பொதுமக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த தகவல்களை முழுமையாக பொதுமக்களுக்கு வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.

தகவல் அறியும் சட்டத்தை அரசாங்கம் தற்பொழுது நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனை வலுவான முறையில் முன்னெடுப்பதற்கு சிவில் அமைப்புக்கள் பொதுமக்களின் பங்களிப்பு முக்கியமானது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்.

தகவல் அறியும் சர்வதேச தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சுடன் இணைந்து அரசாங்க தகவல் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மகாநாடு இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமானது ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இங்கு உரையாற்றினார்.

கொழும்பு ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் இன்று ஆரம்பமான இந்த மாநாடு தகவல் அறிந்து கொள்வதும் ஊடக மறுசீரமைப்பும் என்ற தலைப்பில் நாளை வரை நடைபெற உள்ளது. சார்க் பிராந்திய மற்றும் சர்வதேச நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த விசேட பிpரதி நிதிகள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி மேலும் இங்;;கு உரையாற்றுகையில் இலங்கையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அமுல்படுத்தும் செயற்பாடுகளை மிகவும் ஆக்கபூர்வமானதாகவும் கூடிய பயனுள்ளதாகவும் மேற்கொள்ள வழிவகை செய்வதறகு இந்த மாநாடு பெரிதும் உதவும். தகவல் அறியும் சட்டத்தை அமுல்படுத்தும் போது எதிர்நோக்கவேண்டிய சவால்களை வெற்றிகொள்வதற்கு இதில் கலந்துகொள்ளும் தெற்காசிய நாடுகளின் அனுபவங்கள் நாட்டுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

அரசாங்க துறையிலுள்ள பெரும்பாலான அதிகாரிகள் ஊழியர்கள் தமக்குள்ள பொறுப்பிலும் பார்க்க ஏனைய விடயங்களிலேயே கூடுதலான அக்கறை கொண்டுள்ளனர். இவ்வாறான நிலை சமீபகாலமாக காணக்கூடியதாக உள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். தமது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றினால் பொதுமக்களுக்கு உரியமுறையில் நன்மை அமையும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.