சிங்கப்பூரின் பிரதிப் பிரதமரும் பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகள் இணை அமைச்சருமான திரு. தமன் சன்முகரத்னம், தூதுவர் கோபினாத் பில்லை, தலைவர், தெற்காசிய நடவடிக்கை தொடர்பான ஆய்வு மையம் மற்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், அன்பார்ந்த பிரதிநிதிகளே நண்பர்களே.

தெற்காசிய டயஸ்போரா மாநாட்டில் பிரதான உரையை நிகழ்த்துவதற்கு சந்தர்ப்பத்தை வழங்கியமையையிட்டு தெற்காசிய நடவடிக்கை தொடர்பான ஆய்வு மையம் மற்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்திற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கிழக்கு மற்றும் மேற்கிற்கும் இடையே பிரதான இடைப் பிரிவாக கடந்த 51 வருடங்களுள் சிங்கப்பூர் பரிணாமித்துள்ள மூலோபாய நிலையை இவ் நிகழ்வு கோடிட்டுக் காட்டுகின்றது. தெற்காசியர்களாகிய நாம் இவ் நிகழ்விற்காக தென்கிழக்கு ஆசியான் தேசத்தில் கூடுவது சிங்கப்பூரினது தூரநோக்கு மற்றும் திறமைக்கு ஓர் சான்றாகும். உலக சனத்தொகையில் 23 % வீதமானவர்கள் வாழ்கின்ற, அதே போன்று சர்வதேச பொருளாதாரத்திற்கு அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற, தெற்காசியாவின் எதிர்காலத்தைப் பற்றி ஆர்வம் காட்டும் அரச மற்றும் தனியார்த் துறையைச் சேர்ந்த பல நிறுவனங்களை ஒன்று திரட்டிய இவ்வாறான ஓர் சந்தர்ப்பத்திற்கு கலந்து கொள்ளக் கிடைத்தமையை இட்டு உண்மையிலேயே சந்தோசமடைகிறேன்.

பண்டைய குறிப்புகளின் படி தெற்காசியாவிலிருந்து வந்த மக்கள் 25 நூற்றாண்டுகளுக்கு முன் முதன் முதலாக சுவர்ணபூமிக்கு வந்துள்ளனர். அவர்கள் வர்த்தகர்கள், அசோகர் பேரரசரின் தூதுவர்கள், ஜோதிடர்கள், குருக்கள், மாலுமிகள் என புறப்பட்டு வந்தவர்கள் ஆவர். கௌண்டிய எனும் இந்திய பிராமணர் ஒருவர் இந்தியாவின் பண்டைய பல்லவ இராச்சியத்துடன் தொடர்புபட்ட புனான் இராச்சியத்தை நிறுவினார். பல நூற்றாண்டுகளாக இருந்து வந்த பொது குடும்ப தொடர்புகள் பல்லவர்களை இலங்கை இராச்சியத்துடன் இணைத்து இருந்தது. தெற்காசியா பண்டைய உலகில் முன்னேற்றத்தின் உச்சத்தில் இருந்தது. இன்று 1.7 பில்லியன் மக்கள் வாழ்கின்றார்கள் எனினும் 2050 இல் 2.3 பில்லியன் மக்கள் வாழும் என எதிர்பார்க்கப்படும். தெற்காசியா உலகின் மிக உயர்ந்த வளர்ச்சி உடனான ஒரு வசீகரிக்கும் வளர்ச்சி விகிதம் கொண்ட பிராந்தியமாக தெற்காசியா விளங்கும் என உலகவங்கி சுட்டிகாட்டியுள்ளது.

