கடந்த ஒன்றரை வருட காலப்பகுதியில் இலங்கையின் சகல துறைகளிலும் எட்டப்பட்ட முன்னேற்றத்தை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்கீ மூன் வரவேற்றுள்ளார். எதிர்கால அபிவிருத்திக்காக ஐக்கிய நாடுகள் சகல உதவிகளையும் வழங்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் செயலாளர் நாயகம் உறுதி தெரிவித்துள்ளார்.


தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் சுதந்திரமும் ஜனநாயகமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் இலங்iகில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

காலிக்கு மேற்கொண்ட விஜயதிதின் பேபாது இளைஞர்களுடான கலந்துரையாடலில் இளைய சமூதாயத்தில் சிந்தனையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து அறிந்து கொள்ள முடிந்ததாக ஐ.நா செயலாளர் நாயகம் இந்த சந்திப்பின் போது சுட்டிக்காட்டியுள்ளார்
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்கீ மூன் நேற்று (01) ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அரசியல் யாப்பின் மீதான திருத்தங்களுக்கான அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை பற்றி ஜனாதிபதி விளக்கம் அளித்தார். அவ்வாறே, மீள்குடியேற்ற புனர்வாழ்வு நடவடிக்கைகள் பற்றியும், காணிகளை விடுவித்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான செயற்பாடுகள் பற்றியும் அவர் விபரித்தார்