வடக்கின் ஊடகவியலாளர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று (07) பாராளுமன்றத்தில் சந்தித்தனர்.
வடக்கு மற்றும் தெற்கு ஊடகவியலாளர்களிடையே நல்லிணக்கத்தினையும் புரிந்துணர்வையும் கட்டியெழுப்புவதற்கு பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சினால் 'பனையோலையும் - எழுத்தாணியும்' இணைகின்ற நல்லிணக்கப் பயண நிகழ்சித்திட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.  

அதன் இரண்டாது நகர்வாக வடக்கின் ஊடகவியலாளர்கள் தெற்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். தெற்குக்கு விஜயம் மேற்கொண்ட அவர்கள் ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்தித்து தங்களுடைய பிரச்சனைகள் மற்றும் தற்போதை ஊடக நிலைமைகள் தொடர்பாகவும் இந்சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு தெரியப்படுத்தினர்.