அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் திரு. பான் கி மூன் அவர்கள் தமது பாரியார் திருமதி. பான் சூன் - ரெக் அவர்களுடன் சேர்ந்து 2016 ஆகஸ்ட் மாதம் 31 ஆந் திகதியிலிருந்து செப்டம்பர் 02 ஆந் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்யவூள்ளார்.

செயலாளர் நாயகம் மியன்மாரிலிருந்து ஆகஸ்ட் 31 ஆந் திகதி சாயந்தரம் இலங்கைக்கு வந்து சேருவார் எனவூம் செப்டம்பர் 02 ஆந் திகதி இல்ஙூகையிலிருந்து இரவூ நேரத்தில் சீனாவிற்கான பு 20 உச்சிமாநாட்டில் பங்கு பற்றுவதன் பொருட்டு புறப்பட்டுச் செல்லுவார் எனவூம் எதிர்பார்க்கப்படுகின்றது.

செயலாளர் நாயகம் அவர்கள் ஆகஸ்ட் 31 ஆந் திகதியன்று கொழும்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களைச் சந்திப்பார். அவர் செப்டம்பர் 01 ஆந் திகதியன்று சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களையூம் சந்திப்பார்.

செயலாளர் நாயகம் அவர்கள் செப்டம்பர் 01 ஆந் திகதியன்று காலிக்கு விஜயம் செய்வார். அவர் அங்கு ‘நல்லிணக்கமும் ஒருங்கிணைந்து வாழ்தலும் இளைஞர்களின் வகிபாகம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் நடாத்தப்படவூள்ள நிகழ்ச்சியொன்றிலும் பங்குபற்றுவார்.

செப்டம்பர் 02 ஆந் திகதியன்று செயலாளர் நாயகம் அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வாரென்பதுடன் அங்கு அவர் வடமாகாணத்தின் ஆளுநர் ரெஜினோல்ட் குறே மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் திரு. ஆர். சம்பந்தன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி உறுப்பினர்களைச் சந்திப்பார் என்பதுடன் அவர் மீள்குடியேற்ற அமைவிடம் ஒன்றுக்கும் விஜயம் செய்வார்.

இவ்விஜயத்தின் போது செயலாளர் நாயகம் அவர்கள் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்களையூம் உள்ளடக்கி பல அமைச்சரவை அமைச்சர்களையூம் பாராளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களையூம் அரசியல் கட்சித் தலைவர்களையூம் சிவில் சமூக பிரதிநிதிகளையூம் சந்திப்பார்.

சருவதேச தொடர்புகளுக்கும் திறமுறைக்கற்கைகளுக்குமான லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்தின் தவிசாளரினாலும் அச்சபையினாலும் விடுவிக்கப்பட்டுள்ள அழைப்பின் பேரில் செயலாளர் நாயகம் அவர்களின் செப்டம்பர் 02 ஆந் திகதியன்று கொழும்பில் நடாத்தப்படும் பொது நிகழ்ச்சியொன்றில் நிலைபேறான அபிவிருத்திக்காக சமாதானமானவையூம் உள்ளடக்கப்படத் தக்கவைகளுமான சமூகங்கள் மீது தீவிர கவனம் செலுத்தி குறிப்பாக இலக்கு 16 மீது அதாவது பெயரளவில் ‘சமாதானத்தை நிலைபேறன நிலையில் வைத்திருத்தல் - நிலைபெறத்தக்க அபிவிருத்தி இலக்குகள்’ மீது உரை நிகழ்த்துவார்.