இதன்போது உன்னதமான சேவையை மேற்கொண்ட ஜனாதிபதி உள்ளிட்ட 90 இலங்கையர்களுக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் பீ.பீ.அபயகோன் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் இது தொடர்பாக ஜனாதிபதி செயலாளர் அபயகோன் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் 1986ம் ஆண்டின் தேசிய விருது வழங்கும் சட்டத்திற்கு அமைவாக இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன என்று கூறினார்.

தனிப்பட்ட நபர்களினாலும் பொது அமைப்பினாலும் அனுப்பிவைக்கப்பட்ட பெயர் பட்டியலில் புத்திஜீவிகளைக்கொண்ட நடுவர்கள் சபையினால் பரிசோதனைக்குட்படுத்தப்;பட்டு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த விருதுகளுக்காக 426 பேரின் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படட்டிருந்தன. இவர்களில் 90 பேர் விருதுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக செயலாளர் குறிப்பிட்டார்.

20ம் திகதி நடைபெறும் இந்த விருது வழங்கும் வைபவத்தில் ஸ்ரீலங்கா தேசமானிய ஸ்ரீலங்காயி மானிய தேசபந்து வித்யாஜோதி ஸ்ரீலங்கா ரஞ்சன கலாகீர்த்தி உள்ளிட்ட பல்வேறு விருதுகள் ஜனாதிபதியினால் வழங்கப்படவுள்ளதாக அபயகோன் மேலும் தெரிவித்தார்.

பல்வேறு அமைப்புக்கள் மற்றும் தனிப்பட்டவர்களினால் இவ்வாறான விருதுகள் வழங்கப்பட்டபோதிலும் அவற்றிற்கு உத்தியோகபூர்வ அங்கீகாரம் இல்லை. உத்தியோகபூர்வ அங்கீகாரம் ஜனாதிபதியினால் வழங்கப்படும் இந்த விருதிற்கு மாத்திரமே இருப்பதாக இந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் றோகன திசாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நிமல் போபகே மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர் ஒஸ்ரின் பெர்னான்டோ ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.