எண்ணெய் விலை குறைவு மற்றும் அதிகரித்த உள்ளூர் கேள்வி காரணமாக தெற்காசியாவின் வளர்ச்சி வீதம் உயர்நிலையில் இருந்த போதிலும், விசேடமாக சிறிய பொருளாதாரத்தைக் கொண்ட தெற்காசிய நாடுகளில் உள்நாடு சார்ந்த வளர்ச்சியில் வரம்புகள் இருப்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே தெற்காசிய அரசாங்கங்கள் திறந்த பொருளாதாரம் மற்றும் வெளிநாடுகளுடனான வர்த்தக முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் வேறுவிதத்தில் கூறுவதாயின் நெருக்கமான ஒருங்கிணைப்பிலும் கவனம் செலுத்துகின்றன.

மேலும் கூறுவதாயின் தெற்காசிய வணிகங்கள் ஒழுங்கமைப்பு முறைகளை தளர்த்துதல், உலக வரி விதிப்பு, நிதி முகாமைத்துவம் மற்றும் வணிக முறைகளுக்குப் பதிலளிக்க வேண்டும். பிராந்தியம் முழுவதும் உள்கட்டமைப்பு அபிவிருத்திக்கான பொதுமுதலீட்டை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 3.5%. இருந்து 7.5 % ஆக அதிகரிக்கும் வழிகளை நாம் தேட வேண்டும். ஒரு கட்டமைக்கப்பட்ட மற்றும் சீரான சீர்திருத்த நிகழ்ச்சி நிரல், பெருநிலை பொருளாதார ஸ்திரத்தன்மை, வரவு செலவு பற்றாக்குறையைக் குறைத்தல், தொழில் புரிவதற்கு சுலபமான முறையை மேம்படுத்துவது மற்றும் முதலீட்டுக்கான நிதியினை ஊக்குவித்தல் ஆகியன திறவு கோலாகும்.

இலங்கை, தெற்காசியாவில் பொருளாதார தாராள மயமாக்களில் முன்னோடியாகும் - கெரிடேஜ் பவுண்டேசன் நிறுவனம் பிராந்தியத்தில் அதிக பொருளாதார சுதந்திரம் உள்ள நாடு இலங்கை என சுட்டிக்காட்டியுள்ளது. 2015 ஆம் ஆண்டில் இலங்கை மக்கள், நீண்டகால கவனமின்றிய தொலை நோக்கற்ற அரசியல் மற்றும் பொருளாதார கொள்கைகளை தவிர்த்து, நாட்டின் செழிப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்த ஒரு தேசிய ஐக்கிய அரசாங்கத்தை உருவாக்க வாக்களித்தனர். இந்த ஆணை நீண்ட தாமதத்திற்குள்ளான சீர்திருத்தங்களை அமைத்துள்ளது. இந்த விசேட தன்மை கொண்டஅணுகூலங்களை ஏந்திய எமக்கு சாமர்த்தியம், நிலையான பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்ட பாரிய அளவிலான சாத்தியங்களை ஏற்படுத்துவதற்கான திறன் எம்மிடையே உள்ளது. நடைமுறைக்கணக்கில் உள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்தி புதிய வெளிநாட்டுச் செலாவணி சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி 2020 இல் வரவு செலவு பற்றாக்குறையை 3.5 % இற்குக் குறைக்க எண்ணியுள்ளோம்.

மூன்று துறைமுகங்கள் மற்றும் 02 சர்வதேச விமான நிலையங்களுடன் எமது இடத்தினை ஒரு போக்குவரத்து மையமாக பயன்படுத்துவது எமது மூலோபாயத்தின் முக்கியகூறு ஆகும். மேலும் வணிக கப்பல் மற்றும் வணிக விமான மையமாகவும் இது இருக்கும். போக்குவரத்து மையம் மற்றும் எமது மறுசீரமைப்பு கொள்கைகள், வியாபாரம் செய்வதனை இலகுவாக்குவதற்காகும். மேலும் வரிச்சலுகை இலங்கையை வியாபார மையமாக்கும். உற்பத்தி மற்றும் சேவைகள் இலங்கை சர்வதேச பெறுமதி சேர் சங்கிலியின் ஒர் பகுதியாவதற்கு நன்மை பயக்கும்.

