ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாராளுமன்ற வாழ்க்கைக்கு 10,000 நாட்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு நாட்டுக்கும் பொதுமக்களுக்கும் நல்லாசி வேண்டி நல்லாசி வழிபாட்டு நிகழ்வொன்று கடந்த 02 ஆம் திகதி காலை வரலாற்று சிறப்பு மிக்க களனி ரஜ மஹா விகாரையில் நடைபெற்றது. 

களனி ரஜ மஹா விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி முதலில் மதவழிபாடுகளில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து நல்லாட்சி வழிபாட்டு நிகழ்விலும் கலந்து கொண்டார். களனி ரஜ மகா விகாராதிபதி பேராசிரியர் சங்கைக்குரிய கொள்ளுப்பிட்டி மஹிந்த சங்கரக்கித்த தேரரின் ஆலோசனைக்கு அமைவாக வெகுசன ஊடகத்துறை அமைச்சு இந்த பிங்கம நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.

கம்பஹ மாவட்ட பிரதம சங்கநாயக்கர் சங்கைக்குரிய கொட்டுவில விமலகித்தி நாயக்கதேரர், ஸ்ரீபாதஸ்தானாதிபதி சங்கைக்குரிய பெங்கமுவே தம்மதித்த நாயக்கதேரர், சங்கைக்குரிய கொட்டபொல அமரகித்தி நாயக்கதேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர்கள், அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள், பெருந்தொகையான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 1989 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.