இலங்கையை பௌத்த இராச்சியமாக நாம் பிரகடனம் செய்யப் போவதில்லை என்று பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை பதில் அமைச்சர் கருணாரத்ன பரணவிதான (No, we are not going to declare the Buddhism as the State religion) தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை பதிலமைச்சர் கருணாரத்ன பரணவிதான செய்தியாளர் ஒருவர் புதிய அரசியல் யாப்பில் இலங்கையை பௌத்த இராச்சியமாக பிரகடனம் செய்யும் திட்டம் உண்டா? (Is there any attempt to declare the Buddhism as the State religion? ) என்று கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்தியாவில் செயற்பட்டுவரும் இந்துமத அமைப்பான சிவசேனா அமைப்பு தனது கிளையை வவுனியாவில்அமைத்திருப்பதாக கேட்ட கேள்விக்கு பதிலளித்த பதிலமைச்சர் கருணாரத்ன பரணவிதான இவ்வாறான சேனாக்கள் ( இத்தகைய அமைப்புக்கள்) பல்வேறு இடங்களில் உண்டு. ஆனால் அவற்றில் ஆட்கள் தான் இல்லை என்று தெரிவித்தார் .

கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட மதத்தலைவர்கள் பௌத்தத்திற்கு அரசியல் யாப்பில் முக்கிய இடம் வழங்கப்படவேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர். இதனை அடிப்படையாகக் கொண்டே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசியல் யாப்பு தொடர்பாக தெரிவித்திருந்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அரசியல் யாப்பில் பௌத்த மதம் தொடர்பில் முரண்பட்ட கருத்தை தெரிவித்திருப்பதாக செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் ;

அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சிலர் முரண்பட்ட கருத்துக்களை தெரிவிக்கின்றனர். அப்படியொன்றுமில்லை. அரசியல் யாப்பு வரைவு இன்னும் இடம்பெறவில்லை. தற்பொழுது அது ஆரம்ப கட்டத்திலேயே இருந்து வருகின்றது. அரசியல் யாப்பு குறித்து அரசியல் பேரவையே தீர்மானிக்கும்.

புதிய அரசியல் யாப்பு குறித்து பொதுமக்கள் மத்தியல் கருத்து பரிமாறல் இடம்பெறவேண்டும். மக்கள் மத்தியில் இதுதொடர்பில் தெளிவிருக்க வேண்டும். இதற்காகதான் நாம் முயற்சித்து வருகின்றோம்.

அரசியல் யாப்பு முன்வைக்கப்பட்ட பின்னர் தான் பிரச்சினைகள் ஏற்படும் இதற்காக தான் நாம் மக்கள் மத்தியில் கருத்து பரிமாற்றம் வேண்டுமென்கின்றோம். அப்படி செய்யாவிட்டால் நீண்டகாலம் நிலைத்திருக்க முடியாது. இதற்கு ஏகாதிபத்தியம் இருக்க வேண்;டும் அப்போது தான் சாத்தியமாகும் அரசியல் யாப்பு தொடர்பில் ஒவ்வொரு மக்களுக்கும் தெளிவு இருக்க வேண்டும்.

அரசியல் யாப்பு தொடர்பில் தற்பொழுது சர்வஜன வாக்கு குறித்து கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. சர்வஜென வாக்கெடுபபு தேவையா? இல்லையா? என்பது குறித்து அரசியல் யாப்பு முன்வைக்கப்பட்ட பின்னரே அது தொடர்பாக அறியமுடியும் என்று பதில் அமைச்சர் கருணாரத்ன பரணவிதான பதிலளித்தார்.