டிஜிடல்பொருளாதாரம்

சர்வதேச சேவைகள் கூலிக்கமர்த்தும் முதல்தர 50 நாடுகளுள் இலங்கையும் ஒரு நாடாக ஏ டி கேர்ணி நிறுவனம் தரப்படுத்தியுள்ளது. அத்தோடு, க்லோபல் சேர்விஸஸ் சஞ்சிகை வளர்ந்து வரும் 50 நகரங்களுள் ஒன்றாக கொழும்பைத் தரப்படுத்தியுள்ளது. மோர்கன், கூகல், மைக்ரொஸொப்ட், கடார் விமான சேவை மற்றும் எமிரேட்ஸ் போன்றன இலங்கையின் IT/BPO சேவைகளில் உள்ளடங்கும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற வாடிக்கையாளர்களாகும்.

இலங்கையின் திறமை மிக்க மனித வளங்கள், இந்திய தொழில் நுட்பத்துடனான கிட்டிய தன்மை இலங்கையின் தொழில் நுட்பத்துறையின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு உதவும்.

சுற்றுலா

இலங்கையில் சுற்றுலா அபிவிருத்திற்கான சாத்தியங்கள் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை. காலி மாவட்டத்தில் அதிபெறுமதி கூடிய சுற்றுலாப் பயணிகளுக்கான உட்கட்டமைப்பு அமைப்பு அபிவிருத்தி உள்ளடங்கும். மத்திய மாகாண - மலைநாட்டுக்கான மேலதிக அபிவிருத்திகள் மற்றும் கிழக்கின் கடற்கரையோர அபிவிருத்தி அத்தோடு வடக்கின் நெடுந்தீவிற்கென உல்லாசப்படகு மற்றும் சொகுசான கப்பற்பிரயாணங்களும் ஆரம்பிக்கப்படும்.

அடுத்த 05 வருடங்களுள் மத்தளை விமான நிலையம் ஊடாக 10 இலட்சம் உல்லாச பிரயாணிகள் வருகை தருவார்கள்.

பின் தங்கிய உட்கட்டமைப்பு, வியாபார சூழல்,

கடல் கடந்த வியாபாரங்களை நடாத்துவதற்குத் தடையான கொள்கைகள் போட்டித் தன்மையை ஏற்படுத்துவதற்கு தடைகளாகுமென நாம் ஏற்றுக் கொள்கின்றோம். நாட்டின் கடல்,வான், தரைமார்க்கவழி, மின்சக்தி மற்றும் தொலைத்தொடர்பு வசதிகளை முழுமையாக மறுசீரமைக்கவென பௌதீக உட்கட்டமைப்புகளை மேற்கொள்வதற்காக பல சிறந்த வேலைதிட்டங்களை ஆரம்பித்துள்ளோம். இலங்கையை பிராந்திய போக்குவரத்து, வியாபார மற்றும் நிதி மையமாக மாற்றும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவாகவே இத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

விமானத் துறை மற்றும் கப்பற்துறை அபிவிருத்தியில் கொழும்புத் துறைமுகத்தை மூன்றாம் தர E தர பாரிய கப்பல்களை உள்வாங்கக் கூடிய வகையில் நவீனமயப்படுத்தலும் உள்ளடங்கும் கண்டி - கொழும்பு - அம்பாந்தோட்டை பிரதேசங்களை தனியார் முதலீடுகளுக்காக தயார்படுத்தும் பாரிய உட்கட்டமைப்புகள் பற்றி நான் உங்களுக்கு உரையாற்ற விரும்புகிறேன்.

நாட்டின் நகர இடப்பரப்பலை மீளமைக்கக்கூடிய வகையில் கண்டி - கொழும்பு - அம்பாந்தோட்டைக்கு எனப் பெரு அளவிலான பொருளாதார மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. அ. டொ $ 44 பில்லியன்களைக் கொண்ட மேல் மாகாண மகா நகரதிட்டங்கள் மேல்மாகணத்தின் நகரங்களை சர்வதேச மட்டதிற்கு உயர்த்தும். இலங்கையில் செயல் திட்டங்களை ஆரம்பிக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்த்து வசதி அளிக்கும் வகையில் இத்திட்டம் கொழும்பை வியாபார மற்றும் நிதிமையமாக மாற்றியமைக்கும்.

