ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் விசேட விருதை வழங்கி கௌரவித்துள்ளது
தென்கிழக்காசிய பிராந்திய பொதுச் சுகாதார மேம்பாட்டு சிறப்பு விருதை உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்காசிய பணிப்பாளர் கலாநிதி பூனம் சிங் நேற்று (5) ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியிடம் கையளித்தார். இலங்கையின் சுகாதார மேம்பாட்டிற்கான ஜனாதிபதி ஆற்றிய பங்களிப்பை பாராட்டிக் கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
மதுபானம், சிகரெட் போன்றவற்றை முறையாக கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தை இதன் போது கலாநிதி சிங் பாராட்டி உரைநிகழ்த்தினார்.