2016 இந்துசமுத்திர மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூர் சென்றுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கைத் தூதுக் குழுவினருக்கு இதன்போது மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.


சிங்கபூர் ஷங்றிலா ஹோட்டலில் நேற்றிரவு (1) 2016 இந்துசமுத்திர மாநாடு ஆரம்பமானது மாநாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார்.

இந்து சமுத்திர வலயப் பாதுகாப்பு, பொருளாதாரம், கலாசாரம், சுற்றாடல் உட்பட பல்வேறு விடயங்கள் பற்றி இதன்போது கவனம் செலுத்தப்படுகிறது. வர்த்தகம், முதலீடு, கலாசார உட்பட பல்வேறு துறைகள் தொடர்பாக கூட்டத்தொடர்களும் இதற்கு அமைவாக நடைபெறுகின்றன.

இதே வேளை 2016 இந்துசமுத்திர மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றுவதற்காக அழைக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வருகை மாநாட்டை வலுவூட்டுவதாக இந்திய ராஜாங்க வெளிவிவகார அமைச்சர் எம்.ஜெ.அக்பர் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து அவர் கலந்துரையாடினார். பாதுகாப்பு, நல்லிணக்கம் என்பனவற்றை உறுதிப்பத்துவதற்காக இலங்கை அரசாங்கம் காட்டும் அர்ப்பணிப்புக்களையும் அவர் பாராட்டிப் பேசியுள்ளார்