பெரும்பாலான மாகாணங்களில் பிரிவெனா கல்வி பெறும் பிக்குமாருக்கு தேவையான தளபாடங்கள்கூட இல்லாதிருப்பது பாரதூரமான பிரச்சினை என்று ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் 30ம் திகதி பிற்பகல் தேசிய பௌத்த அறிஞர் சபை கூடியபோது ஜனாதிபதி அவர்களது கவனத்துக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டது.
இந்த ஆண்டு மே மாதம் இலங்கையில் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ள சர்வதேச வெசாக் கொண்டாட்ட ஏற்பாட்டுகள் தொடர்பிலும் இதன் போது நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.
அதனோடிணைந்ததாக நாடு முழுவதும் உள்ள விகாரைகளில் இருக்கும் ஓலைச்சுவடிகளின் பட்டியலை பாதுகாக்கும் திட்டம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன் புத்த ஜயந்தி நூல் தொடரை பாதுகாத்து இணையதளத்தில் பதிவு செய்தல், தர்மாசிரியர் பரீட்சையில் சித்தியடைந்தோருக்கு தொழில் வழங்கும் முறைமையை உருவாக்குதல், பிக்குமார் அரச சேவையில் இணையும் போது ஏற்படும் சிக்கல்கள், பெண் துறவியரின் கல்விக்கான நிலையான திட்டத்தை உருவாக்குதல், பிரிவெனா ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் நிறுவனம் மற்றும் தேரவாத பௌத்த நிலையத்தை நிறுவுதல் ஆகிய விடயங்கள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
வண பேராசிரியர் கொடபிட்டியே ராகுல தேரர், வண பேராசிரியர் கல்லேல்லே சுமனசிறி தேரர், வண கலாநிதி அக்குறட்டியே நந்த தேரர், வண பேராசிரியர் அகலகட சிறிசுமண தேரர், வண பேராசிரியர் விஜித்தபுர விமலரதன தேரர், வண பேராசிரியர் ஒக்கம்பிட்டியே பஞ்ஞாசார தேரர், வண பேராசிரியர் நாபிரத்தங்கடவல ஞானசார தேரர், வண கலாநிதி கடவத்தகம பியரதன தேரர் உள்ளிட்ட பௌத்த துறவியர் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.