நாட்டின் முன்னேற்றத்திற்காக பல்வேறு துறைகளில் பங்களிப்பு செய்த இலங்கையர்களை பாராட்டும் நோக்கில் இந்த விருது விழா நடைபெறுகிறது. 12 வருடங்களின் பின்னர் நடைபெறவுள்ளது ஸ்ரீ லங்காபிமானிய விருது' இவர்களுக்கு வழங்கப்படும்.
இது நாட்டின் உயர் விருதுகளில் ஒன்றாகும். நாட்டிற்காக மிகச் சிறந்த புகழ்மிக்க சேவையை வழங்கியமைக்காக ஒருவருக்கு மாத்திரம் இந்த விருது வழங்கப்படும்.
இது தவிர 10 பேருக்கு தேசமான்ய விருதுகளும் 9 பேருக்கு தேசபந்து விருதும் 11 பேருக்கு வித்யாஜோதி விருதும் வழங்கப்படும். 2 பேருக்கு ஸ்ரீலங்கா ரஞ்ஜன விருதும், 22 பேருக்கு கலா கீர்த்தி விருதும், 7 பேருக்கு ஸ்ரீலங்கா சிகாமணி விருதும், 10 பேருக்கு வித்தியாநிதி விருதும், 14 பேருக்கு கலாசூரி விருதும், 2 பேருக்கு ஸ்ரீலங்கா திலக விருதும் 2 பேருக்கு வீர பிரதாப விருதும் வழங்கப்படவுள்ளது.