கண்டி பாரிய அபிவிருத்தி - வடமேல் கைத்தொழில் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி, மகாநகரம், அடுத்த 15 வருடங்களுள் அமுல்படுத்தப்படவுள்ள தெற்கு கைத்தொழில் மற்றும் சுற்றுலா வேலைத்திட்டம் மற்றும் அம்பாந்தோட்டை பொருளாதார கருத்திட்டங்களினுள் நிதிநகரம், போக்குவரத்து வசதிகள், கைத்தொழில் கொத்தணிகள் மற்றும் விஞ்ஞான தொழில்நுட்ப நகரம், கொழும்பு துறைமுக நகரதிட்டம், கடலிலிருந்து 269 ஹெக்டயார் நிலத்தினை மீளப்பெறல் ஆகியன இதனுள் அடங்கும்.

உத்தேச நிதி நகரம் துபாய் மற்றும் சிங்கப்பூர் நகரங்களுக்கிடையே வர்த்தக பாதைகளில் உள்ள இடைவெளியினை நிரப்பும் முகமாக நிலைபெறச் செய்யப்படும். சர்வதேச பல்தேசிய நிறுவனங்களின் இயக்கத்திற்கு வசதி அளிக்கும் வகையில் அதற்கே உரிய பொருளாதார மற்றும் வர்த்தக சட்டங்களை உள்ளடக்கிய விசேட நியாயாதிக்க அதிகாரம் கொண்டதாக கொழும்பு நிதிநகரம் "ஒரு நாடு இரு முறைமைகள்" எனும் உத்தேச எண்ணக்கருவின் கீழ் வியாபார மற்றும் நிதிமையமாக வளர்ச்சியடையும்.

தென் இலங்கையில் துறைமுகத்துடன் அமைந்துள்ள அம்பாந்தோட்டை பொருளாதார கருத்திட்டம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், கைத்தொழில்பேட்டைகளை அமைக்கும் முதலீடுகளை எதிர்பார்க்கின்றது. அதேபோன்று, இலங்கையின் கிழக்கில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம் மற்றும் தற்போது அமுலில் உள்ள பாரிய எரிசக்தி துறை திட்டங்களுக்கு மத்திய நிலையமாக இருக்கும் திருகோணமலை மகாநகரமாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. சிறந்த தரைப்பாதை தொடர்பு மூலமாக போக்குவரத்து வசதிகளை வழங்குவதில் கவனம் செலுத்தப்படுகின்றது. உண்மையிலே, மேல் - தென் மாகணங்களை இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலை இலங்கையின் இரு பிரதான துறைமுகங்களை இணைக்கும் முக்கிய பங்களிப்பினைச் செய்கின்றது.

