பசுமைப் பொருளாதாரத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்காக அச்சம் இன்றி, நடவடிக்கைகளை எடுக்கும் அபிவிருததியடைந்து வரும் நாடுகளுக்கு சர்வதேச ஒத்துழைப்புக்களும் கிடைப்பது அவசியமாகும். புத்தபெருமானின் கற்பித்தல்கள் இலங்கையின் சுற்றாடல்களைப் பாதுகாக்க உயர்ந்த பட்ச ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.