தேசத்தின் பெருமை மற்றும் தாய்நாட்டின் மாண்பினை உயர்த்துவதற்காகவும், தேசத்தின் உன்னதமான கௌரவம் மற்றும் முன்னேற்றத்துக்காகவும் தம்மை அர்ப்பணித்த முதன்மையான இலங்கையர்கள் தேசிய விருதுகளைப் பெற்றனர்.
12 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறும் இந்த தேசிய விருது வழங்கும் விழாவில் இலங்கைக்காக சிறப்பாக சேவையாற்றியுள்ள 89 இலங்கை பிரஜைகளுக்கு ஜனாதிபதி அவர்களால் விருதுகள் வழங்கப்பட்டன.
இலங்கையருக்கு வழங்கப்படும் அதியுயர் விருதான ஸ்ரீலங்காபிமான்ய விருது காலஞ்சென்ற பண்டித் டபிள்யு.டீ. அமரதேவ அவர்களுக்கு வழங்கப்பட்டது.
விசேடமாக இலங்கைக்கும், பொதுவாக மனிதகுலத்துக்கும் ஆற்றிய உன்னத மற்றும் சிறப்பான சேவைக்காக இலங்கையர்கள் அல்லாத நபர்களுக்கு வழங்கப்படும் தேசிய விருதான ஸ்ரீலங்கா ரஞ்சன விருது, கலாநிதி சரத் டி குணபால, சித்தார்த்த காவுல் ஆகியோருக்கு ஜனாதிபதி அவர்களால் வழங்கப்பட்டது.
நாட்டிற்காக ஆற்றிய அதி உன்னதமான, பாராட்டத்தக்க சேவைக்கு உபகாரமாக 10 தேசமான்ய விருதுகள் வழங்கப்பட்டன. திரு. அப்பாஸ் அலி அக்பர் அலி, பேராசிரியர் கொல்வின் குணரத்ன, கலாநிதி தேவநேசன் நேசைய்யா, திரு.நந்ததாச ராஜபக்ஸ, பேராசிரியர் கே.எம். த சில்வா, லதா வல்பொல அம்மையார், திரு.மினேக்க பிரசந்த விக்கிரமசிங்க, பேராசிரியர் ப்ரியாணி சொய்ஸா, திரு. அமரதாச குணவர்தன, திரு.திஸ்ஸ தேவேந்ர ஆகியோரே ஜனாதிபதி அவர்களிடமிருந்து விருதினை பெற்றுக்கொண்டனர்.
திரு. தேவநாயகம் ஈஸ்வரன், மருத்துவ கலாநிதி லக்ஷ்மன் வீரசேன, திரு. லெஸ்லி ஷெல்டன் தேவேந்ர, கெப்டன் எம்.ஜி. குலரத்ன, சுசந்திகா ஜயசிங்க அம்மையார், திரு.ரஞ்சன் மடுகல்ல, திரு. ஷான் விக்ரமசிங்க, கலாநிதி பப்ளிஸ் சில்வா, திரு.டப்ளியு.கே.எச்.வெகபிட்டிய ஆகிய 09 பேர் ஜனாதிபதி அவர்களிடமிருந்து தேசபந்து விருதினைப் பெற்றுக்கொண்டனர்.
பேராசிரியர் நிமல் சேனாநாயக, கலாநிதி பந்துல விஜயரத்ன, மருத்துவ கலாநிதி கொல்வின் சமரசிங்க, பேராசிரியர் ஹரேந்ர த சில்வா, பேராசிரியர் த சில்வா டி.கே.நிமல் பத்மசேன, தகைசார் பேராசிரியர் எரல் றட்கிளிப் ஜான்ஸ், பேராசிரியர் லால் சந்ரசேன, தகைசார் பேராசிரியர் எம்.டப்ளியு.ஜே.ஜி. மென்டிஸ், பேராசிரியர் எம்.எம்.ஆர். வாஸ் ஜயசேகர, பேராசிரியர் சரத் கொடகம, பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஆகிய 11 பேர் ஜனாதிபதி அவர்களிடமிருந்து வித்தியாஜோதி விருதினை பெற்றுக்கொண்டனர்.
இதற்கு மேலதிகமாக 22 கலாகீர்த்தி விருதுகளும், 07 ஸ்ரீலங்கா சிகாமணி விருதுகளும், 10 வித்தியாநிதி விருதுகளும், 13 கலாசூரி விருதுகளும், 02 ஸ்ரீலங்கா திலக விருதுகளும், 02 வீரபிரதாப விருதுகளும் வழங்கப்பட்டன.
1986ஆம் ஆண்டின் தேசிய விருது சட்டத்துக்கமைய உவந்தளிக்கப்படும் இந்த விருதுகளுக்கு தகுதியானோர் அந்தந்த நபர்கள் மற்றும் பொது அமைப்புக்களால் அனுப்பப்படும் முன்மொழிவுகள் மற்றும் அறிஞர்களான நடுவர் குழுவினால் பரிசீலிக்கப்பட்டே தெரிவு செய்யப்பட்டனர். இம்முறை விருதுக்காக 426 விண்ணப்பங்கள் கிடைத்திருந்தன.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், புத்திஜீவிகள், கலைஞர்கள் உள்ளிட்ட பிரமுகர்களும் விருது விழாவில் கலந்து கொண்டனர்.
{jathumbnail off}