இதனடிப்படையில், வேகமாக வளர்ந்து வரும் தெற்காசிய நாடுகளை அன்றியுள்ளதனால் இலங்கைக்கு அது தந்திரோபாய பொருளாதார அணுகூலங்களை வழங்குகின்றது. அத்தோடு விசேடமான முறையில் இலங்கையின் பூகோள அமையம், மற்றும் பிரதான கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் தெற்காசியா, தூர கிழக்கு மற்றும் ஐரோப்பா, அமெரிக்காவுடன் பசிபிக்கை இணைக்கும் மார்க்கம் உப பிராந்தியதில் உள்ள நாடுகளுக்கும் வெகுவாக நன்மை பயக்கும் இலகுபடுத்தலை அதிகரிக்கச் செய்தல் மற்றும் வியாபாரத்தில் உள்ள தடைகளை நீக்குதல் முறைகளைக் கொண்ட அமுலில் உள்ள வரிச் சட்ட மறுசீரமைப்பானது வியாபாரதிற்கான சிறந்த சூழலை வழங்கும்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் ஆலோனையுடன் முதலீடுகளுக்கான புதிய ஊக்குவிப்பு முறை ஒன்று வரையப்பட்டு வருகின்றது. கொழும்பு ஹில்டன், லங்கா ஆஸ்பத்திரி, கயாத்ரீ ஜென்ஸி ஹோட்டல் போன்ற தந்திரோபாய மற்ற வியாபரங்களை விற்பனை செய்தல் முதலீட்டுக்கான் சந்தர்ப்பத்தை வர வழைக்கும். சிறிலங்கன் விமான சேவை - மாறுபட்ட பாதை வலைப் பின்னல்களைத் கொண்ட முதிர்ச்சியடைந்த விமான முகாமைத்துவ சேவை முறையைத் தன்னகத்தே கொண்ட இச் சேவை முதலீட்டு இணப்பை எதிர்பார்த்திருக்கின்றது. 13 வருட கட்டாய கல்வி மூலம், இரு தசாப்தங்களாக அதி கூடிய மனிதவள அபிவிருத்தி சுட்டியில், இலங்கை பிராந்தியத்தில் அதி கூடிய புள்ளிகளை பெற்றுள்ளது. இளைஞர் கல்வி அறிவில் பிராந்திய சராசரி 83 % இருந்தது. ஆனால் உலக வங்கியினால் ஊர்ஜிதப்படுத்தப்பட்டவாறு இலங்கையின் கல்வி அறிவு 98% ஆகும்.

பிராந்தியத்தில ஏனையவர்களுடன் மாறுபட்டு ஈடுபடக்கூடிய வகையில் தெற்காசியாவின் பூகோள - பொருளாதார மத்திய நிலையமாக இலங்கையை மாற்றுவதற்கு இது உதவும். அது முழு தெற்காசியாவினதும் எதிர்காலத்துடன் இரண்டறக் கலந்திருக்கின்ற ஒருதூர நோக்காகும். சிறிய உள்ளூர் சந்தை, வளர்ச்சியை தக்க வைக்கப் போதாது. 8% வீத வளர்ச்சியை நிறைவு செய்ய பெருமளவிலான ஏற்றுமதிக்கு மாற வேண்டும். இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு சந்தை வழியை வளர்ச்சியடையச் செய்யும் உள்ளாந்த முறைகளிலேயே ஏற்றுமதி வளர்ச்சி தங்கியுள்ளது. வர்த்தகம் மற்றும் முதலீடுகளை விருத்தி செய்வதற்கென பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டு வரும் இருதரப்பு உடன்படிக்கைகள் மூலம் இச்செயற்பாட்டிற்குப் பெருமளவில் வசதி வழங்கப்படும்.

மேலும் நிறுவனங்களுக்கு புதிய சந்தைக்கு வழி அமைக்கவும் தற்போதுள்ள தொடர்புகளை வலுவடையச் இது உதவும். நாம் நிலையான வளர்ச்சி நோக்கி முக்கிய துறைகளில் தெற்கு ஆசியாவின் அபிவிருத்தியை வளர்ப்பதற்குப் பார்க்கிறோம். இது இந்த மாநாட்டின் தலைப்பான "பரஸ்பரம் மூலம் வளர்ச்சி" இனை ஏற்புடையதாக்கும்ஜி.

எஸ்பி +

இந்த வசதி ஐரோப்பிய சந்தைக்குச் செல்வதற்கு இலங்கைக்கு மீண்டும் போட்டி போடும் தன்மையை வழங்கும். தைக்கப்பட்ட ஆடை, இறப்பர், வாசனைத் திரவியங்கள் மற்றும் மீன் உற்பத்திகள் போன்ற பிரதான ஏற்றுமதிப் பொருட்களுக்கு பெரியளவிலான சந்தை வாய்ப்புக்களை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு இது ஊக்குவிப்புக்களை வழங்கும் ஒரு பெல்ட் ஒரு பாதை எனும் முயற்சியில் சீனாவுடன் இணைக்கும் திறந்த பொருளாதார உடன்படிக்கை இலங்கையின் உற்பத்திப் பொருட்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய வழி வகுக்கும், பாரிய இருதரப்பு உடன்படிக்கை, இந்தியாவுடனான உத்தேச பொருளாதார மற்றும் தொழில் நுட்ப கூட்டு உடன்படிக்கை (எட்கா) இரு நாடுகளுக்கிடையே இருதரப்பு உறவுகளை ஆழமாக்குவதோடு வர்த்தகத்திலான சகல தடைகளையும் அகற்றும்.

