சர்வதேச தகவல் அறியும் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பில் நடைபெறவுள்ளது.

பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சுடன் இணைந்து அரசாங்க தகவல் திணைக்களம் இதனை ஏற்பாடு செய்துள்ளது. மாநாடு கொழும்பு ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் செப்டெம்பர் 28ம், 29ம் திகதிகளில் தகவல் அறிந்து கொள்வதும் ஊடக மறுசீரமைப்பும் என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று மாலை இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடக துறை பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான இந்த விடங்களைத் தெரிவித்தார்.,

அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்ககலன்சூரியமற்றும்நிர்வாகபணிப்பாளர்.ஹில்மிமுஹம்மத்ஆகியோரும்இதில்கலந்துகொண்டனர்.

நாட்டில் ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி என்பவற்றை அடித்தளமாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்டுவரும் அரசியல் கலாசாரத்தை நிலைநாட்டுவதற்குத் தேவையான ஊடகத்துறை மறுசீரமைப்புக்கு ஆக்கபூர்வமான பயனுள்ள கலந்துரையாடல் இதில் இடம்பெறும். தெற்காசிய ஐரோப்பிய மற்றும் கனடா முதலான நாடுகளில் இருந்து வருகைதரும் ஊடகத்துறை வல்லுனர்களின் அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளுவதற்கு இந்த மகாநாடு பெரிதும் உதவும் என்றும் பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான கூறினார்.