இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தினால் 1979 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜனாதிபதி சினிமா விருது விழா எட்டு வருடங்களின் பின்னரே இவ்வாறு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய சினிமாத்துறையானது தற்போது 70 வருடங்களைப் பூர்த்தி செய்துள்ளதுடன் 2015 ஆம் ஆண்டில் திரையிடப்பட்ட திரைப்படங்களுக்காக இதன்போது விருதுகள் வழங்கப்பட்டன.
நாட்டில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் செயன்முறையில் கலைஞர்களால் விசேட பங்களிப்பினை வழங்க முடியுமென ஜனாதிபதி அவர்கள் இதன்போது தெரிவித்தார்.
அதேபோல் சினிமாத்துறையின் எதிர்கால முன்னேற்றத்திற்காகவும் பல கலைஞர்கள் தமது வாழ்வின் பிற்பகுதியில் அனுபவிக்கும் துயரமான நிலைமைக்கு தீர்வு காண்பதற்காகவும் தயாரிக்கப்பட்ட செயற்திட்டங்களை இவ்வருட நடுப்பகுதியிலிருந்து செயற்படுத்த முடியுமென தான் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
சினிமாத்துறையின் வளர்ச்சி மற்றும் கலைஞர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடு நடைபெற்ற இந்த விருது விழாவில் 21 அடிப்படை விருதுகளும், 09 முற்போக்கு செயற்பாடுகளுக்கான விருதுகளும், 06 சுவர்ண சிம்ம விருதுகளும், 07 விசேட ஆற்றல்களுக்கான விருதுகளும், நடுவர் சபையின் விசேட விருது ஒன்றும் வழங்கப்பட்டன.
பிரசன்ன விதானகேவின் தயாரிப்பில் 2015 ஆம் ஆண்டில் திரையிடப்பட்ட “ஒப நெதுவ ஒப எக்க” திரைப்படம் சிறந்த திரைப்பட விருதைப் பெற்றதுடன், அத்திரைப்படத்தில் நடித்த சியாம் பெர்ணாண்டோ சிறந்த நடிகர் விருதையும், அஞ்சலி பட்டேல் சிறந்த நடிகை விருதையும் ஜனாதிபதி அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்கள்.
அமைச்சர்களான கயந்த கருணாதிலக்க, அகில விராஜ் காரியவசம், டி. எம். சுவாமிநாதன், பிரதி அமைச்சர்களான ரஞ்சன் ராமநாயக்க, கருணாரத்ன பரணவிதான, தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தீபால் சந்ரரட்ண ஆகியோரும், கலைஞர்கள் பலரும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.
{jathumbnail off}