மேலும் முதலீட்டுக்கான சந்தர்ப்பங்களையும் சேவைகளையும் திறக்கும். எட்கா இவ்வருட இறுதி அளவில் கைச்சாத்திட எதிர்பார்க்கப்படுகின்றதோடு இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பினை உயர்நிலைக்கு உயர்த்தும். இது இவ் உப - பிராந்தியத்தில் பொருளாதார ஒத்துழைப்பில் பரிணாம வளர்ச்சிக்கு உதவும். இலங்கையின் கொள்கை முயற்சிகள் சந்தர்ப்ப வசமாக தென் இந்தியாவின் நிரப்பு பொருளாதாரத்தைத் தொடுகின்றது. துரிதமாக வளர்ந்து வரும் தென் இந்தியாவின் துறைமுக வலையலை இலங்கையின் துறைமுக வலைப்பின்னலுடன் இணைக்க முடியும். இது இரு நாடுகளுக்கிடையேயும் ஒன்றிணக்கப்பட்ட துறைமுகங்களுடன் கடல்வழி மற்றும் வியாபார தொடர்பினை மேலோங்கச் செய்யும்.

இலங்கையும் தென் இந்தியாவும் கைத்தொழில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா நடவடிக்கைகளில் கவர்ச்சியான முதலீட்டு சந்தர்ப்பங்களை வழங்குகின்றது. 250 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட (மொத்த இந்திய சனத்தொகையில் ஐந்தில்ஒன்று) இந்தியாவின் ஐந்து தென்மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரா பிரதேசம், தமிழ்நாடு, கேரளா மற்றும் தெலுங்கானா ஆகியன மனித வள அபிவிருத்தியில் இந்தியாவின் ஏனைய பிராந்தியங்களைத் தாண்டியுள்ளன. இவை கவர்ச்சிகரமான எழுத்தறிவு வீதம், ஆயுள் எதிர்பார்ப்பு மற்றும் வாழ்க்கைத்தரம் கொண்டுள்ளன. ஒன்றினைந்த அ. டொ $ 450 பில்லியன் ஜிடிபி கொண்ட இந்த மாநிலங்களுடன் இலங்கையின் அ. டொ 80 பில்லியன் ஜிடிபிஐயும் சேர்த்து உப பிராந்தியத்தில் அ.டொ $ 500 பில்லியன் பொருளாதாரம் உள்ளது.

நாம் சிங்கப்பூருடனும் திறந்த பொருளாதார உடன்படிக்கை ஒன்று பற்றி பேசி வருகிறோம். சிங்கப்பூர் ஏற்கனவே இந்தியாவுடன் முழுமையான பொருளாதார பங்கு உடன்படிக்கை ஒன்றைக் கொண்டுள்ளது. இது எட்காவுடன் சேர்த்து தெற்கு உபபிராந்தியத்தை ஒன்று சேர்ப்பதோடு உத்தேச இலங்கை- சிங்கப்பூர் திறந்த பொருளாதார உடன்படிக்கை சகலருக்கும் வெற்றியளிக்கும் . முக்கூற்று ஏற்பாடு ஒன்றைக் கொண்டு வரும். வெறுமனே சிங்கப்பூர்- இந்தியா- இலங்கை மாத்திரமல்ல முழு தெற்காசிய டயஸ்போராவிட்கும் வெற்றி கிடைக்கும்.