தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக வரலாற்றில் முக்கியத்துவம் மிக்க புரட்சிக்கு புத்துயிர் அளிக்கப்பட்டமை தவறு என்று கருதி ஏகாதிபத்தியவாதிகளால் தேசத்துரோகிகள் என முத்திரை குத்தப்பட்டவர்களை உண்மையான நாட்டுப்பற்றுள்ளவர்களாக பிரகடனப்படுத்தும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம் பெறவுள்ளது.
இதுதொடர்பான வைபவம் இன்று மாலை 4.00மணிக்கு கண்டி மகுள் மடுவவில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அரசாங்க தகவல் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
1818ம் ஆண்டு ஊவ வெல்லஸ்ஸ புரட்சியில் கலந்துகொண்டதினால் மரணதண்டனை விதிக்கப்பட்டு உயிரிழந்த மற்றும் நாடு கடத்தப்பட்ட சுமார் 84 பேர் நாட்டுப்பற்றுள்ளவர்களாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பு ஜனாதிபதியினால் இதன்போது கைச்சாத்திடப்படவுள்ளது.
இந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க இந்த நிகழ்வில் மல்வத்து அஸ்கிரி பீடங்களை சேர்ந்த மகாநாயக்கர்கள் மாகாசங்கத்தினர் சபாநாயகர் தலைமையிலான அமைச்சர்கள் அரச அதிகாரிகள் இந்த வீரர்களின் குடும்பங்களைச்சேர்ந்த அங்கத்தவர்கள் உள்ளிட்டே கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த வைபவம் இன்று மாலை 4.00 மணிமுதல் ரூபவாஹினி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளது.